ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2022

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

ஒரு சிலர் வேதனைப்படுபவரைக் கண்டு ரசித்துப் பார்ப்பார்கள்.
1.பார்க்கலாம்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித் தான் வேண்டும்…! என்று
2.அந்த வேதனை உணர்வினை ரசித்துச் சுவாசித்தால்
3.விஷத்தை உருவாக்கும்… விஷத்தை உணவாக உட்கொள்ளும்… அணுவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

பொதுவாக ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு அணுக்களும் விஷத்தின் இயக்கமாகவே தான் இருக்கின்றது… நல்ல குணங்களும் சரி… மற்றதும் சரி.

ஆனால் வேதனைப்படுவோரைக் கண்டு ரசித்தோம் என்றால் இந்த விஷத்தினை உணவாகக் கவரும் அணுக்கருவாக உடலில் உருவாகிறது.

அந்த அணுக்கள் நம் இரத்தநாளங்களில் சுழலப்படும்போது உடலில் எந்த பாகத்தில் தேங்கி அணுக்களாகப் பெருகுகின்றதோ…
1.விஷத்தையே உணவாக உட்கொள்ளும் அணுவாகத் தன் வீரியத்தைக் காட்டுகின்றது,
2.முதலில் விழுதுகளை ஊன்றுகின்றது... பின் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்லும் நிலையில்
3.உடல் முழுவதும் படர்கின்றது… “கேன்சராக” (புற்று நோயாக) மாறுகிறது.

மற்ற அணுக்கள் விஷத்தின் இயக்கத்திலேயே வருகின்றது. ஆனால் கேன்சர் அணுக்கள் தனக்குள் அந்த விஷத்தை வளர்த்து உடல் முழுவதும் பரப்பி உடலுக்குள் வரும் விஷத்தையே உணவாக உட்கொள்கிறது.

இப்படித்தான் கேன்சர் என்ற நோய் ஒவ்வொரு நிலைகளிலும் படர்ந்து உடலையே சீரழித்து விடுகிறது.

பார்க்கலாம் கேன்சர் வந்தவர்களுக்கு…!
1.உடலில் ஒரு பகுதியில் அதை அறுத்து அப்புறப்படுத்தி எடுத்தாலும்
2.அடுத்து அதனுடைய விழுதுகள் தொடர்ந்து மரக்கிளைகள் முளைப்பது போன்று
3.அது வேறு பக்கம் முளைத்துக் கொண்டே வரும்.

இன்று சில வகையான தாவரங்களைப் பார்த்தோமென்றால் அதனின் விழுது ஊன்றும் வழிகளிலேயே அந்த மரங்கள் செடி கொடிகள் விளையும். இதைப் போன்று தான் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் இந்த உடலில் பரவுகிறது.

இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசித்தோம் என்றால் அவனிடமிருந்து வெளிப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ அந்த விஷத்தின் அணுக்கள் நமக்குள் வளர்ந்து அது அணுவாக விளைந்த பின் விஷத்திற்காக அந்த அணுக்கள் ஏங்கும்.

அப்போது வேதனைப்படும் உணர்வை மீண்டும் நுகரப்படும் பொழுது அது பெருகும். இடைமறித்து நம் உடலில் விழுகளைப் போட்ட பின் நம் உடலில் இருக்கும் மற்ற அணுக்களின் இயக்கச் சக்தி குறையும்.

இவ்வாறு ஆனபின் நல்ல உடலில் வீக்கங்கள் உருவாகும். வீக்கமாகும் போது உணவுக் குழாயில் வந்து விட்டால் உணவு உள்ளே போகாது அடைத்து விடுகின்றது.

பல்லிலே வந்தால் அங்கே விஷத்தின் தன்மை கூடி கடுமையான வலியாகிறது. இப்படி நரக வேதனையைத் தான் பட வேண்டி இருக்கின்றது.

ஆகவே வேதனைப்படுவோரைப் பார்த்து ரசித்தோம் என்றால் நிச்சயம் அவருக்குக் கேன்சர் நோய் வரும். இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்காதே... வேதனைப்பட்டு அதன் வழியில் உருவாக்கும் அனைத்தும் அவர்களுக்குள் விஷமான அணுக்கள் உருவாக்கப்பட்டு நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது

கேன்சர் நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்...? ஒவ்வொரு நொடியிலும் பிறர் தவறு செய்வதைக் கண்டு நீ மகிழ்ச்சி அடையாதே...! என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எனக்குள் பெருக வேண்டும்... எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று முதலில் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்...
1.அந்த வேதனைப்படுவோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்...
2.அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்... இருள் நீக்கிப் பொருளறியும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
3.பிறர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற மாட்டோம்
4.அவருக்குள் வரும் தீமைகளை நுகர்ந்து அறிய மாட்டோம்.
5.வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்க மாட்டோம்...!

கேன்சர் நோய் வராது இப்படித் தடுக்க முடியும்.