எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று விஞ்ஞானிகள்
காட்டுகின்றார்கள். இன்று ஒரு காபி (HOTEL) கடையில் கூட இருக்கின்றது.
1.கையை நீட்டினால் போதும் தண்ணீர் வந்து
விழுகும்.
2.எலெக்ட்ரிக்... எலெக்ட்ரானிக்... குழாயை
நாம் திறக்க வேண்டியதில்லை...
3.கையை நாம் கழுவிக் கொள்ளலாம். கையை எடுத்தால்
தானாக அடைத்துக் கொள்ளும்.
4.இன்னொரு இடத்தில் கையை நீட்டினால் சூடான
காற்று வருகிறது. நம் கையில் இருக்கும் ஈரம் காய்ந்து விடுகிறது.
இதே மாதிரி ஒரு நாட்டிற்குள் அடுத்த எதிரி
நாட்டு விமானம் வருகிறது என்றால் ராடார் அமைப்புகள் (RADAR SYSTEM) மூலம் அதனின் உணர்வுகளை
நுகர்ந்து கொண்ட பின் இங்கே உடனே அறிவிக்கின்றது.
அறிவிப்பது மட்டுமல்லாதபடி அந்த ராடார் அமைப்பிலே
உடனே அதை எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் கொண்ட மற்ற இயந்திரங்களில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.
அது உடனே அந்த எதிரி நாட்டிலிருந்து வந்த விமானத்தைத் தாக்குகின்றது.
இதை எல்லாம் இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாக்கியுள்ளார்கள்.
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்...!
1.நம் உயிர் ஒரு எலெக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக்
ஆக மாறுகின்றது.
உடலுக்குள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள்.
எதிர்பார்க்காதபடி உங்கள் பையனை ஒருவன் அடித்து விட்டான்...! என்று திடீரென்று கேள்விப்பட்டால்
எப்படி இருக்கும்.
இந்த உடலுக்குள் நம் உயிர் குருவாக இருக்கின்றது.
சொன்னவுடனே காதிலே கேட்டுக் கண் அந்த நினைவாற்றல் கொண்டு சுவாசித்து உயிரிலே மோதச்
செய்கிறது.
உங்கள் கண்கள் என்ன செய்கிறது..?
1.கவர்ந்து உயிரிலே மோத வைக்கின்றது
2.அது தான் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின்
“குருக்ஷேத்திரப் போர்” என்பார்கள்.
3.உயிரிலே பட்ட பின் அப்பொழுது இங்கே போர்
நடக்கின்றது.
4.என் பிள்ளைக்கு என்ன ஆனதோ...! ஏது ஆனதோ...?
என்ற உணர்ச்சியின் வேகம் வந்து விடுகிறது.
5.அப்பொழுது பாக்கி எந்தக் காரியமும் பார்க்க
முடிகின்றதோ...? இல்லை...!
அந்த எலெக்ட்ரானிக்... உணர்ச்சியின் இயக்கங்கள்
அதே இடத்திற்கு அழைத்துப் போய் தன் பையனைக் காப்பாற்றப் போகின்றது. பையனைப் பார்க்கிற
வரையில் மன வலிமை இருக்காது.
ஒரு சமயம் என் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப்
போயிருந்தார்கள். என் பையன் தண்டபானி கைப் பையன் (அவனாக மெதுவாக எழுந்து நடக்கக்கூடிய
வயது).
நான் திருமணத்திற்குப் போகவில்லை. ஆனால்
என் வீட்டில் அவனைக் கூட்டிச் சென்றிருந்தார்கள். அங்கே போனவுடன் இவனை விட்டு விட்டு
அவர்கள் அங்கே இருந்தவர்களிடம் பேச.. கொள்ளவுமாக இருந்திருக்கின்றார்கள்.
கடைசியில் கிளம்பும் பொழுது அவர்வர்களுக்குண்டான
வண்டி வசதி இருக்கிறது என்று இவனைக் கவனிக்காமலே அங்கேயே விட்டு வந்துவிட்டார்கள்
அங்கிருந்து எல்லோரும் வந்துவிட்டார்கள்.
