ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2014

நமது உயிரின் இயக்கமே சங்கு சக்கரம்...!

1. சங்கு சக்கரதாரி விஷ்ணு (நமது உயிரின் இயக்கம்)
வேதங்கள் என்ற முறையில் எது எது எதனில் மோதுகின்றதோ, அந்த நாதங்கள் வரும். வெறுப்பு, வேதனை சலிப்பு, சங்கடம் என்ற நிலைகளை நாம் எடுத்தால், அதற்குத்தக்க
சூரியனிலிருந்து வரக்கூடிய இயக்க அணு எடுத்துக் கொண்டதை
நாம் நுகர்ந்தால், உயிரிலே பட்டு மோதி,
உணர்ச்சிக்கொப்ப (அதுதான் சங்கு)
அந்த உணர்ச்சிகள் (சக்கரம்) நம்மை இயக்குகின்றது.

அதனால், நம் உயிரை சங்கு சக்கரதாரி என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அணுவின் இயக்கங்கள் நம்முள் எவ்வாறு இயக்குகின்றது. அதற்கேற்ப உயிரில் பட்டு, உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிக்கேற்ற உமிழ்நீராக மாறும்.
                    
உதாரணமாக, ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வை வெப்பம், காந்தம், விஷம் என்ற நிலையில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்றது. கோபமான உணர்ச்சிகளை நாம் உற்றுப்பார்த்து, அதை நமக்குள் நுகர்ந்தால் காரமான சுவையாக, காரத்தின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

ஆனால், அது வாலி வலிமை மிக்கது. காரம் என்ற நிலையும், அந்தக் காரம் என்ற நிலையை இணைத்தால் இதனுடைய செயல்கள் அடிமைப்படுத்திவிடும், மாற்றிவிடும், மாறிவிடும். இவ்வளவு பெரிய தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து, நம் வாழ்க்கை எவ்வாறு நடத்த வேண்டுமென்று காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

அந்தக் கோபமான உணர்வை நுகரப்படப் போகும் பொழுது, நம் உயிரிலே பட்டபிறகு சப்தங்கள் வருகின்றது. உணர்ச்சிகள் இந்த சப்தமாகி, இதே உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றன.
அந்த உணர்வுதான் சப்தம்.
உணர்ச்சிகள் இயக்குகின்றது,
“சக்கரம்” இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் கார உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது, என்ன செய்கின்றது? கோபமாகின்றது.

ஒருவர் வேதனையான உணர்வுடன் பேசுகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம், நுகர்கின்றோம் – வாலி அந்த வேதனையான உணர்வுகள் நம் சாந்தமான குணத்தை அழிக்கின்றது. ஆக, நமக்குள் சிந்தனையற்ற நிலைகள் ஏற்பட்டு, நாம் சோர்ந்து விடுகின்றோம்.

இதுபோல நுகர்ந்தால் என்ன ஆகின்றது? சங்கு - சக்கரம் நமது உயிரின் தெளிவான நிலைகள் கொண்டு
நாம் எப்படி இயக்குகின்றோம்?
எது இயக்குகின்றது?
நாம் எங்கிருந்து வந்தோம்?
என்ற நிலையில் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு.
2. சண்டை போடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?
கார்த்திகேயா – வெளிச்சத்தில் நாம் பொருளை அறிவது போல, உயிரின் இயக்கத்தை அறிந்துகொண்டு, நாம் ஆறாவது அறிவைக் கொண்டு சீராகப் பயன்படுத்தத் தவறினால், நமது வாழ்க்கை தேய்பிறைதான்.

எத்தனையோ கோடி இன்னல்பட்டு வந்தோம். இன்று, கோபம், வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வந்தால், நாம் அதன் நிலைக்கே செல்கின்றோம். நாம் நுகர்ந்த கோபப்பட்ட உணர்வின் உணர்ச்சிகள், நம் சிறு குடலில் தாக்கப்பட்டு அந்த உணர்வு வருகின்றது.

அதாவது இயக்க அணுவாக அங்கே இருந்ததைக் கவர்ந்து, உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி, அந்தக் கோப உணர்வுகளின் உணர்ச்சிகளாக மாறி, நம்மில் கலக்கின்றது. நம் ஆகாரத்துடன் உமிழ்நீராகச் சேர்க்கப்படும் பொழுது, நமது சிறுகுடலில் உள்ள அணுக்கள் தாங்காது படபடவென்றாகின்றன.

