ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 19, 2016

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைக் கரைக்கும் முறை – விநாயகர் தத்துவத்தின் மூலம்

நட்சத்திரமாகி சூரியனான பின் அதன் வளர்ச்சியில் ஒரு பிரபஞ்சமாகி வளர்ந்தாலும் இதற்குள் உயிரணு உண்டாகி ஜீவ அணுக்களை மாற்றி மனிதனாக உருவான பின் உணர்வை ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்திற்கு வரக்கூடிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.

அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலிருக்கக்கூடிய சப்தரிஷி மண்டலம் ஆறாவது அறிவை ஏழாவது அறிவாக மாற்றியவர்கள். அதன் வழி நாம் இணைந்தால் மனிதனின் கடைசி எல்லை அங்கே இருக்கின்றது.

ஆகவே, பிறவியில்லா நிலை அடையலாம். நாம் எளிதில் செல்ல முடியும் எளிதில் செல்லும் மார்க்கத்தைத்தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று அதை வேறு வேறு ஆசையைக் காட்டி உடலின் இச்சைக்கே மாற்றிவிட்டார்கள். மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்கச் செய்துவிட்டனர்.

இழந்த நிலைகளிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால் இன்று நான் (ஞானகுரு) சொல்வது - நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் போல் இருக்கிறது. அந்த அளவிற்கு இன்று எதை எதையோ பிதற்றுகின்றார் என்ற நிலை வருகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட சாங்கிய சாஸ்திரங்களிலிருந்து விடுபட்டால் நாளைக்குப் பாவம் வந்து சேர்ந்து விடுமோ என்று தப்பையே மீண்டும் செய்து தவறின் வழியிலேயே செல்லும் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வந்துவிட்டது.

இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும்.

ஏனென்றால், இப்பொழுது வந்து கொண்டிருக்கும் விஞ்ஞானத் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்றால் இன்றிலிருந்து அருள் மகரிஷிகளின் உணர்வுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

குடும்பத்திலோ, அல்லது நண்பர் என்ற நிலைகளிலோ, உடலை விட்டு எந்த ஆன்மா பிரிந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து பெரு வீடு பெரு நிலை அடையச் செய்ய வேண்டும்.

பெரு வீடு என்றால் என்றுமே அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும். பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

நம்முடன் கலந்த உணர்வின் தன்மை அங்கே சென்றபின் நம்முடன் பழகிய உறவின் இந்த உணர்வுகள் நாம் எண்ணும் பொழுது அங்கே தொடர்பு கொள்கிறது.

நமக்குள் பழகிய மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வுகள் தான் அங்கே நிலைத்திருக்கும். இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எண்ணினோம் என்றால் சப்தரிஷிகள் உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் அகற்றும் வல்லமை பெறுகின்றோம்.

ஆகவே, அவர்கள முன் செலுத்தினால் பின் அதனின் தொடர் வரிசையில் நாம் செல்ல முடியும்.

நம்முடன் பழகிய நண்பர்கள் அவர்களுடன் எத்தனையோ வகையில் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் வெறுப்பு இருக்கும் ஆனால், நண்பர்கள் என்ற நிலையில் பாசம் இருக்கும்.

பாசத்தின் நிலைகளில் வரும் பொழுது அவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் அவரின் நினைவு அதிகரித்துவிட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்துவிட்டால், அவர் தன் குடும்பத்தில் எப்படிச் சிக்கல் பட்டாரோ அவருடன் பழகிய நண்பர்களின் குடும்பங்களில் பல இன்னல்கள் வரும் பார்க்கலாம். அவர் பட்ட தொல்லைகள் இங்கே வந்து மறைமுகமாக இயக்கும்.

அந்த ஆன்மா இங்கே வந்துவிடும். அவர் உணர்வை இந்த உடலில் வளர்த்துவிடும். அதுவும் மனிதனாகப் பிறக்காது, நம்மையும் மனிதனாக ஆகவிடாது. உணர்வின் ஆசைகளே இங்கே வருகின்றது.

அத்தகைய நண்பர்கள் இருப்பினும் நாம் எப்படித் தியானிக்க வேண்டும்?

எங்களுடன் பழகிய நண்பரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்ற உணர்வுடன் விண்ணை நோக்கி உந்தித் தள்ளுதல் வேண்டும்.  

அவர் உணர்வு இங்கே உண்டு. அந்த வலு பெற்றிருப்பதால் இடைமறித்து அந்த ஆன்மாவை அங்கே விண் செலுத்த வேண்டும்.

