ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2014

இருளான உணர்வை நுகர்ந்து, பூமிக்குள் நாம் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா?

நமது பரிணாம வளர்ச்சியில்,
உணர்வுகளின் நுகர்வால்  உடல்கள் மாறி மாறி, 
மனித உடல் பெறும் இந்த உணர்வுகள்
இம்மனித உடல் அழியும் பொழுது (நாம் இறந்தபின்) 
ஜீவன் பெற்று ஜீவ அணுக்களாக இருக்கின்றது.

அப்படி இருந்தாலும்,  ஜீவன் பெற முடியாத,  ஆனால் ஜீவன் பெற்று உடலாகும் தகுதியான அத்தனை உணர்வுகளும், உயிரணுக்களாகவோ அல்லது மாறுபட்ட நிலைகளிலோ,  இப்பூமியின் தன்மையில் பரமாத்மாவாகவும்,  சூரியனின் காந்தப் புலனில் கவரப்பட்டால், அது எடுத்துச் செல்லும் நிலைக்கும், சுழன்று கொண்டுதான் உள்ளது.

அருள் ஞானிகளின் உணர்வுகள், மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தவிரஏனைய உணர்வுகள் அனைத்தும் இருளானவைகள். அதன் செயலாக்கங்களும் இருளானவைகள்.

இவையனைத்தும் சிவன் இராத்திரி நிகழ்வுக்கும்,
மகா சிவன் இராத்திரி என்ற நிலைகளுக்கு மட்டுமே பயன்பட்டும்,
மற்றும் இம்மண்ணுலகில் உயிரணுக்கள் உடல் பெறவும்,
ஜீவராசிகளாகி,  மனிதனாகி வரும் நிலைக்குத்தான்,
இதுவரை பயன்பட்டு வந்துள்ளன.

இன்று நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், (பரிணாம வளர்ச்சி என்ற நிலையில்) மீண்டும், மீண்டும், இப்பூமியில் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா?

அப்படி சுழன்று கொண்டு, இங்கே இருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து,  அதற்குரிய உடல்களைப் பெற்றும், ந்த பூமிக்குள்ளேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா?  என்பதைச் சிந்திக்க வேண்டும்.
                                                                                            
நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது,
நமது உயிர் எலெக்ட்ரிக், 
நாம் நுகரும் உணர்வுகள்
நமது உயிரில் மோதி,
எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சி) இயங்குகின்றது. 

அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள்,  நம்முள் எலெக்ட்ரிக்,  எலெக்ட்ரானிக் என்ற நிலையில் நம் உடலை இயக்குகின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதைக் கேட்டுணரும் அன்பர்கள், தங்களது வாழ்க்கையில் தமக்குள் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட,  நமது குருநாதர் கொடுத்துள்ள
துருவ தியானம், 
ஆத்ம சுத்தி, 
இரவு தியானம் ஆகியவற்றை,
கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். எமது அருளாசிகள்.