ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2014

குருநாதரிடம் யாம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது - ஞானகுரு

எமக்கு படிப்பு அதிகமில்லை.
எமக்கு பல சக்திகள் கொடுக்கின்றீர்களே,
யாம் தவறாகப் பயன்டுத்திவிட்டால், பல தொல்லைகள் வந்துவிடுமே என்று குருநாதரிடம் சொன்னோம். தொல்லைகள் செய்துவிட்டால், அந்த பாவத்தை யாம் தானே சுமக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால், பிறரை வெறுக்கும் தன்மை வந்தால்,
தவறான உணர்வுகளைப் பாய்ச்சி அவரைத் துன்புறுத்தினால்,
துன்புறுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால்,
எமது உடலில் துன்புறுத்தும் உணர்வுகள் உருவாகும்.

அப்படித் துன்புறுத்தும் அணுக்கள் உருவானால், நீங்கள் எனக்கு எத்தனை வித்தைகள் கொடுத்தாலும். எம்முள் துன்புறுத்தும் அணுக்கள் பெருகி, இந்த மனித உடலையே சீர்குலைத்துவிடும்.

இப்படி உடல் உறுப்புகள் சீர்கெட்டு, எதன் உணர்வின் தன்மை வளர்ச்சியடைகின்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, உயிர் வெளியே சென்றபின், நான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் மறு உடலை உருவாக்கிவிடும்.

ஆகவே, எம்மை அறியாது தவறுகள் வந்தாலும், எம்மைக் காத்தருளச் செய்வது உங்களுடைய பொறுப்பு என்று குருநாதரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.

இது போன்ற சில நேரங்களில், பச்சிலை ஒன்றை எமது கையில் தடவி, மின்னலைப் பார்என்று குருநாதர் கூறுவார்.

கண் கேட்டுவிடும், “யாம் பார்க்க மாட்டோம்”, என்று கூறுவோம். இதனால் இருவருக்கும் சண்டை வரும். 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாயே, நான் அருகில் இருக்கின்றேன்என்று கூறுவார்.  இப்படி, முடியாததைச் செய்யச் சொல்வார். 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாயே, செய்என்று குருநாதர் கூறுவார்.

செய்துதான் ஆகவேண்டும்,
செய்ய வைத்தும் விடுவார். 
இப்படி பல உண்மையின் உணர்வுகளை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.