அங்கே செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது. கரைந்ததை காலை சூரிய உதயத்தின் தன்மை கொண்டு இதைக் கவர்ந்து சென்றுவிடும்.

ஏனென்றால் அங்கே மனிதர்கள் இல்லை. விஷத்தைப் பிரிக்கும் நிலைதான் உண்டு. எது வெளிப்பட்டதோ அந்தக் காந்தப் புலன் அறிவு கவர்ந்து அது ஈர்த்துத் தனக்காகச் செல்லும் பாதையில் “ஓசான் திரையுடன்” இணைத்து விடுகின்றது.

ஆகவே, மீண்டும் இந்தப் பூமியின் தன்மை சுழற்சியாகும் பொழுது தனக்குத் தேவைப்பட்ட அளவே இங்கே கொண்டு வருகின்றது. அதைச் சுத்தப்படுத்துகின்றது.

மீண்டும் இது பல கலவை கொண்டு பலவற்றுடன் கலந்துதான் இங்கே வர வேண்டும். மனித உணர்வின் உணர்ச்சிகள் இங்கே இழந்துவிடும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இவ்வாறு நாம் விண் செலுத்தி நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். இந்தப் பரமாத்மாவும் சுத்தமைடைகிறது.

உயிர் நம்மை இயக்கும்போது நான் ஆகிறது – “நான்” என்ற சொல்லுக்கே “உயிர்” தான் மூலம்

இந்த மனிதனின் வாழ்க்கையில் சங்கடம், சலிப்பு, கோபம், வேதனை, வெறுப்பு, குரோதம், பழி தீர்த்தல், பழி வாங்குதல் இதைப் போன்ற உணர்வுகள் வந்துவிட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்துவிடுகின்றது.

உயிரின் உணர்வினுடைய கடைசி தொக்குதல் உண்டு. ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ இதைப் போல இந்த உயிரின் தன்மை முழுமையும் இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் முழுமையாகி அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டு அந்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே, நாம் மனிதனானோம் மீண்டும் தேய்பிறை ஆகக்கூடாது.

ஒளியின் உணர்வை அறிந்து கொண்டபின் அருளொளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை -  பிறவியில்லாத நிலைகள் அடைவதே இந்த உடலின் முழுமை.

உயிரால் வளர்க்கப்பட்டது..., நான் யார்..,? உயிரால் வளர்க்கப்பட்ட மனிதனின் உடல்.

உயிருடன் ஒன்றியிருக்கும் பொழுது நான் என்று வருகின்றது. “நான் நானாக வேண்டும்”.

உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்”.

உயிர் நம்மை இயக்கும் பொழுது நான் ஆகின்றது. “நான்” என்ற சொல்லுக்கே உயிரே மூலமாகின்றது.

இதற்குள் அந்த உணர்வின் ஒளி எவ்வாறோ அதன் ஒளியின் தன்மையாக நமக்குள்: வளர்த்தல் வேண்டும். அவனுடன் அவனாகி அவனாகவே (ஒளியாக) நாம் ஆவோம்.

இதைப் போன்று உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் அடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் அடைவோம். 

April 18, 2016

நாம் அணியும் ஆடைகளுக்குள் சேர்க்கப்பட்ட செயற்கைச் சாயங்களினால் தீமைகளே உருவாகின்றது

இன்று நாம் எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவால் நாம் உடுத்தும் ஆடைகளில் ஈர்க்கும் காந்தம் உண்டு. ஈர்த்து வைத்துத் தான் நூலும் பஞ்சும் உருவானது.

ஆனால், இதற்குள் நாம் சேர்க்கும் உணர்வை ஏற்றுக் கொண்டால் தான் அந்த துணியில் கலரே (நிறம்) வரும். ஆக, ஏற்றுக் கொண்டு வந்தபின் அந்தச் சாயத்திலுள்ள நஞ்சின் தன்மை ஆவியாக மாறுகின்றது. அதைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது.

எந்த நஞ்சு கொண்ட விஷத்தின் துகள்களைத் துணியில் போட்டிருக்கின்றோமோ ஆடையாக அணிந்திருக்கின்றோமோ இதை நம் அருகில் ஆன்மாவாகக் கொண்டு வருகின்றது.

