1. அகஸ்தியன்
பெற்ற அதிசய சக்திகளை அவன் இன மக்களும் பெறுகின்றனர்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுவாசிகளான புலஸ்தியர்கள் (அகஸ்தியனின்
தாய் தந்தையர்) மிருகங்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற சூரியன் கடவுளாக வருகின்றான்
என்று வணங்கியவர்கள்.
ஆக, அது விஷத்தன்மையின் தன்மையை (ultra violet) உமிழ்த்திக் கொண்டிருக்கும்
அந்தச் சக்தியை அவர்களால் பார்க்க முடியவில்லை. அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்தபின்,
வானை நோக்கிப் படுத்திருக்கின்றான்.
ஆனால், இந்தக் குழந்தையால் பார்க்க முடிகின்றது.
சூரியனின் அதிசயங்களைப் பார்க்கின்றது.
உணர்வுகளை நுகர்கின்றது.
அதே போன்று அந்தக் குழந்தையின்
அருகிலே வரும் எந்த விஷ ஜெந்தும், மிருகங்களும் அஞ்சி நிற்கின்றது.
இதைக் கண்ணுற்ற அகஸ்தியனின் தாயும் தந்தையும், “இது கடவுளின் அவதாரம்” என்ற
நிலைகளில் அந்தக் குழந்தையைப் போற்றித் துதிக்கின்றார்கள். அவர்களுடன் வாழ்ந்து வந்த,
மற்ற காட்டுவாசி மக்களும் இந்தக் குழந்தையைப் பார்த்து அதிசயப்படுகின்றார்கள்.
ஏனென்றால், அக்காலங்களில் மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள மனிதனுக்கு
ஒரு யுக்தி உண்டு. தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தான் கண்டுபிடித்த உணர்வுகளைக்
கொடுப்பார்கள். மற்றவர்களுக்குக் காட்ட மாட்டார்கள். அன்றும் இது உண்டு, இன்றும் இது
உண்டு.
ஆகவே, அந்தக் குடும்பத்தில்
மட்டும் இந்த நிலைகள் பெற்றபின், அங்கே சுற்றியுள்ள வட்டாரங்கள்
அனைத்தும் அகஸ்தியனுடைய அதிசயங்களைப் பார்க்கின்றனர். இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
இருந்தாலும், அந்த வட்டாரங்களில் இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளியிடப்படும் பொழுது,
உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் அதைத் தெரிந்திடும்
அறிவாக விளைகின்றது.
அகஸ்தியனுக்குள் விளைந்த அலைகளை
கூர்மையாக உற்றுப்
பார்க்கப்படும் போது,
அகஸ்தியன் காணும் அதிசயங்கள் மற்றவர்களுக்கும்
உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை பெறுகின்றது.
இதுதான் அன்றைய நிலைகள்.
2. அகஸ்தியன்
பெற்ற அதிசய சக்திகளை நீங்களும் பெறமுடியும்
அந்த உணர்வின் அலைகள் இன்றும் நம் பூமியிலே அது உண்டு. நான் சுற்றுப்யணம் செய்யும்
பொழுது, அகஸ்தியன் வாழ்ந்த அந்த இடங்களுக்கெல்லாம் பத்து வருடம் காடு மேடெல்லாம் அலைந்து,
பெரும்பகுதி அதைத் தொடர்ந்து
அகஸ்தியர் எந்தப் பகுதிக்குச் சென்றாரோ,
அந்தப் பகுதிக்கெல்லாம்
என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
நமது குருநாதர் பதித்த அந்த உணர்வை அங்கங்கு சென்று அதைப் பதிவாக்கியபின், எது
உண்மை எது பொய் என்ற நிலையை அறியும் பருவத்தைக் கொடுத்தார்.
அகஸ்தியன் வெளிப்படுத்திய ஆற்றல் மிக்க சக்திகளை, இன்று நாம் எல்லோரும் அதை
நுகர முடியும். அதை தியான வழியில் உள்ள அனைவரும் நுகர்வதற்குத்தான் இந்த உபதேசத்தைக்
கொடுக்கின்றோம்.
இப்படி, சிறுகச் சிறுக அகஸ்தியனுடைய வளர்ச்சியில் அந்த மிருகங்கள் இவனைக் கண்டால்
அஞ்சி ஓடும் நிலைகள் தான் வருகிறது. எந்த விஷ ஜெந்துக்களும், பூச்சிகளும் எடுத்துக்
கொண்டாலும் இவனைக் கண்டாலே ஓடிவிடுகின்றது.
அந்தப் பூச்சிகள் இவன் மேல் பட்டாலே மடிந்து விடுகின்றது. சில கொசு போன்ற நிலைகளும்,
சில எரிபூச்சிகள் எல்லாம் உண்டு. இவையெல்லாம் இவன் மேல் பட்டாலே அது மடிந்து விடுகின்றது.
இன்று இத்தகைய செயல்களைச் செய்யும் தாவர இனங்களும் உண்டு. சில தாவர இனங்களின்
மேல் சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும்.
இதையெல்லாம் யாம் தெளிவாகத் தெரிந்து கொண்டபின் தான் உங்களுக்கு இந்த உபதேசம்.
பல காலங்கள், பல வருடங்கள் கழித்து, சிறுகச் சிறுக உங்களுக்குச் சொல்வது.
3. பிறர்
தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை வளர்த்தால், தீமையை நீக்கிடும் சக்தி உங்களுக்குக்
கிடைக்கின்றது
அதுதான் ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம். இப்பொழுது யாம் சொல்வதெல்லாம் நீங்கள்
கேட்டால் ஓம் நமச்சிவாய. திருப்பி அந்த உணர்வின் தன்மை அதிகமாக வளர்த்துக் கொண்டால்
இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம். பிறருடைய தீமையைப் போக்கவும், உங்களால் முடியும்.
சாமி மட்டும் கெட்டிக்காரர் இல்லை. குருநாதர்
கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன். அதை உங்களுக்குள் இதே உணர்வை வளர்க்கச்
சொல்கின்றோம்.
அதை வளர்த்துவிட்டால், நீங்களும் அதைச் செய்யலாம். ஏனென்றால், பிறர் தீமையிலிருந்து
விடுபடவேண்டும் என்று உணர்வினை நீங்கள் வளர்த்தால், உங்களுக்குள் தீமையை நீக்கிடும்
சக்தி வளர்கின்றது.
பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால், அந்தத் தீமை நமக்குள்
உள்ள நல்ல அணுக்களைக் கொல்கின்றது. தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளைகின்றது.
பிறருக்குத் தீமை செய்பவனைப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தால்,
தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.
தீமைகளை வேடிக்கை பார்த்தாலே, அந்த
தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் பொழுது, அதற்கு ஆகாரம் தேவை.
அந்த உணர்வை நுகரும் பொழுது
உயிரில் பட்டு அந்த எண்ணங்கள் வந்து
அதே செயலை நாமும் செய்வோம்.
இது இயற்கையின் சில நியதி.
இவ்வாறு பெற்ற அந்த அகஸ்தியன், தான்
தனது வளர்ச்சியில் வானுலக ஆற்றலையும் அறியும் தன்மை வருகின்றது. பின், இவன் இடும் மூச்சலைகள்
அகஸ்தியனை உற்றுப் பார்க்கும் அக்கால
மக்கள் அனைவருக்கும் அது கிடைக்கின்றது.