பையனைக் கூப்பிட்டுச் சென்றவர்கள் “பையன் இவரிடம் இருப்பான்...! அவரிடம் இருப்பான்...!
என்ற எண்ணத்திலேயே வந்து விட்டார்கள். (கல்யாண வீட்டிலே பையன் அனாதையாகச் சுற்றிக்
கொண்டிருந்திருக்கின்றான்)
திருமணத்திற்குச் சென்று திரும்பி வந்தவர்களிடம்
எங்கே தண்டபானி...? என்று நான் கேட்கிறேன்.
பிள்ளை அவரிடம் இருப்பான் என்று நினைத்தேன்...
இவரிடம் இருப்பான் என்று நினைத்தேன்...! என்று சொல்லி யாரிடமும் இல்லாதபடி “காணோம்..!” என்றார்கள்.
சொன்னவுடனே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்...!
அது வரையிலும் உனக்குத் தெரியவில்லை. “பையனைக்
காணோம்...”” என்று காதிலே கேட்டவுடன் உன் உணர்வுகள் எப்படி இயங்குகிறது பார்...? என்று
சொன்னார்.
உடனே நான் என்ன செய்தேன். என்னிடம் இருந்ததோ
பிரேக் இல்லாத சைக்கிள் தான். காலை ஊன்றிக் கொள்வது தான் பிரேக்...!
சைக்கிளை எடுத்து அழுத்திக் கொண்டு வேகமாகப்
போனேன். அந்தக் கல்யாண வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் போய்விட்டார்கள்.
“இந்தப் பையன் யார்...? என்று தெரியவில்லையே..
தெரியவில்லையே...!” என்று அங்கே பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பவர் பேசிக் கொண்டிருக்கின்றார்.
பையன் என்ன செய்திருக்கின்றான்...? அங்கே
அவர்களிடம் போவது பிறகு உள்ளே செல்வதுமாகவே இருந்திருக்கின்றான். அவனுக்கு நைனா...!
என்ற சொல்லைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியாது. அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
நான் இங்கிருந்து பதட்டத்தில் போய்க் கொண்டிருக்கின்றேன்.
போனவுடனே... கேட்டவுடனே... “இங்கே ஒரு பையன் இருக்கின்றான் ஆனால் யார் என்று தெரியவில்லை...!
என்கிறார்கள்.
பார்த்தால் என் பையன் தான்...! ஒரு ஓரமாக
நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
1.ஆக அவனை நான் பார்க்கும் வரையில்
2.அந்தப் பதட்டம் எனக்குள் இருக்கின்றது...
பதட்டம் நிற்கவில்லை.
பதட்டத்துடன் அவனைக் கண்டதும் தூக்கப் போனால்
பையன் என்னைப் பார்த்து முறைக்கின்றான்... என்னிடம் வர மாட்டேன் என்று...! காரணம்...
எல்லோரும் சேர்ந்து என்னை விட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று...! வர மாட்டேன் என்கிறான்.
அப்புறம் அவனைச் சமாதானப்படுத்திச் சைக்கிளில்
உட்கார வைத்து வீட்டிற்குக் கூட்டி வந்தேன். வீட்டுக்கு வந்த பின் “அந்த வயதில்” இரண்டு
நாளாக என்னிடம் பேசவில்லை... என்னிடம் பேச மாட்டேன் என்கிறான்.
கல்யாணத்திற்குக் கூட்டிச் சென்றவர்கள் அவர்கள்.
ஆனால் நான் போய் அவனை அங்கிருந்து கூட்டி வந்தால் என் மீது கோபமாக இருக்கின்றான்.
நைனா...நைனா... என்று பிரியமாகக் கூப்பிடுபவன்
அப்படிச் செய்கிறான். ஏனென்றால் இயற்கை...!
1.ஒவ்வொரு நொடிகளிலேயும் இப்படி எல்லாம்
பல வழிகளில்
2.குருநாதர் உண்மைகளை உணர்த்திக் காட்டினார்.
3.நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக்காக
(உணர்ச்சிகளாக) நம் உயிர் எப்படி இயக்குகின்றது...? என்பதை
4.நாம் நம்மை அறிந்து கொள்ளலாம்.