ஒவ்வொரு ஆடையும் அணியும் பொழுது நீங்கள் பார்க்கலாம். தூய்மை கொண்ட நிலையில் ஒன்றும் கலக்காத நிலையில் இருந்தால் அதை நீங்கள் நுகரும் பொழுது மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிவப்பான நிறம் கொண்ட ஆடையை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது அதே உணர்வின் தன்மை உங்களை அறியாமலே உணர்ச்சியின் வேகங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

நீல நிறம் கொண்ட ஆடையை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது எதை எடுத்தாலும் அந்த வேதனை உணர்வுகள் தோன்றும். ஆக, வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்தும் உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.

ஏனென்றால் நாம் உடுத்தும் ஆடைக்குள் இத்தனை உண்டு. ஏனென்றால், மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இந்த நிலைகள் செயல்படுகின்றது.

இந்த இயற்கையின் உண்மை நிலைகளை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணரும்படி செய்தார். இயற்கை எப்படி இயங்குகின்றது? சூரியன் காந்தப்புலன் எப்படிக் கவர்ந்தது?

அன்று வாழ்ந்த வான்மீகி எதைக் கண்டான்? அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை சூரியனின் இயக்கங்கள் - சூரியன் ஒரு சத்தைக் கவர்ந்தால் அது சீதா. அதை மனிதன் நுகரப்படும் பொழுது சீதாராமா எண்ணங்களாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகளைத் தூண்டுவதும் அது பதிவானபின் எண்ணமாவதும் எண்ணத்தைக் கொண்டு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை ஒவ்வொன்றும் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை வான்மீகி அவன் கண்டுணர்ந்தான்.

சூரியன் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையில் தெரிந்து கொள்வதற்கே உனக்கு இதை உணர்த்துகிறேன் என்றார் குருநாதர்.

நீ ஆடை அணிகின்றாய் அவன் சாயத்தை விஞ்ஞான அறிவால் இடுகின்றான். உன்னில் போடப்படும் பொழுது இதே உணர்வின் தன்மை மணம் எதுவோ சூரியன் கவர்ந்து வைத்துள்ளது.

இவன் சாயம் இடும்போது இதிலிருந்த நஞ்சு அது எதிலிருந்து உருப்பெற்றதோ அந்த ஆடையை நாம் அணியும் பொழுது நம் உடலான காந்தப்புலன் ஜீவன் பெறுகின்றது.

அதன் உணர்வைக் கவர்ந்து அதே உணர்ச்சியின் அறிவை ஊட்டும் நிலை வருகின்றது. நஞ்சைப் பிரித்தாலும் நஞ்சின் தன்மை ஆடையாக அணியும் பொழுது வருகின்றது.

இதன் வழி நமக்குள் எத்தனையோ தீமைகள் வருகின்றது. இதை விஞ்ஞான அறிவால் கண்டான்.

இந்தெந்தத் துணிகளில் அதிகமாக விஷத் தன்மை இருக்கிறது என்ற நிலையை அந்த நிறங்கள் வந்தாலே ஜெர்மனியில் எடுக்க மாட்டார்கள். மேலை நாடுகளில் இதை எல்லாமே தீமையை தீமை என்று உணர்ந்தபின் மகாபாவத்திற்குப் போய்விட்டது என்ற நிலையில் உள்ளார்கள்.

ஆனால், இந்தியாவின் நிலைகளில் பிழைப்பிற்காக இது புகுகின்றது.

உணர்வின் தன்மை சாயங்களை வெளியிடப்படும் பொழுது விஷத்தன்மைகள் சூரியனால் கவரப்படுகின்றது. காற்று மண்டலமே நச்சாகின்றது.

இன்று வரக்கூடிய கொடுமையான தீமைகளுக்குக் காரணம் காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மை அதிகமானதால் தான் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

குருநாதர் எமக்கு உணர்த்திய நிலைகளை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இதைச் சொல்கிறோம்.

April 17, 2016

அதிகாலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எதை நுகர்கின்றோம்? விநாயகர் தத்துவத்தில் காட்டிய பேருண்மை எது?

அகஸ்தியன் வானுலக ஆற்றலை எடுத்துத் துருவன் ஆனான். துருவ மகரிஷியாக ஆனான். கணவனும் மனைவியும் இரு உணர்வும் கலந்து கொண்டு உணர்வின் தன்மை தனக்குள் ஒளியின் உணர்வாக உருப்பெற்றனர். இரு உயிரும் ஒன்றானது ஒளியின் சரீரம் பெற்றனர், துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்வதற்குத்தான் இதை நினைவுபடுத்தி அந்தக் காவியப் படைப்பின் பிரகாரம் மனதில் பதிவு செய்து கண்ணின் நினைவு கொண்டு சிலையை உற்றுப் பார்த்து உணர்வின் நிலை கொண்டு உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி உணர்வைச் செலுத்தும்படி செய்வதற்கே சிலையை அமைத்தனர்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அதிகாலை 4 மணிக்கெல்லாம் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாக மாற்றுகின்றது.

