ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2014

அகஸ்தியனின் குடும்பம்

1. தாய் தந்தையரின் உணர்வுகள் இணைந்தபின், அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான்
ஐந்து வயது வரப்படும் பொழுது, அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷத்தன்மையான செடிகளைப் பூசிக் கொண்டதனால் இந்த அணுக்கள் அந்த விஷத்தன்மையின் நிலைகளை அடைந்தபின், இந்த உடலை விட்டு இந்த ஆன்மாக்கள் பிரிய நேருகின்றது.

ஆனால் பிரிந்தாலும், ஐந்தே வயதான குழந்தையை அவனை யார் பாதுகாப்பது? என்ற உணர்வுடன் அந்த ஆன்மாக்கள் வெளிவருகின்றது.
அந்தப் பாசமும் பற்றும் கொண்ட
இந்த ஆன்மாகள் இரண்டும்
அகஸ்தியன் உடலுக்குள் புகுந்துவிடுகின்றது.

இவர்கள் எண்ணத்தின் செயலில் வளர்ச்சி பெற்றவர்கள். இதன் வழி கொண்டு இங்கே பாதுகாப்பான நிலைகள் வரப்படும் பொழுதுதான், வானவியல் தத்துவத்தைச் சொல்லால் சொல்லும் தன்மைகள் அகஸ்தியனுக்கு வருகின்றது.

அப்பொழுதுதுதான் துருவன் என்று, ஐந்து வயதில் துருவன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள். அந்த துருவன் வான இயல், புவி இயல் இவைகளை அறிகின்றான்.

ஆக, துருவப் பகுதியிலிருந்து நமது பூமி கவர்ந்து, கல்லும் மண்ணும் உருவான பின், உயிரில் மற்ற சக்திகள் எப்படி உருவாகுகின்றது என்றும் உணர்கின்றான்.

ஏனென்றால், இந்த விஷத்தின் தன்மை அறியும் தன்மை அகஸ்தியனுக்குள் வருகின்றது. ஒரு விஷம் எப்படி அது இயக்குகின்றது என்ற உணர்ச்சியின் தன்மை, அதாவது ஒரு விஷத்தின் இயக்கத்தால் எப்படி இந்த உணர்வுகள் இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக உணர்ந்தான் அகஸ்தியன்.

இப்படி உணர்ந்தபின், ஒவ்வொரு தாவர இனத்தின்
அதனுடைய குணம்,
அதனுடைய மணம்,
அதனுடைய உணர்ச்சி,
இந்த மூன்று  நிலைகளில் அவன் உணரும் பருவம் வரப்படும் பொழுது, இந்த உணர்வின் எண்ணத்தைத் தனக்குள் கொண்டு துருவத்தை அகஸ்தியன் உற்று நோக்குகின்றான். துருவப் பகுதியிலிருந்து நமது பூமிக்கு எப்படி சக்திகள் வருகின்றது? என்ற உணர்வினையும் பார்க்கின்றான்.

ஒவ்வொரு தாவர இனத்தின் அந்தக் குணத்தின் அதனுடைய வளர்ச்சியில் உணவான புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இது உணவாக உட்கொண்ட மனிதனாக வந்தபின், இந்தக் குணத்தின் இந்த உணர்வின் தன்மையை அவன் எடுத்து நுகர்ந்து துருவத்தை நுகர்ந்து, இந்த உணர்வினைத் தனக்குள் பெருக்குகின்றான்.

இதைப் பெருக்குவதற்கு, இதைத் தாங்கும் சக்தியாக அவர்கள் அன்னை தந்தையின் உணர்வுகள் உடல்கள் இங்கே அந்த உயிரான்மாக்கள் இருக்கப்படும் பொழுது, இந்த வலிமையும் சிந்தனையும் அகஸ்தியனுக்கு வருகின்றது.

தாய் தந்தையின் உயிரான்மாக்கள் அகஸ்தியன் உடலுக்குள் சென்றபின், துருவத்தின் தன்மையை அறியும் நிலை வருகின்றது. அதனால்தான் அந்தக் குழந்தைக்கு மிக வீரிய சக்தி கிடைக்கின்றது.

