நாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்தவர்கள். மனிதனானபின்,
தீமையை அகற்றிய துருவ மகரிஷியின் உணர்வை நீங்கள் பெற, அந்தத் தகுதியைப் பெறும் நிலைகளுக்குதான்,
இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
எதிர்நிலைகள் உங்களை எப்படித் திருப்புகின்றது?
இதிலிருந்து நீங்கள்
எப்படி விடுபட வேண்டும்? என்ற
மெய்யுணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
நீங்கள் பள்ளியில் பாடங்களைப் படித்தாலும், பயிற்சியின் நிலைகளுக்கு
(PRACTICAL) என்று, தனியாகக் கொடுப்பார்கள்.
இயந்திரத்தைச் செய்யக் கற்றுக் கொள்வார்கள். இயந்திரத்தை
இயக்கும் நிலைகளுக்கும் கொண்டு வருவார்கள். எல்லாம் கற்றுக்கொள்வோம்.
இயந்திரம் தவறாகிவிட்டால், அது என்னென்ன வழிகளில் தவறாகும்?
இதனுடைய தவறுகளை
எப்படிச் சரி பண்ணுவது?
என்று விஞ்ஞானிகள் கொடுப்பார்கள்.
பாடநூல்கள் கொண்டு ஒரு இயந்திரத்தைச் செய்வதற்காக நீங்கள்
செயல்பட்டாலும் அதனுடைய செயலாக்கங்கள் வரப்படும்போது, இதிலே தவறுகள் வந்துவிடும்.
அப்படித் தவறுகள் இழைக்கப்படும்போது,
தவறுகளை எப்படி நீக்குவது?
என்ற நிலையை அறியாவிட்டால்
உருவாக்கினாலும் பயன் இல்லை.
அதைப் போன்று, உங்களுக்குள் சீரும் சிறப்பும் பெறக்கூடிய
தகுதி இருந்தாலும்,
உங்கள் வாழ்க்கையில் இடைமறித்துத் தவறாகிவிட்டால்,
அந்தத் தவறு எப்படி இயக்குகிறது?
என்று அந்த உணர்வுகள் தெரியவரும்.
சாமி சொன்னார். அவர் பெறுவார். நாம் எப்படிப் பெறமுடியும்?
என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் ஒவ்வொன்றாகப் பதிவுசெய்து வைத்திருக்கின்றோம்.
உயர்ந்த ஞானத்தைப் பெற்றாலும், அவ்வப்பொழுது,
இடைமறித்துத் தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்த
அந்த அருள்ஞானத்தை நீங்கள் பெருக்குதல் வேண்டும். எமது அருளாசிகள்.