நம் பூமி அதைத் துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது. அவன் கவர்ந்த உணர்வை இங்கே பதிவாக்கி நினைவை அங்கே செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரும்படிச் செய்தார்கள் அன்று ஞானியர்கள்.

ஆகவே, மனிதன் அதைப் பதிவாக்கினால்தான் அதை நுகர முடியும். அந்தத் துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் பதிவாக்கி நமக்குள் அதைக் கவர வேண்டும் என்பதற்காக அக்கால ஞானியர்கள் அதைச் செய்தார்கள்.

ஆனால், இன்று பூராவும் அஞ்ஞான நிலையாக்கி விட்டார்கள். அஞ்ஞான வாழ்க்கையே வாழும்படிச் செய்துவிட்டார்கள்.

அஞ்ஞான வாழ்க்கையாக தன் ஆசையின் நிலையைக் கூட்டி எவர் கொடுப்பார்? எவர் செய்வார்? ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றார் என்றும் நம்மை ஆள்பவன் உயிர் என்ற நிலைகளை மறக்கச் செய்துவிட்டார்கள்.

நம்மை உருவாக்கி ஈசனாக இருப்பவனும் நம் உயிர் தான். அந்த உயிரே நமக்குள் உணர்வின் வினையாகச் சேர்த்து அந்த வினைக்கொப்ப உடலின் அமைப்பும் அந்த உணர்வின் எண்ணங்களே நம்மை இயக்குகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கிய அந்த விநாயகர் தத்துவம் காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டது.

“தன்னை அறிதல்” என்ற நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டது.

நஞ்சை வென்ற அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்த நிலையிலே இன்று இருக்கின்றோம்.

விஷத் தன்மை கொண்டு ஆசையின் உணர்வு கொண்டு மடியும் தருணத்திலிருக்கின்றோம். மனிதனின் நினைவையே கூண்டுடன் அழிக்கும் உணர்வுகள் காலத்தால் வந்துவிட்டது.

நாம் விஷத்தை அகற்றி அகற்றி அகற்றி இன்று மனிதனாக வந்துள்ளோம். ஆனால், மனிதனின் சுகபோகங்களுக்காக நஞ்சினைப் பாய்ச்சி ஆவியின் தன்மைகளை இன்று சூரியன் கவர்ந்து வரப்படும் பொழுது வேதனை என்ற உணர்வு கொண்டு கடுமையான நோயாகிறது.

நோயானபின் உடலுக்குள் விஷத் தன்மை கொண்ட அணுக்களாக மாற்றி மடிந்தபின் மனிதனல்லாத விஷப் பூச்சிகளாகப் பிறகும் தன்மையே இன்று உருவாகின்றது விஞ்ஞான வாழ்க்கையில்.

அன்று ஞானிகள் காட்டிய அந்த உணர்வின் தன்மையைப் பெறுவது என்பதை ஆசையின் நோக்காக அவனின் நிலைகள் கொண்டு தெய்வத்தை வணங்கும்படிச் செய்துவிட்டார்கள்.

கடவுள் இதைத் தன்னுடைய ஆசைக்கு வேண்டி விரும்பினான். அவன் அதைச் செய்தான் என்ற உணர்வுகளைக் கூட்டிவிட்டனர்.

ஆகவே, இதன் ஆசையில் உடலின் இச்சைக்குத்தான் எல்லா மதங்களும் காட்டுகின்றதே தவிர அருள் உணர்வின் தன்மையான உயிரின் உணர்வை நாம் அறியும்படிச் செய்யவே இல்லை. நுகர்ந்ததை உருவாக்கியது, உணர்வின் தன்மை மனித உடலாக்கியது உயிர்.

நஞ்சை வென்றவன் மனிதனாகிச் சென்றபின் அவன் உணர்வை நுகர்ந்தால் இது வரும் என்ற நிலைகளை எல்லா மதங்களும் அந்தக் காலை 4 மணிக்கெல்லாம் தொழுக ஆரம்பிக்கின்றார்கள். பிரார்த்தனைகளைச் செய்கின்றார்கள், பூஜைகளையும் செய்கின்றார்கள்.

ஆனால், அந்த ஞானிகளை எண்ணுவதே இல்லை.

