ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2014

துருவ நட்சத்திரத்தைக் கண் வழி பதிவாக்கியபின், எளிதில் அதனின் ஆற்றலைப் பெறலாம்

1. கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
யாம் கொடுக்கும் இந்த உபதேசங்களைப் பதிவு செய்யும் நினைவு, உங்களிடம் வேண்டும். இதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தீர்கள் என்றால், உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால், “இவ்வாறு செய்யலாமா?” என்றால் அந்த உணர்வு வரும். அப்புறம் மருத்துவரிடம் பொருள் செலவாகும். நாம் செய்த இந்தக் காரியமெல்லாம் போய்விடும். அடுத்தவர்களிடத்தில் வெறுப்பாகப் போய்விடும். தொழில் செய்யும் இடங்களில், தொழிலும் பாழாகிப் போய்விடும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் இதைக் கேட்கும் பொழுது, உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிக் கேட்டுணரும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்களையெல்லாம் நீக்கக் கூடிய ஒரு காற்று புகுகின்றது. தீமைகள் அகலுகின்றது. கேட்கும் பொழுது அமைதி கிடைக்கின்றது. அடுத்து, இதை வளர்த்து வருவதற்கு, நீங்கள் தியானத்தை வலுப்படுத்த வேண்டும்.

அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம், அதை மாற்றுகின்றோம், இதை மாற்றுகின்றோம் என்ற நிலைகளில் எதுவுமில்லை.

ஆனால், இதைப் பயன்படுத்தக் கூடிய பக்குவத்தைத்தான், உங்களுக்குக் கொடுக்கின்றோம். நமது வாழ்க்கையில் உடலுக்குப்பின், மனிதனானபின், பத்தாவது நிலையை அடைய வேண்டும், அதாவது ஏகாதசி விரதம்.

தியானவழிப்படி, காலையிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும், எங்கள் குழந்தைகள் நல் வழியில் நடக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் அன்பும் பண்பும் வளர்ந்திட வேண்டும். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும், என்ற இந்த உணர்வை எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு பலவிதமாக உள்ளது. எடுத்துப் போட்டீர்கள் என்றால், ருசி வந்துவிடுகின்றது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.

காரம் என்ற நிலைகளில் அடிமையாகிவிட்டால், இராவணன் – சீதாவைச் சிறைப்படித்தான். அந்தக் கோபமான உணர்ச்சிகள் அதுதான் “தசப்பிரியன்” நம் நல்ல உணர்வுகளைக் கவர்ந்து, நம் நல்ல குணங்கள் காணாமலே போய்விடும். இப்படிப்பட்ட நிலைகள் வரக்கூடாது என்றுதான் இராமாயணமே எழுதியுள்ளார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால், இதை உங்களிடம் பதிவு செய்வதெல்லாம், “ரிகார்ட்". ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடுகிறார்கள். மீண்டும் தட்டியவுடனே என்ன செய்கின்றது? இயங்குகின்றது.

அதே போன்று, நீங்கள் ஆசிரியரிடம் படிக்கின்றீர்கள். படிப்பதை, சரியாக ஒழுங்காகப் படிக்கின்றீர்கள். திரும்பவும் எண்ணும் பொழுது சீராக வருகின்றது.

ஆனால், படிக்கும் பொழுது கவனம் சிதறியிருந்தால் அது ஞாபகம் வராது. இப்பொழுது யாம் உங்களிடம் பதிவு செய்துதான் பேசுகின்றோம்.
அதை எடுக்கின்றதும், வளர்ப்பதுவும்,
தீமையை நீக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.
2. துருவ நட்சத்திரத்தைக் கண் வழி பதிவாக்கியபின், எளிதில் அதனின் ஆற்றலைப் பெறலாம்
ஏனென்றால், நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்கும்.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ, அதை கண்வழி பதிவாக்குகின்றீர்கள். அதை எண்ணியவுடன் கண் என்ன செய்யும்?

துருவ நட்சத்திரத்தை, கண் வழி பதிவாக்கி எண்ணுகின்றீர்கள் என்றால், அதைக் காற்றிலிருந்து எடுத்து உங்கள் ஆன்மாவாக மாற்றும்.

அப்படி ஆன்மாவாக மாறி சுவாசிக்கும் இந்த உணர்வுகள்,
உங்கள் உடலுக்குள் செல்லும்.
ஆக, உணர்வுகள் உணர்ச்சிகளாகி,
சக்திவாய்ந்த நிலையில் செயல்படும்.
அதாவது தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால், செம்பும் பித்தளையும் ஆவியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்திருந்தாலும் சரி, தீமை என்ற நிலைகளிலிருந்தாலும் சரி, தீமை என்ற உணர்வுகளை எடுத்து இருந்தாலும் சரி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று இதை எடுத்துவிட்டோம் என்றால், இதன் வீரியத்தைத் தணித்து, நல்ல அணுக்களாக உருவாக்கி, நல்ல சுத்தமான இரத்தமாக மாற்றிக் கொண்டுவர முடியும். இப்படி வளர்த்துக் கொண்டால், இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

தங்கத்தில் எப்படி திரவகத்தை ஊற்றி சுத்தப்படுத்துகின்றார்களோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நமக்குள் பெறவேண்டும், என்று நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாந்தமும், ஞானமும், விவேகமும்
நாம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் செய்தோம் என்றால்,
நமது உயிரிலே போய் இணைந்து,
நமக்குள் நல்ல சக்தி ஜீரணித்து,
நல்ல சத்து கிடைக்கும்.