ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2025

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை


இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.
 
காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக இருடா நான் பார்க்கின்றேன் என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.
 
அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.
 
அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.
 
1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.
 
இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.
 
இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.
 
அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
 
புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.
 
இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றதுஅதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.
 
இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.
 
ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.
 
வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.
 
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
 
விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?
 
ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.
 
இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.
 
எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள் அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
 
ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
 
அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

September 1, 2025

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?


நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.
 
கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.தை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.
 
ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.
 
ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”
 
அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?
 
இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.
 
இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும் அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமா பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.
 
இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.
 
வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாகந்து விடும்.
 
ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும் அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?
 
சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.
 
இது எல்லாம் எப்படி வருகின்றது…?
 
எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் ருப்பெறுகின்றது.
 
இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
 
1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை கணவரை உயர்த்த வேண்டும் என்ற நிலைக்கு வருகிறது
 
ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.
 
அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.
 
செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!
 
உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.
 
எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.
 
எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!
 
1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.சையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது வ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.
 
அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.