ஞானிகளை எண்ணாது இவர்கள் உணர்வுகளைத் தான் அந்த நேரத்தில் பெறும்படி செய்துவிட்டார்கள். பிர்ம்மமுகூர்த்தம் என்று. ஆக உண்மையின் இயக்கங்களிலிருந்து நம்மை மாற்றப்பட்ட நிலைகளில்தான் நாம் இன்று வாழுகின்றோம்.

இனியாவது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஏங்கிப் பெறுங்கள். அதை உங்கள் உடலுக்குள் அணுக்களாக மாற்றுங்கள். உயிருடந் ஒன்றுங்கள்.

கணவன் மனைவி இணைந்த நிலையில் ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள். ஒளியின் சரீரம் ஆகுங்கள். மனிதனின் கடைசி எல்லை அதுவே.

ஆகவே, உலகின் வழிகாட்டிகளாக நீங்கள் மாறுங்கள். 

April 16, 2016

உடல் வலு வேண்டும் என்று கோழி, மற்ற மாமிசங்களைச் சாப்பிடுபவர்களின் கடைசி எல்லை..?

சாதாரணமான மனிதர்களின் வலு வேறு. பயில்வான்களை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வலு வேறு.

இன்றைக்கு எடுத்துக் கொண்டால் பயில்வான்கள் விஷத்தின் தன்மை கொண்ட நஞ்சினைப் பாய்ச்சிடும் கோழி முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுகின்றார்கள்.

விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியது இந்தக் கோழிகள். அது இடும் முட்டைகள் எப்படிப்பட்டது? கோழி முட்டை விஷத்தைத் தவிர்க்கும் நிலைகள் கொண்டது.

ஆனால், இதிலிருந்து வாயுவின் தன்மை வரும் பொழுது நரம்புகளுக்கு வீரிய உணர்வுகள் கொடுக்கின்றது.

அதே மாதிரி மாட்டிறைச்சியின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்தார்கள் என்றால் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கின்றது. விஷத்தின் தன்மை ஒரு உடலில் படர்கின்றது.

ஒரு இரும்பை நாம் எடுத்து வளைக்க முடியாது. கனமான சம்மட்டியால் அடித்துத்தான் வளைக்க வேண்டும்.

ஆனால், இத்தகைய விஷத்தன்மை கொண்ட வலுக் கொண்டவர்கள் இந்த இரும்பை எடுத்துச் சாதாரணமாக வளைத்து விடுவார்கள்.

ஆனால், அத்தகையை விஷத்தன்மைகளைப் பெற்ற பின் எப்படி மாடு தனது வலுவான நிலைகளை எடுத்து சுமையை அந்த விஷத்தின் தன்மையால் இழுத்துச் செல்கின்றதோ இதைப் போல அந்தப் பயில்வான்கள் ஒரு இரண்டு பேரை விட்டால் போதும்.

அல்லது ஒருவரை விட்டாலே போதும். ஒரு டன் அல்லது பத்து டன் வைத்து ஒரு வண்டியை நாம் இழுக்கச் சொன்னால் இழுத்துவிடுவார்கள். ஒரு யானைக்குண்டான பலத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால், நாம் ஒரு வலுவான கட்டையைத் தூக்கிக் கொண்டு போய் போடவேண்டும் என்றால் நம்மால் முடியாது.

ஆக, இப்படிச் செய்து கொண்டவர்கள் (பயில்வான்கள்) உணர்வுகள் அடுத்து எங்கே போவார்கள்?

இந்த உணர்வின் அலையான பின் எதை அதிகமாகச் சேர்த்தாரோ இந்த உயிர் அதை வளர்த்து அந்த உணர்வின் நிலை கொண்டு இதைப் போல மாட்டுக்குத்தான் அழைத்துச் செல்லும்.

அவர்களுக்கு இந்த எருமை மாட்டுக்குண்டான புத்திதான் இருக்கும். எருமை தனது வலுவைக் காட்டும். ஆனால், அடித்தால் அதற்குத் தெரியாது.


அவர்களுடன் பேசிப் பார்த்தால் தெரியும். உடனே “உன்..ஹூம்..,” என்று சீறித் தாக்கும் நிலைகளே அவர்களிடமிருந்து வரும். அவர்களிடம் பேச முடியாது.

இவைகளை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.இந்த உடலுக்குப் பின் என்ன? என்பதை நாம் அறிதல் வேண்டும்.

April 15, 2016

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று பலவிதமான நோய்களும் வேதனைகளும் வரக் காரணம் என்ன?

