ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு
கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை
அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.
கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த
உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக
இருக்கின்றது.
பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது
வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை
அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.
1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை
முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
இதை நீங்கள் பார்க்கலாம்.
அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின்
வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள்
சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது.
நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.
அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து
தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.
ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு
கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை
ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.
இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து
விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன்
உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.
வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள்
பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது
இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.
அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ
இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால்
நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.
ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம்
பெறுதல் வேண்டும்.