1. துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எப்படி முன்னிலைப்படுத்த வேண்டும்?
உயிரைக் கடவுளாக
மதித்து, உடலைக் கோவிலாக மதித்து, உணர்வுகளை தெய்வமாக மதித்து துருவ
தியானத்தின் மூலமாகவும், ஆத்ம
சுத்தி மூலமாகவும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
மருத்துவர்
கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று, விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை
இணைக்கும் நிலையில் இரு உயிரணுக்களை கட்டாயப்படுத்தி,
ஓர்
புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல்,
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
கட்டாயப்படுத்தி நமக்குள் இணைக்க
வேண்டும்.
அருள்
ஞானிகளைப் பற்றிய உணர்வுகள், நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும். ஞானகுருவின் உபதேசங்களை நூல்கள் மூலமாக அடிக்கடி
படித்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும்,
ஞானகுருவின்
உபதேசங்களை
கேசட் மூலம் அடிக்கடி,
கேட்டு
அதைப்
பதிவாக்கி,
அறிந்துணர்ந்து
அதை நம் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.
நம்
எண்ணம், சொல், செயல் வெளிப்படும் பொழுது, அவற்றில் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
முன்னிலைப்படுத்த வேண்டும்.
நாம்
நுகரும், மற்றவர்களின்
எண்ணங்கள்,
சொல், எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக, துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியின்
உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து, அதை முன்னிலைப்படுத்த வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும்
முன்பு, அரை மணி நேரமாவது, துருவ நட்சத்திரத்தை எண்ணி, துருவ
நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி எங்க:ள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள்
அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.
உயிருடன்
இணைந்த உணர்வுகளை,
குரு
காட்டிய வழியில்,
குருவின்
துணை கொண்டு
ஒளி சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை
உணர்ந்து,
அதைக்
கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை சதா முன்னிலைப்படுத்தப்
பழகிக் கொள்ள வேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு
பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
2.
துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நமக்குள் செயல்படும்
விதம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி உணர்வுகள்
நமக்குள்
புயலென பெருகி,
நம்
உடலுக்குள்
ஜீவ
அணுக்களாகி,
மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றிவிடுகின்றது.
நமது
ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது. சிந்திக்கும்
தன்மைகளும்,
தெளிவான
நிலைகளும் நமக்குள் வருகின்றன.
கண்
கவர்ந்து பதிய வைத்த தீமைகளை, அதே கண் கொண்டு அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம். தீமைகள்
உட்புகாது தடுக்க முடிகின்றது.
அறியாது சேர்ந்த தீய, சாப, பாவ, பூர்வ ஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன. அதனால் நமக்குள்
மன வலிமை, உடல் நலம், தொழில் வளம்
பெருகுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி உணர்வுகள், நமது உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற அருள் ஞான வித்துகளாக ஊன்றப்படுகின்றது.
அதனுடைய
வளர்ச்சியில் வரும் பொழுது, அந்த அருள் உணர்வுகள் நமது உயிராத்மாவில் அணு சிசுக்களாக விளைந்து, நம்மை ஒளியின் சரீரமாக
மாற்றிக் கொண்டே இருக்கும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்
காந்தப் பாதுகாப்பு
வட்டத்திற்குள் செயல்படும் நிலை பெறுகின்றோம். மெய் பொருள் காணும் திறனும், மகிழ்ந்து வாழ்ந்திடும்
சக்தியும் பெறுகின்றோம்.