மனிதனானபின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்து விஷத்தை மாற்றிவிட்டு உணவாக உட்கொண்டு உணவுக்குள் உயர்ந்த குணங்களைப் பதிவாக்கி அந்த உணர்வின் அணுவாக வளர்த்து இந்த உடலை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது நம் ஆறாவது அறிவு.

அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று உணர்த்தினார்கள் ஞானிகள். ஆகவே நாம் உருவாக்கும் திறன் பெற்றவர்கள் என்று அறிதல் வேண்டும். அப்பொழுது எதை நாம் உருவாக்க வேண்டும்?

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்று நாம் தாவர இனங்களை விளையை வைத்து அதைப் புசித்தாலும் விஞ்ஞான அறிவால் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பூச்சிகளைக் கொல்கின்றோம்.

அதனால் அந்த விஷத்தின் தன்மை தாவர இனத்திலும் கலக்கின்றது. தாவர இனத்துடன் கலந்தது நம் உணவுடன் சேர்த்து வருகின்றது. நாம் வேக வைத்தாலும் பூச்சிகளைக் கொல்ல நாம் தூவிய விஷங்கள் மீண்டும் அதற்குள்ளே தான் இருக்கும்

இயற்கையில் விளைந்த விஷத் தன்மை வேறு. செயற்கையில் செய்யப்பட்ட உணர்வுகள் இதனுடன் நஞ்சு கலந்ததாக மாறுகின்றது. ஆனால், நஞ்சைத் தூவிய உணர்வுகள் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

எந்த உணவினை நீங்கள் உணவாக உட்கொண்டீர்களோ மற்ற பூச்சிகளைக் கொல்ல மற்ற விஷத் தன்மைகளைத் தூவினீர்களோ இதை உணவாக உட்கொள்ளும் போது கொல்லும் உணர்வின் அணுக்களாக நமக்குள் விளைகின்றது.

ஆக, இதற்கு அது தேவை. எந்த நஞ்சைக் கொல்லத் தூவினோமோ அந்த நஞ்சின் தன்மை நமக்குள் நுகர்ந்து இதுவே பல கொடூர உணர்வு கொண்ட நஞ்சு கொண்ட அணுக்களாக நமக்குள் விளைகின்றது.

அவ்வாறு நமக்குள் விளையும் அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் நல்ல அணுக்களை வாழவிடாது தடுக்கின்றது.

நீங்கள் பார்க்கலாம்.., இப்பொழுது எடுத்துக் கொண்டால் பெரும் பகுதி வேதனை என்ற உணர்வுகளே அனைவருக்கும் தோன்றும்.

அவரவர்கள் தொழில் செய்யும் உணர்வுகளுக்கொப்ப அந்த இயக்கத்தின் தன்மைகள் வலு கொண்ட எண்ணங்கள் எண்ணும் போது அந்த இயக்கத்தில் உறுப்புகளுக்குள் அதிகமாகச் சேரும்.

வலு கொடுக்கும் போது விஷமே தேவை. ஆனால், விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது நம் உடலுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வுகள் அந்த விஷத்தின் ரசங்களாக நம் உடல் வடித்து விடுகின்றது.

ஆகவே, உணர்வின் எண்ணங்கள் வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை அடைகின்றது. நம் சொல்லிலும் செயலிலும் அந்தக் கடுகடுப்பு கலந்தே வரும். அதே சமயத்தில் நம் உடல் உறுப்புகளும் செயலிழக்கும் தன்மை வருகிறது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் அவசியம்.

நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் அதை இணைக்க வேண்டும். நம் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வை விளையச் செய்ய வேண்டும்.

அதன் வழி கொண்டு நஞ்சைப் பிரித்திடும் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றிடல் வேண்டும்.

இதைத்தான் கார்த்திகேயா என்றனர் ஞானிகள். கார்த்தி என்றால் வெளிச்சம். அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி எல்லை.

April 14, 2016

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தின் வழி செலுத்தி தீமையான அணுக்கள் உருவாகாமல் தடுத்துக் கொள்ளுங்கள்

ஒருவரைப் பற்றித் தவறான நிலைகளைப் பார்த்தவுடன் உற்றுப் பார்த்து அவரை “மோசமானவர்” என்று நினைக்கின்றோம்.

அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்தவுடன் நாமும் அந்த மோசமான செயலைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம்.

நம்மை அறியாமலே இது இயக்கும்.

நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம். ஆனால், தவறு செய்கிறான் என்று எண்ணியவுடன் தவறின் இயக்கம் நம்மை இயக்கிவிடுகின்றது. ஆகவே, அந்தத் தவறை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

நாம் பலவிதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். வேதனைப்படும் சொல்களைக் கண்டவுடன் அந்த உணர்வுகள் வந்தே தீரும். அந்த வேதனை உணர்வைச் சுவாசித்தவுடன் அன்று முழுவதுமே சோர்வடைந்த நிலைகள் வரும்.

ஆகவே, வேதனை அணுக்கள் வளர்ந்து விடுகின்றது. வேதனை அணுக்கள் இரண்டு நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தநாளங்களில் தான் கலக்கின்றது. எப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றதோ இதைப் போலத்தான் இரத்தங்களிலே கலக்கப்படும் பொழுது என்ன ஆகின்றது?

இரத்தம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்குமே உணவு எடுத்துச் செல்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

உயிரின் தன்மை கொண்டு நுகர்ந்தால் ஆவியின் தன்மை அடைந்தபின் நம் அணுக்களில் இரத்தத்தில் கலந்தபின் இந்த உணர்வின் தன்மை செயலாகும்.

உணவாக உட்கொள்ளும் உணர்வின் தன்மையை நம் உடல் உறுப்புகள் ஜீரணித்து நீரைப் பிரித்துவிட்டு உணர்வின் சத்தை இரத்தமாக மாற்றுகின்றது. ஆக, இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அந்த அணுக்களின் ஆகாரம் இதன் வழியே செலுத்துகிறது.

நாம் நல்ல உணவுகளைப் படைத்துச் சாப்பிட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் நல்ல எண்ணங்களை எண்ணும்போது அந்த நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகச் செல்கிறது.

ஆனால், நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டும் வேதனையான உணர்வைச் சுவாசித்தால் அந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆனபின் வேதனை உணர்ச்சிகள் தூண்டி நல்ல உணர்வை உட்கொள்ளாது தள்ளிவிடும் நிலை வருகின்றது.

ஏனென்றால், நாம் எண்ணும் உணர்வுகளை நம் உயிர் இந்த உணர்ச்சிகளை அணுக்களாக மாற்றி உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டேயுள்ளது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள வேண்டும் என்பதற்குத்தான் அந்த தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி சுவாசித்து அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலந்த தீமையான உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவர வேண்டும். கவர்ந்து உடலுக்குள் தீமைகள் செல்லாதபடி தடுக்க வேண்டும். 


நல்ல இரத்தங்கள் உருவாகி நம் உடல் முழுவதும் படரும். உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் உற்சாகமடையும். தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுவோம்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.

April 13, 2016

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தீமைகளை உள்ளே விடாது நம்மைக் காக்கும்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று இதே கண்களிலிருந்து செலுத்துகிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். நம் ஆன்மாவில் அருள் வட்டமாக உருவாகும்.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் சென்றது என்றால் அதுதான் வளரும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இப்படி இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் முன்னாடி சாக்கடையே இருந்தாலும் சரி அந்தச் சாக்கடை நாற்றம் வராது. அதை நுகரும் தன்மை உங்களுக்கு வராது.

தியானம் செய்யாதவர்கள் அங்கே வந்து இதைப் பார்த்தார்கள் என்றால் அந்தச் சாக்கடை நாற்றம் முதலில் வரும். இதை நீங்கள் கவனிக்கலாம்.

நமக்குள் இந்த உணர்வின் தன்மை தீமைகளை உள்ளே விடாது பாதுகாக்கும். நமக்கு அதை அறியும் அறிவு தான் இல்லை. ஆனால், நாற்றத்தை உள்ளே விடாது தடுக்கின்றது.

நாற்றத்தை அறிந்து அறிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த உணர்வின் எண்ணங்களோ அந்தச் செயலின் ரூபத்தைப் பார்க்கப்படும் பொழுது அதனின்று நீக்கும் உணர்வுகள் நமக்குள் மூடி தீமையின் நிலைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.

அதனால் தான் இந்த உணர்வை உங்களுக்குள் அடிக்கடி பாய்ச்சி பதிவின் நினைவை நுகர்ந்தால் இதே அணுவின் தன்மை பெருகினால் அது உங்களைக் காக்கும் உணர்வின் நிலை வருகின்றது.

மீண்டும் அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உங்களைக் காக்கும் நிலையும் வருகின்றது. 