பின் அதனின் உணர்வைத் தனக்குள் இருந்த தாவர இனங்களின் சத்தை நுகர்ந்து நுகர்ந்து அதனின் வலிமையைத் துருவத்திலிருந்து வருவதைத் தனக்குள் கவர்ந்து எடுத்துப் பழகினாலும் அது அகஸ்தியனுக்குள் உருப்பெறும் சக்தி பெருகுகின்றது.
2. சத்தியவான் சாவித்திரி
அகஸ்தியன் 16 வயதிலே திருமணம் ஆகும் பொழுது அருந்ததி என்ற தன் மனைவிக்கு தான் பெற்ற சக்தி எல்லாம் உபதேசிக்கின்றார். இந்த உணர்வின் சக்தியை நுகரும்படி செய்கின்றார். தன் மனைவிக்குக் கொடுக்கின்றார்.

சிவ சக்தியாகத்தான் உயிர் ஆகின்றது. அதே போல தான் பெற்ற சக்தியை மனைவிக்குக் கொடுக்க வேண்டும் என்று அகஸ்தியரும், மனைவி தான் பெற்ற சக்தியை (கணவனால் பெற்ற அந்தச் சக்தியை) தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ணுகின்றார்.

இவ்வாறு, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் உயர்ந்த சக்திகள் பெறவேண்டும் என்று ஏங்கி எடுக்கும் இந்த உணர்வுகள் அவர்களுக்குள் கருவாகின்றது.

கணவனும் மனைவியும் இந்த உணர்வுகளிலே துருவத்தை நோக்கி இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பெற்று, வானவியல் உணர்வினையே மேற்கொண்டு பார்க்கும் நிலை வருகின்றது.

அப்பொழுது நட்சத்திரங்களின் தன்மையைக் கவருகின்றார்கள். அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள். அது மற்ற கோள்களில் கலந்து வருவதை, சூரியன் பெறுவதையும் இரண்டு பேருமே நுகருகின்றார்கள்.

அப்படிப்பட்ட இந்த உணர்வுகள்தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்து, பின் அந்த உணர்வின் தன்மையைத் தங்களுக்குள் பெருக்கி அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்கள்.

ஆகவே, இரண்டு உயிர்களும் இரண்டு பேருமே சேர்க்கப்படும் பொழுதுதான் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, கணவன் மனைவியை மதித்து நடப்பதும், மனைவி கணவனை மதித்து நடப்பதும், இந்த இரு உணர்வுகள்தான் சத்தியவான் சாவித்திரி.

இந்த உயிர் சத்தியமாகின்றது.
தன்னுள் இணைந்து கொண்ட சக்தி
உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
இதுதான் சத்தியவான் சாவித்திரி,
எமனிடமிருந்து கணவனை மீட்டினாள்.
3. அகஸ்தியனோடு சேர்ந்து ஒளி சரீரம் பெற்றவர்கள் ஒரு குடும்பம் – சப்தரிஷி மண்டலம்
ஆகவே, இந்த உணர்வின் நிலைகள் ஒன்றுக்கொன்று இணைத்து இன்னொரு உடலில் சேராதபடி இந்த உணர்வுகளின் நிலை ஒன்றாகி இணைந்து, எந்தத் துருவத்தை நுகர்ந்தார்களோ கூர்மையாக அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு, இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த எல்லையை அடைந்தார்கள்.

நம் பூமிக்கு வரும் உணர்வையே ஒளியாக மாற்றி ஒளிக்கதிர்களாக இருக்கின்றார்கள். இது ஓர் குடும்பம். ஆகவே, அகஸ்தியன் தாய் தந்தையர் உடல்களில் இருந்தாலும் இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வந்தபின், அந்த உணர்வின் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்கள்.

அந்த ஈர்ப்புக்குள் சென்றபின் அன்னை தந்தையின் அரவணைப்பில் இருந்து கொண்டு இதைப் போல சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

ஆகவே, அன்னை தந்தையின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையவேண்டும். அந்த உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னார்கள்.

அந்தக் கட்டமைப்பில்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக
வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் நம் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நிலைகளில் உண்டு. டெலஸ்கோப் வைத்தாலும், ஒரு சில தான் தெரியும். அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்கள் பலர்.

ஆகவே, அகஸ்தியனைப் போன்று நாமும் குடும்பத்துடன் அழியா ஒளி சரீரம் பெறுவோம். பிறவியில்லா நிலை என்ற ஏகாந்த நிலையை அடைவோம்.