ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2013

அருளாடுபவர்களின் நிலைகள்

1. அருளாடுபவர்களின் நிலைகள்
குடும்பப்பற்று இருந்து, குலதெய்வங்களை வணங்குகின்றோம். குலதெய்வங்கள் என்றால் நம் மூதாதையர்கள்தான். இதற்காக வேறு காவல் தெய்வம் என்று வைத்திருப்பார்கள்.

அதற்கு ஆடு, கோழி எல்லாம் கொடுத்து வெட்டிச் சாப்பிடுவார்கள். அதைக் கொடுத்து விடுவார்கள். சாப்பிடவில்லை என்றாலும், அதற்காக நைவேத்தியம் செய்கிறேன் என்று கொடுப்பார்கள்.

இதன் வழியில் வரக்கூடிய அத்தனை பேர்களுமே இரக்கமற்று இருப்பார்கள். ஒரு தவறு செய்தாலும், இரக்கம் என்பது இவர்களுக்கு வரவே வராது.

எப்படி மற்றொன்றைக் கொன்று, ஆண்டவனுக்காக இதை அர்ப்பணித்துச் செய்கிறோம் என்றால்,
நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை
முதலில் கொல்கிறோம் என்று அர்த்தம்.
அப்புறம், நமக்குள் நல்லது எப்படி விளையும்?

நமக்குள். நாம் எதை எண்ணுகிறோமோ, அது நமக்குள் இருக்கும் நல்லதை, கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டே வரும். தீமை செய்யும் எண்ணங்களே நமக்குள் அதிகமாக விளையும். இது கொடூர நோயாக்கும்.

இதன் உணர்வுகளில், குடும்பத்தில் அண்ணன் தம்பிக்குள் பகைமை வந்திருந்தால், எனக்கு இப்படித் துரோகம் செய்தானே பாவி என்று சாபமிடுவார்கள்.
2. “அன்றைக்கும் தொல்லை கொடுத்தான், இன்றைக்கும் கொடுக்கிறான்” என்று சொல்வார்கள்
அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆன்மா வெளியில் போகும். யாரை நினைத்ததோ, அந்த நிலையில் அங்கு சென்று அருளாடும். இப்படி, இந்தக் குடும்பத்திற்குள் குலதெய்வங்கள் ஆடுவதும், பாடுவதும் இதுதான்.

ஆக நாம் மீண்டும் அந்த வம்ச வழியில் வந்து, குலதெய்வம் என்பது, அந்தப் பரம்பரையில் வரப்படும்போது, இதில் நான்கு பிரிவானால் இந்த வகையில் இவர்கள் சார்புடைய உடலுக்குள் போகும்.

எனக்கு அன்றைக்கும் தொல்லை கொடுத்தான்.
இன்றைக்கும் கொடுக்கிறான் என்று
இப்படியும் குலதெய்வம் இறந்தபின்
ஒருவொருக்கொருவர் சாபம் கொடுக்கும்.
இதுவெல்லாம் நமக்குள் வளர்கின்ற முறைகளும், வளர்த்துக் கொண்ட நிலைகளில்தான் வேலை செய்யும்.
3. சாப உணர்வுகள், கருவில் வளரும் குழந்தைகளைப் பாதிக்கும்
இப்படி ஒருவர் உடலில் ஒரு செயல்படும்போது, கருவில் வளரும் சிசுக்களுக்கும் இதே மாதிரி சாப வினைகளைப்பற்றி பேசுவார்கள். அந்த உணர்வு அந்தக் கருவில் வளரும் சிசுக்களுக்கும் படரும்.

அவர்கள் பேசும் சாப உணர்வுகள் அந்தக் கருவில் விளைந்துவிட்டது என்றால்., அந்தச் சாபத்தில் கை கால் முடங்கவேண்டும், குடும்பம் இப்படி ஆகவேண்டும் என்றால் அந்தக் குழந்தைக்கும் அப்படியே கை கால் முடங்கும்.

இதைப்போல சார்புடையோர் நிலை இல்லாமல் போனாலும், வெளியில் இருந்து ஒருவர் சாபமிட்டாலும், கர்ப்பிணியாக இருக்கும் ஒருவர் பார்த்தால் போதும் அந்தச் சாபத்தைக் கேட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் அந்த உணர்வு எல்லாம் ரிகார்டு ஆகிவிடும்.

நாம் எப்படி செடிகளுக்கு உரமிட்டால்,
அது இணைந்து விட்டது என்றால்
செடியின் சத்தை எடுத்து அது விளைந்துவிடும்.
அதேமாதிரி கருவுற்றிருக்கும்போது, ஒருவரை உற்றுப் பார்த்து, சாபமிடுவதையோ, வேதனைப்படுவதையோ, நோய்வாய்ப்பட்ட நோயாளியையோ அதிகமாகப் பார்த்து விட்டது என்றால் அந்த உணர்வெல்லாம் கருவில் வளரும் குழந்தைக்கு வரும். அந்தக் குழந்தை தப்புப் பண்ணவில்லை.
4. அந்தக் கருவில் குழந்தையாக உருப்பெறுவது எது?
னென்றால், அந்தக் குழந்தையாக வருவதெல்லாம் யார்?

நம் வீட்டில் ஆட்டை வளர்த்திருப்போம். மாட்டை வளர்த்திருப்போம் அது இறந்திருக்கும். அப்பொழுது ஆடு வளர்த்தோர் நிலைக்கு, அதை அறுத்தார்கள் என்றால் அதை வளர்த்தோர் உடலில் வந்துவிடும்

அந்த ஆட்டின் உயிரான்மா, அந்த ஆட்டை யார் வளர்த்தார்களோ அந்த உடலுக்குள் வந்ததும், மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நாம் கோழியோ மற்றதையோ வளர்க்கின்றோம்.. ஒரு கோழிக்கு, இரண்டு நாள் சாப்பாடு கொடுத்துப் பாருங்கள். வந்தவுடன் கேவிக்கொண்டே பின்னாடியே வரும். இந்த நிலைகள் பதிவாகும்.

அது செத்தாலும், அல்லது இவர்களே கொன்று சாப்பிட்டாலும் சரி, கொன்ற உடலில் வரும். கோழி மனிதனாகப் பிறக்கும் தன்மையாக, கோழியின் உயிரான்மா உருவாகும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.