ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2022

நம் உடலுக்குள் மறைமுகமாக ஈர்க்கும் (சுவாசிக்கும்) தீமையின் உணர்வுகளை மாற்றிப் பழக வேண்டும்

தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்
1.அது நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி அதை அடக்கி விடுகின்றது... வங்கு போட்டுவிடுகிறது
2.பின் அதனை அது தன் இருப்பிடமாக வைத்துக் கொள்கின்றது.
3.இதைத் தான் ஓமுக்குள் ஓ...ம் ஓமுக்குள் ஓ...ம் என்று சொல்வது.

நாம் சுவாசத்தின் மூலம் எடுத்துக் கொண்டது உயிரிலே பட்டு ஓ... என்று பிரணவமாகி ஜீவ அணுவாக ஆனாலும் கார உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வை (கோபத்தை) நாம் சுவாசித்தால் அது உயிரிலே பட்டு ஓ... என்று ஓங்கார நிலையை இயக்கப்படும் போது அதன் வழி தான் அந்த நாதங்கள் வரும்.

ஒரு மாவின் சுவை சமமாக இருந்தாலும்... எந்தெந்தச் சத்தினை (காரமோ புளிப்போ இனிப்போ) அதற்குள் சேர்க்கின்றோமோ அதற்குத் தக்க அதனின் சுவை மாறுகின்றது. நாம் சுவைக்கும் போது அதனதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் எழுப்புகிறது.

அதாவது
1.சப்... என்று இருக்கும் பொருளில் காரத்தைச் சேர்த்தபின்
2.வாயிலே போட்டால் ஸ்..ஆ...ஆ...! என்று அதனுடைய ஒலிகள்
3.ஓ...! என்று அதனின் உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அதனின் இயக்கமாகவே மாறுகின்றது.

ஒலியின் நிலைகள் எப்படி எதனதன் நிலையில் செயல்படுகின்றது...? என்ற நிலையை வேதங்களில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வு நமக்குள் அதிகரித்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் மற்றதைக் கொன்று விழுங்கும் உணர்வாக வளர்ந்துவிடும்.

அதே மாதிரி பிறருடைய நோய்களைப் பார்க்கும்போது அவர்கள் உணர்வை நுகர்ந்தால்
1.அவரின் கசந்த வாழ்க்கையை நுகர்ந்த பின் அது நமக்குள் மாறி... நம் வாழ்க்கையும் கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது
2.இவ்வாறு மாறி (மாறி – மாரி) வருவதை மாரியம்மன் என்றும் காட்டுகின்றார்கள்.

ஒருவர் வளர்ச்சி பெற்று வாழும் நிலைகளை நாம் காணும் பொழுது நாம் அங்கலாய்கின்றோம். பார்...! எத்தனை பேருக்கு நான் உபகாரம் செய்தேன்...? தர்மத்தைச் செய்தேன்... எல்லாம் செய்கின்றேன்... ஆனால் இவர்களோ எப்படி எப்படியோ கொள்ளை அடிக்கின்றனர். அவர்கள் மட்டும் எப்படியோ இன்று வளர்ந்து கொண்டே போகின்றார்கள் என்று எண்ணுகின்றோம்.

1.அவர்கள் தவறு செய்து வளர்கிறார் என்று வரும் போது அவர்கள் உணர்வைத் தான் நுகர்கின்றோம்
2.நமக்குள் வளரும் நல்ல குணங்களை இழந்து விடுகின்றோம்.

இதைத் தான் அங்களேஸ்வரி கோவிலில் குழந்தையை குடலை உருவி மாலை போடுவதாகக் காட்டுகிறார்கள்.

நமக்குள் நல்ல உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது தனக்குள் வளரும் நல்ல குழந்தை வளராது அதையே பிளந்து விடுகிறோம் என்ற இந்த உணர்வைக் காட்டுவதற்குத் தான் அங்களேஸ்வரி கோவிலில் சிலைக்கு முன் குழந்தையை மடி மீது வைத்துப் பிளக்கிறார் என்று காட்டுகிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் தவறு செய்து வளர்கின்றார்கள்...! நாம் தெய்வங்களை வணங்கப்படும் பொழுது பார்... அவர்களுக்குத்தான் அள்ளிக் கொடுக்கிறார் என்று
1.அவர்கள் செய்யும் தவறைத்தான் நாம் உணர்கிறோமே தவிர
2.அந்த உணர்வின் அணுக்கள் வந்தால் நல்ல அணுக்களை வளராது தடைப்படுத்துகின்றோம் என்பதை அறியவில்லை.

இப்படி நம் உடலுக்குள் மறைமுகமாக ஈர்க்கும் உணர்வுகளை மாற்றி அமைக்கும் நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத் தான் அத்தகைய தெய்வ உருவங்களைப் போட்டுக் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வரும் தீமைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம் (ஞானகுரு).