ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2019

தியானம் செய்ய வேண்டிய முறையும் உடல் உறுப்புகளுக்குச் சக்தி ஏற்றும் முறையும்


தியானம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் தாய் தந்தையரின் அருளையும் குருவின் அருளையும் பெறவேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் அம்மா அப்பா தான் நமக்குக் கடவுள். நாம் நன்றாக இருக்க வேண்டும்...! என்ற நிலையில் குருவாக இருந்து நம்மைத் தெய்வமாகக் காத்தவர்கள் அவர்கள் தான்..!

தியானத்திற்கு மட்டுமல்ல...! எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் அவருடைய துணை கொண்டு தான் விண்ணுலக ஆற்றலை நாம் பெற முடியும்.

குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1). உயிர் வழி சுவாசம்
“ஈஸ்வரா..!” என்று சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்த வேண்டும்.

தியானத்தின் மூலம் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்..! என்ற ஏக்கத்தை
1.உங்கள் கண்ணின் கருமணிக்குக் கொண்டு வாருங்கள்
2,உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.இப்பொழுது உங்கள் கண்கள் ஒருவிதமான கனமாக இருக்கும்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்... பின் உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி உங்கள் நினைவனைத்தையும் “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து இழுக்கும்.
2.புருவ மத்தியில் கொஞ்சம் கனமாக இருக்கும்... இழுக்கும் பொழுது...!
3.துருவ நட்சத்திர அலைகள் உயிரில் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஏங்கும் போது உங்கள் உயிரிலே அந்த அருள் சக்திகள் மோதும். அப்பொழுது அந்த உணர்வுகள் வலுவாகின்றது.

இப்பொழுது சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் போன்ற எத்தனையோவிதமான குணங்கள் உடலுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

இப்படி எண்ணும் பொழுது தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது. இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் உயிரிலே வலுப் பெறுகின்றது.

2). இரத்த நாளங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்துங்கள்.

ஏனென்றால் நாம் கேட்டது பார்த்தது இது அத்தனையும் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. வேதனைப்பட்ட உணர்வுகள் யாராவது ஜாஸ்தி பட்டிருந்தால் அவர்கள் மீது நாம் பாசமாக எண்ணியிருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும். அப்படி வந்து விட்டால் அந்த ஜீவ ஆன்மா அதனால் மாற்ற முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த ஜீவ ஆன்மாக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் பாயும். உங்களால் அதை உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் படர்ந்து எங்கள் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் உடல் முழுவதற்கும் இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

உங்கள் உடல் முழுவதற்கும் ஒருவிதமான புது உணர்ச்சிகள் ஏற்படும்.

3). சிறு குடல் பெரும் குடல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை குடலுக்குள் பாய்ச்சுங்கள்.

1.இப்பொழுது உங்கள் குடலில் ஒரு வித்தியாசமான உணர்வுகள் தூண்டுவதை நீங்கள் உணரலாம்.
2.ஏனென்றால் அந்த அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றுகின்றோம்.
3.இந்த மாதிரிச் செய்தால் உங்கள் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

4). கணையங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

நாம் உட்கொண்ட உணவிலிருந்து ஆவியாக வருவதை அது இரசாயணமாகப் பிரித்து எடுக்கும். அந்தக் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் நல்ல சக்தியாக இப்பொழுது பெறும்.

அப்படிப் பெறவேண்டும் என்பது தான் இதன் நோக்கம். எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

5). கல்லீரல் மண்ணீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலை மணணீரலை உருவாக்கிய அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். கண்ணின் நினைவைக் கல்லீரலிலும் மண்ணீரலிலும் செலுத்துங்கள்.

கல்லீரலைப் பார்க்கவில்லை என்றாலும் இப்பொழுது அந்த உணர்வுகள் பாயும் பொழுது அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதை உணரலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்வதை நீங்கள் உணரலாம்.

6). நுரையீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரலில் ஆஸ்த்மா சளி டி.பி. போன்ற நோய்கள் இருந்தால் அது குறையும். மூச்சுத் திணறல் இருந்தால் அதுவும் குறையும். அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் அந்த நுரையீரல் நல்ல வீரியமடைந்து மன வலிமையையும் கொடுக்கும்.

7). சிறுநீரகங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.சிறுநீரகத்தில் வரும் விஷத்தைப் பிரித்து நீராக மாற்றிவிட்டு
2.நல்ல இரத்தமாக மாற்றும் திறன் கொண்டது அந்த உறுப்பு.

8). இருதயம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்துங்கள்.

இருதயத்தில் இப்பொழுது வலி இருந்தாலும் இருதயத்தில் அசுத்தமான நிலை இருந்தாலும் அது மாறி நல்ல உற்சாகமான இருதயமாக மாறும்.

9). கண்ணின் கருமணிகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் கண்ணிலே பாய்ச்சுங்கள்.

கருமணியில் படர்ந்துள்ள வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற விஷத் தன்மைகள் இப்பொழுது அகலும். கருமணியில் இப்பொழுது நல்ல வெளிச்சங்கள் வரும். கருமணி தூய்மையாகும்.
1.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அந்தப் பேரருளும் பேரொளியும் உங்கள் கருமணியில் பட்டு அந்த உணர்வுகள் உங்கள் நரம்பு மண்டலங்கள் வழி செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் அந்தத் தூய்மையின் உணர்வை உணர்த்தும்.

10). நரம்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11). எலும்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு  மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை எலும்பு மண்டலத்தில் சேர்த்து ஏங்கித் தியானியுங்கள்.

12). நெஞ்சின் பாகம் உள்ள ஊன்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சு எலும்புக்குள் ஊனாக உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை நெஞ்சுக்குள் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நெஞ்சின் பாகம் முன்னாடி அந்த வெளிச்சம் வரும்.
2.ஏனென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குவிக்கப்படும் பொழுது அந்த வெளிச்சமான உணர்வுகள் தெரிய வரும்.

13). தசை மண்டலம்.. தோல் மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி இந்தத் தோல் மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகப் பதிவாக்கி விட்டால்
1.காற்றிலிருந்து வரும் கெட்டதை நம் உடலுக்குள் ஈர்க்காது தடைப்படுத்த இது உதவும்.
2.காற்றிலிருந்து வரும் தீமையான உணர்வுகளை அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

14). தவம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

தாய் தந்தையரின் உணர்வு தான் நம் உடல். தாய் தந்தையரின் உணர்வால் தான் இந்த உடல் வளர்க்கப்பட்டது. தாய் தந்தையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது.

தாய் தந்தையர் நம்மை வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் இருப்பினும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் அவர்கள் உடலில் உள்ள தீய வினைகளும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று... அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து... தெரிந்து... வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

15). குலதெய்வங்கள்
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

16). மழை வேண்டித் தியானம்
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா...!

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...!