April 12, 2016

ஏகாதசி விரதம்

ஏகாதசி அன்றைக்கு சாங்கியப்படி விரதம் இருந்து ஆண்டவனுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறுவோம் என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டார்கள்.

ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்? விரதம் என்பது எது? ஞானிகள் உணர்த்தியது என்ன?

ஏகாதசி அன்று ஒரு நாள் நாம் யார் யாருடனெல்லாம் பகைமை கொண்டோமோ அந்தப் பகைமையெல்லாம் மறந்துவிட்டு நாங்கள் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் அவர்கள் குடும்பங்களில் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழவேண்டும்.

அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும். குடும்பங்களில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாங்கள் பார்க்கும் குடும்பங்களிலும், எங்களைப் பார்க்கும் குடும்பங்களிலும் இதைப் போன்ற நிலைகள் பெறவேண்டும் என்று இந்த விரதத்தைத்தான் இருக்கச் சொன்னார்களே தவிர சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏகாதசி அன்றைக்கு விரதத்தைப் பார்த்தோம் என்றால் சமையல் செய்து எல்லாம் செய்து படைத்துவிட்டு கடைசியில் இவர்கள் உணர்வின் எண்ணங்கள் எப்படி இருக்கும்? விரதம் இருக்கப்படும் பொழுது சங்கடம் கஷ்டம், வேதனை அதைத்தான் கேட்பார்கள்.

கேட்ட பிற்பாடு என்ன செய்யும்?

ஏனென்றால், அரிசி சாப்பிடுபவர்கள் கோதுமை சாப்பிடுவார்கள், கோதுமை சாப்பிடுபவர்கள் அரிசி சாப்பிட்டால் இப்படி இது ஒரு விரதம். வாழைப்பழம் இதை போன்ற சில உணவுகளை உட்கொள்வார்கள். குறைத்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அன்றைக்குச் சாப்பிட்டிருப்பார்கள். ஜீரண சக்தி இருக்காது. பசியாக இருந்து சாப்பிட்டாலும் இந்த உடலுக்குள் வேதனை, சங்கடம் என்ற உணர்வான பின் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே பலவீனமடைகின்றது.

திடீர் என்று சாப்பிட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.

இரவுக்கெல்லாம் பார்த்தால் விரதம் இருந்தேன், அப்புறம் சாப்பிட்டேன், நெஞ்சைக் கரிக்கிறது, மேல் வலிக்கின்றது என்பார்கள். இதைத்தான் நாம் பார்க்க முடிகின்றது.

நம் உடலின் உறுப்பின் தன்மைகள் அது சீராக இயக்கவேண்டும் என்றால் ஏகாந்த நிலை என்றால் நாம் எப்படி இருக்க வேண்டும்?

எல்லோரும் நலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மலரைப் போல மணம் பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணார்வை எப்பொழுது செலுத்துகின்றனரோ இங்கே பகைமை என்ற உணர்வுகள் தடுக்கப்படுகின்றது ஏகாந்த நிலை.

நமக்குள் வரும் நோய்களைத் தடுக்கும் நிலையும் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் பெறவேண்டும் அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் இதுதான் ஏகாந்த நிலை, ஏகாதசி விரதம்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே செல்ல வேண்டும். அதிகாலை 5-6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எளிதில் பெறலாம்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களை எடுத்துக் கொண்டால் இந்தந்தக் காலங்களில் தான் ஆன்மா பிரியும். துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.

ஆகவே, அங்கே சென்றால் உணார்வுகள் கரைக்கப்படுகின்றது. உடல் பெறும் உணர்வுகள் சூரியன் ஒளிக்கதிர்கள் கவர்ந்து சென்றுவிடுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது. இதுவே நம் அழியா ஒளிச் சரீரமாக இருக்க வேண்டும்.

இந்த அழியக்கூடிய உடல் நமக்குத் தேவையில்லை. உயிருடன் ஒன்றி வேகா நிலை என்ற நிலையாக அகண்ட அண்டத்திலும் நஞ்சு நம்மை வென்றிடக் கூடாது. நஞ்சினை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.

பாம்பினங்கள் நஞ்சினைப் பாய்ச்சி உணர்வினைத் தனக்குள் மகிழ்ச்சியாகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போல நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். அது உறையும் கல்லாக இருக்கின்றது, ஜீவனற்றது.

ஆகவே, ஜீவனுள்ளதாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக ஏகாந்த நிலை ஏகாதசி என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெறவேண்டும்.

இதுதான் ஞானிகள் காட்டிய உண்மையின் நிலைகள்.