ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2022

வாயுப் பிடிப்பு... அல்சர்... இது எல்லாம் வரக் காரணம் என்ன...?

நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசிப்பது) அனைத்தும் இரத்த நாளங்களில் தான் செல்கின்றது.

சூரியன் பல விதமான உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக மாற்றி பூமியில் எப்படிப் பரவச் செய்கின்றதோ இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் இந்த இரத்த நாளங்களின் வழி கூடித் தான் எல்லா அணுக்களுக்கும் உணவாகப் போய்ச் சேர்கின்றது.

அப்போது உடலுக்குள் ஆங்காங்கு மோதலின் எதிர்நிலை வரப்படும் பொழுது வாயு உண்டாகிறது.

ஒரு வேப்பமரத்தினுடைய உணர்வும் ரோஜாப்பூவினுடைய உணர்வும் இரண்டும் கலந்து வரப்படும் பொழுது
1.வேப்பமரத்தின் மணத்தைக் கண்டு ரோஜாவின் மணம் அஞ்சி ஓடப்படும் பொழுது
2.இதற்கு முன்னாடி இதனுடைய அழுத்தம் தள்ளும் பொழுது ஒரு காற்று வரும்... நறுமணமாக இருக்கும்.
3.அதே போல இதைக் காட்டிலும் வலுவான நிலைகள் (விஷச் செடியின் மணம்) அங்கே இருக்கிறது என்றால் போகாது தடுக்கும்
3.”சுழி...” என்ற காற்றுகள் சுழலும்.

ஒரு எதிர்ப்பான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது இங்கே காற்று மண்டலத்தில் சுழிகள் எப்படி வருகின்றதோ இதைப் போல நாம் அணுக்களின் நிலைகளில் இரத்த நாளங்களில் செல்லப்படும் பொழுது மோதலின் தன்மை வரப்படும் பொழுது
1.எதிர்மறையான மோதல் வந்து
2.ஏ...வ்வ்வ்வ்...! என்று ஏப்பமாக வருவது இப்படித்தான்.

எதிர்நிலையான அணுக்களின் தன்மையும் அதே சமயத்தில் இந்த உணர்வும் இரத்த நாளங்களில் அதிகமாக ஊடுருவி அது செல்லும் பாகங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது வாயு அதிகமாக உருவாகின்றது.

அது அதிகமாக உருவாகி அழுத்தங்கள் அதிகமாக்கப்படும் போது நம் உடல் அசர்க்கையாகின்றது (சோர்வு). ஏனென்றால்
1.இந்த அணுக்கள் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதல் ஆக்கப்படும் பொழுது
2.இதற்குள் ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் வரும்.

சில நேரங்களில் வாயு உபத்திரவம் ஆனால் முக்கியமான பாகங்களில் செல்லப்படும் பொழுது “பளீர்...ர்...” என்று ஒரு மின்னலாகும். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இந்த உணர்ச்சியின் தன்மை தூண்டப்படும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

அதேபோல ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் பொழுது நம் இரத்த நாளங்களைச் சோதித்தால் இதில் வித்தியாசமாக இருக்கும்.
1.மறு நாள் காலையில் பார்த்தோம் என்றால் சிவப்பு அணுக்களையே காணோமே...! என்ற நிலை வரும்
2.இதை மாற்றிடும் உணர்வின் தன்மை நுகர்ந்து விட்டால் சிவப்பணுக்களின் நிலைகள் பூராம் இழந்து விடுகின்றது.

ஒரு திரவகத்தை ஊற்றினால் எப்படியோ அது போல் விஷத்தன்மை கொண்ட இத்தகைய நிலைகளும் நொடிக்குள் நம் உடலுக்குள் மாற்றும் நிலை வந்துவிடும்.

நொடிக்குள் மாற்றம் வரப்படும் பொழுது...
1.நமக்குள் வளர்ச்சி பெற்ற அணுக்களுக்கு இதனின் உணர்வின் தன்மை அந்த வலு இல்லை என்றால்
2.அதனுடைய செயலாக்கங்களை இழக்கின்றது... சோர்வடைகின்றது.

உதாரணமாக... காற்று மண்டலத்தில் அனல் காற்று வீசினால் இங்கே தாவரங்கள் எப்படி வளரும்...? அது கருகுகின்றது. அனல் காற்று பூமியில் உள்ள ஈரசத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால் தாவர இனங்களுக்கு வேண்டிய ஈரம் இல்லை என்றால் மரம் வாடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகர்ந்த உணர்வுகள் போர் முறையாகி வெப்பமாகி ஈரச்சத்தை எல்லாம் ஆவியாக்கி விட்டால் உடலுக்குள் அடுத்து வாயு உருவாகிறது.

நம் உடலுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.