நாம் மிளகாயை வாயில் போட்டவுடன், “ஆ” என்று அலறுகின்றோம், அது விரிவடைகின்றது. அதே விரிவடையக்கூடிய அணுக்கள் சரியாக இயக்காததனால், கார உணர்ச்சிகள் ஆகாரத்துடன் கலந்து பெருங்குடலிலே இழுக்கப்படும் பொழுது, அது இழுத்து நசுக்கும்.

அவ்வாறு இழுத்து நசுக்கப்படும் பொழுது, கார உணர்ச்சியானால், “ஆ” என்று வாய் திறந்துவிடும். படபடவென்றாகும்.

வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு பேர் குரோதமாகச் சண்டை போடுவதைப் பார்த்தால் வயிறு வலிக்கின்றது, பேதியாகின்றது என்று ஆகிவிடுகின்றது. யாரும் தவறு செய்யவில்லை என்றாலும், அது தாக்கக்கூடிய சந்தர்ப்பம்.

ஆனால், பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இதெல்லாம் நமக்குள் உணர்ந்துவிடுகின்றது. பார்த்த இந்த உணர்வுகள் கருவிழி ருக்மணி, நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றிவிடுகின்றது. இது வித்தாக மாறிய பின்னால், உயிரிலே பட்டு உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இப்பொழுது நாம் கண்ணிலே பார்த்தோம். கண்ணிலே பார்த்தவுடன், “இதுபோலப் பேசியவன் போகின்றான் பார்”, என்ற உணர்வுகள் தோன்றும். இதே உணர்வுகள் பதிவு செய்தவனப் பார்த்தாலும், அன்றைக்கும் வயிற்றில் இலேசாகக் குழப்பம் செய்துவிடும். நாம் தவறு செய்யவில்லை. பதிவு செய்த நிலைகள் நம்மைச் செயல்படுத்திவிடுகின்றது.

இவ்வாறு பலவிதமான உணர்வுகள் நம் உடலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபடியும், யாராவது நண்பர்கள் அவரைப்பற்றிப் பேசினால், மறுபடியும் செயல்படுத்திவிடுகின்றது.

இன்றைக்கு விஞ்ஞான அறிவால், பலவித ஒளி அலைகளை பலவிதமான நிலையங்களில் ஒலிபரப்புச் செய்கின்றார்கள். அதே அலைவரிசையில் வைத்தால், வானொலி, தொலைக்காட்சிகளில் என்னென்ன காட்சிகள் நிகழ்ச்சிகள் என்று பார்க்க முடிகின்றது .

இதே போன்றுதான்,
தெருவிலே சண்டை போட்டவர்களை எண்ணினால்,
அவர்களின் உணர்வை திடீரென்று எண்ணினோம் என்றால்,
அந்தக் காரமான உணர்ச்சிகள் இங்கே வந்துவிடுகின்றது.
“இவ்வாறு பேசினேன்”, என்று கொஞ்சம் சேர்வடைந்தால் போதும்.

இந்த உணர்வுகள் பையன் சொன்னபடி வரவில்லை என்றாலும், கோபம் வரும். அதே சமயம் சாமான் வாங்கினால், மறந்துவிட்டு விட்டேன் என்றாலும் கோபம் வரும்.

இவ்வாறு உணர்வு வந்துவிட்டதென்றால், பொருள்கள் இருந்தாலும் கூட, இந்தக் கோபமான உணர்வுகள் காய்கறி நறுக்கும் பொழுது கையில் நறுக்கிவிடும். குழம்பில் இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவோம். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் பார்க்கலாம்.
3. துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து, தீமைகள் புகாது தடுக்க வேண்டும்
இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் யாருமே தவறு செய்வதில்லை. நம் பதிவின் நிலை எது வருகின்றதோ, அதன்வழி வாழ்க்கையாக நம்மை வழி நடத்திச் செல்கின்றது நமது உயிர். இதையெல்லாம், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
“தீமையிலிருந்து விடுபடவேண்டும்” – “சாமி சொன்னார்” என்று, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று, இதை நீங்கள் நினைவில் எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்தீர்கள் என்றால், உங்களுக்குள் தீமைகள் புகாது சுத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் முடியும். எமது அருளாசிகள்.