நமது வாழ்க்கையில் பிறருடைய
கஷ்டங்களையும், வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் பிற தோஷங்களாக (பிரதோஷம்) நமக்குள்
வந்துவிடுகின்றது.
பிற தோஷத்தை எப்படிப் போக்குவது? என்றுதான் சிவன் ஆலயத்தில்
காட்டப்படுகின்றது.
நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்
என்றால், மாலை 4 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று, விளக்கு பூஜை வைத்து, அர்ச்சனை செய்து, விரதம்
இருந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்தபின், நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.
அதாவது, நான் எல்லோருக்கும்
நன்மை செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பத்தில் நோயும், கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது.
என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கின்றான். நீ போய் ஈசனிடம் சொல் என்று,
பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக,
அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
நந்தீஸ்வரன் என்றால்,
நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை
உயிரான ஈசன் உருவாக்கும்.
நம் உடலுக்குள் போனவுடன், அதே குணத்தை உருவாக்கும்.
நமக்குள், நந்தீஸ்வரன் எதுவாக
இருக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று, நந்தி
நமக்குள் சென்று, அவன் எப்படி தீமைகளை நீக்கினானோ, அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை
நீக்க வேண்டும்.
அப்படி நீக்குவதற்கு நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்? என்பதற்காக காலை
4 மணிக்கு இதை எடுத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில்
உள்ள இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப்
பெறவேண்டும் என்று,
நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குத்தான்,
இப்படி சாப்பாடு கொடுக்க வேண்டும்.