1. மனிதனையே உருவாக்கும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கின்றது
இன்று, விஞ்ஞான அறிவு கொண்டு,
ஆதியில் மனிதன் வாழ்ந்ததையும் அவன் உடலில் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒரு மிருகம்
போன்று, நடமாடிய இடங்களையும், அதன் உணர்வுகள் பதிவானதை கம்ப்யூட்டர் சாதனத்தின் துணை
கொண்டு கண்டறிந்து, எலக்ட்ரானிக்காக மாற்றி பதிவாக்குகின்றார்கள்.
இதைப் போன்று இன்னொரு பக்கம்,
அக்காலத்தில் வாழ்ந்த மிருகங்களின் நிலைகள் எவ்வாறு? அதனுடைய குணம், பலம், என்ன என்பதை,
அதனுடைய தொடர் வரிசையில் எலெக்ட்ரானிக்காக மாற்றி, பட வரிசையாகப் பதியும்படிச் செய்கின்றனர்.
மற்றும் அந்த மிருகங்கள்
வாழ்ந்த காலத்தில் உணர்வின் இயக்கங்களை அறிந்து, அக்காலங்களில் வாழ்ந்த பகுதிகளில்
உள்ளபடி பூமியினைத் தோண்டுகின்றனர்.
முன் காலத்தில் வாழ்ந்த வலுக்கொண்ட
மிருகங்களின் எலும்புக் கூடுகள், வலுவாக இருக்கக் காரணம் என்ன? என்பது போன்ற நிலைகளை,
விஞ்ஞானத்தின் மூலம் அறிந்து கொள்கின்றனர்.
அதைச் சேமித்து,
எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி,
கம்ப்யூட்டர்களில் அலை வரிசைப்படுத்தி,
அதனுடைய வாழ்க்கையின் தரத்தையும்
அதனுடைய ரூபத்தையும் கண்டுணர்கின்றனர்
விஞ்ஞானிகள்.
இதனின் உண்மைகளை நமது குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்தினார்.
இன்று மனித உடலிலுள்ள் அணுக்களை
எடுத்து மற்ற அணுக்கருக்களில் இணைத்து, அதனையே மனிதனாக உருவாக்கும்
தன்மை கொண்டு வருகின்றனர்.
இத்தகைய விஞ்ஞானம் இப்பொழுது
பெருகிவிட்டது. ஆகவே, மனிதனின் உறுப்புகளை உருவாக்கும் நிலை வளர்ந்து, மனிதனையே உருவாக்கும்
நிலை வந்துவிட்டது.
2. விஞ்ஞான அறிவு கொண்டு ROBOT மூலம் பல வேலைகளைச் செய்கின்றனர்
இன்று விஞ்ஞான அறிவில் மனிதன்
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையில், கம்ப்யூட்டர் துணை கொண்டு நாடாக்களில் (CD) பேசி,
பதிவு செய்துவிடுகின்றார்கள்.
அந்தப் பேச்சின் பதிவின்
பிரகாரம், இப்படித்தான் இயந்திரம் இயக்க வேண்டுமென்று கட்டளையிடும் பொழுது,
எலெக்ட்ரன் என்ற நிலையில்
இயந்திரத்துடன் இணைத்து,
இத்தன மணிக்கு இது ஓடவேண்டும்,
இத்தனை மணிக்கு இது ஆகவேண்டும்,
என்று சொல்லி,
பதிவு செய்த நிலை கொண்டு
இயந்திரத்தை இயக்கும் நிலை வருகின்றது.
சொல்லாகவே சொல்லி, இயந்திரத்தை
இயக்குகின்றான். அது மட்டுமல்லாமல் ரோபோட்டுகள் எனும் இயந்திரங்களைக் கொண்டு ஆபரேஷன்களைச்
செய்கின்றனர்.
இன்றைய விஞ்ஞானக் காலத்தில்
எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு,
செயற்கைக் கோள் மூலமாகக் கட்டளைகளை அனுப்பி,
இங்குள்ள இயந்திரத்தை இயக்கி,
இங்கிருக்கும் மனிதருக்கு
ஆபரேஷன் செய்கின்றனர்.
டாக்டர்கள் ஒருவருக்குக்
கட்டியை அகற்றும் ஆபரேசன் செய்யும் பொழுது, கத்தியை வைத்துக் கிழிக்கும் பொழுது, சந்தர்ப்பத்தில்
ஏமாந்து பிறிதொரு நரம்பின் மேல்பட்டு, அதனால் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்
என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இயந்திரமோ, அதனுடைய பதிவுக்கு ஏற்றவாறு எந்த அளவுக்குப் போகவேண்டுமோ, அந்த நோயின் உணர்வுகள் இருக்கும்
வரை செல்கின்றது. அதற்கு மேல் செல்வதில்லை. அதனுடன் நிறுத்திக் கொண்டு, ஆபரேஷன் செய்கின்றது.
3. உடலுக்குப்பின் ஏன்ன ஆவோம்? என்பதை அறிய முயற்சிக்கக்கூட
இல்லை
இப்படி, விஞ்ஞான அறிவு வெகு
தூரம் முன்னேறியுள்ளது. ஆனாலும், நாம் இன்னும் அறியாமையில்தான் உழன்று கொண்டுள்ளோம்.
இன்று, விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்,
மனித உறுப்புக்களை மாற்றி அமைத்து மனிதனைக் காத்தாலும், இந்த உடலில் எந்த உணர்வை வளர்த்துக்
கொண்டோமோ அதன்வழி கொண்டுதான் இந்த உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின், இன்னொரு
உடலைப் பெறுகின்றது. இதை விஞ்ஞானத்தால் தடுக்க முடியவில்லை.
உணர்வின் இயக்கமாக இயந்திரத்தை
இயக்கக் கற்றுக் கொண்டான் விஞ்ஞானி, ஆனால், தான் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவோம்?
என்று காண முயற்சிக்கக்கூட
இல்லை.
அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்ததை
வைத்து இன்று விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். ஆனாலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளில்
ஆயிரத்தில் ஒரு மடங்குகூட விஞ்ஞானிகள் காணவில்லை.
இதுதான் இன்றைய மனிதர்களின்
உண்மையின் நிலைகள்.