ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2017

“உங்கள் ஆன்மாவை வலுப்படுத்தி” மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

நம் உயிர் என்றுமே அழிவதில்லை. எத்தகையை விஷத்திலும் நெருப்பிலும் அது மடிவதில்லை. அழிவதில்லை.

ஏனென்றால் உயிரின் இயக்கத்தின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் அந்த வெப்பத்தின் தணலானால் “உயிரின் வீரியம்” அதிகமாகின்றது. அதனால் உயிர் அழிவதில்லை.

ஆனால், உணர்வுகள் அழிந்து விடும் கருகிவிடும். மாற்றிவிடும் உணர்வுகள் இந்த உடலிலுள்ள உணர்வுகள் எல்லாம் மாற்றமடைந்துவிடும்.

ஆகவே, இந்த இயற்கையின் உண்மையை அறிந்து கொண்ட பின் நாம் இப்பொழுது எப்படி வாழ வேண்டும்?

கையில் அழுக்குப்பட்டால் துடைத்துவிடுகின்றோம். கையில் பெயிண்ட் ஆயில் மற்றவைகள் பட்டால் கெரசின் போன்றதை வைத்துக் கழுவிவிடுகின்றோம்.

இப்படியெல்லாம் நாம் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது நாம் நுகரும் ஆன்மாவை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் சரியாகுமா?

வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் பிறரின் வேதனைகளை நாம் பார்க்க நேர்கின்றது.., அறிய நேர்கின்றது. அப்பொழுது அந்த வேதனைப்படும் உணர்வு நம் ஆன்மாவாக (நம் காற்று மண்டலமாக) மாறிவிடுகின்றது.

ஏனென்றால், இதிலிருந்து தான் நாம் சுவாசிக்க முடியும். நம் ஈப்புக்குள் (ஆன்மாவிற்குள்) வராததை நாம் மூக்கின் வழி சுவாசிக்க முடியாது.

ஒரு கண்ணாடியில் அழுக்குப் படிந்து விட்டால் நம் முகம் சரியாகத் தெரியுமா? நம் ஆன்மாவில் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகள் அதிகமாகிவிட்டால் சிந்திக்கும் தன்மை இருக்குமா?

இருக்காது. ஆக, இருட்டுக்குள் வாழ்ந்தது போல் தான் இருக்கும்.

எதைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் நம் எண்ணமே எதிரியாகி
1.தொழிலில் கஷ்டம்
2.நம் குடும்பத்தில் பகைமை
3. நம் சொல்லே நண்பருக்குள் எதிரியாக மாற்றுவது
இப்படி எல்லாம் வந்துவிடும்.

ஒருவர் சந்தோசமாகச் சொல்லும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு எடுத்துக் கொண்டால் சீதாலட்சுமி. நோயின் உணர்வுகள் வெளிவரும் பொழுது வாலி. கோபமான வெறுப்பின் உணர்வுகளைச் சொல்லும் பொழுது வாலி.

ஏனென்றால், “இந்த ஆன்மாவில் பட்ட அழுக்கு” நாம் உற்றுப் பார்க்கும் பொழுது இதே உணர்வுகள் தான் பல கஷ்டங்களும் பல தொல்லைகளும் வர ஏதுவாகின்றது.

1.எங்கள் வீட்டில் எப்பொழுதுமே கஷ்டமாக இருக்கின்றது...
2.எப்பொழுதுமே தொல்லையாக இருக்கின்றது..,
3.ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம்..,
என்று சொல்வதெல்லாம் இதைப் போல தீமையான உணர்வுகள் அதிகரித்து அதைத் தூய்மையாக்காததனால் ஏற்படும் விளைவே ஆகும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் இத்தகைய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். செல்வத்தில் நீங்கள் உயர்ந்திருப்பினும் சரி.

அந்தச் செல்வத்தைக் கொண்டு நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும் இந்த உணர்வுகள் அடிக்கடி “சங்கடங்களைச் செயல்படுத்துவதும் வெறுப்பை ஊட்டுவதும்” நிச்சயம் இருந்தே தீரும்.

அதை நாம் துடைக்க வேண்டும் அல்லவா.

அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் - அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் “துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே” எனக்குச் சொல்லி வந்தார்.

அவர் காட்டிய அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் இணைக்கும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய அலைகளை நம் பூமி கவர்ந்து கொண்டேயுள்ளது. உங்கள் நினைவெல்லாம் தீமைகளை நீக்கும் உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருவதற்கொரு வழி தான் இப்பொழுது பதிவாக்கும் இதனின் நிலைகள்.

1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வளர்ந்து
2.நஞ்சை எல்லாம் வென்றவன்
3.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
4.அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வின் உண்மையை அறிந்து
5.உயிருடன் ஒன்றி எல்லா உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் “அகஸ்தியன்”.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் உள்ள “ஒவ்வொரு குணங்களிலும்.., இணைக்கச் செய்யும்படி” உபதேசிக்கின்றோம்.

அடுத்து எந்தக் குணம் வந்தாலும் அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்குள்  வரவேண்டும்.

அப்படி எண்ணினால் அகஸ்தியன் உயிருடன் ஒன்றி எல்லா உனர்வுகளையும் ஒளியாக்கியது போன்று உங்களுக்குள்ளும் அது வளர்ச்சியாகும்.

ஆகவே, வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிகளிலேயும் உங்கள் ஆறாவது அறிவினை அந்த நல்ல உணர்வினைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் தன்னுடைய ஈர்ப்பு வட்டத்தில் எத்தகையை விஷம் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிவிடும். அதைப் போன்று நம் ஆன்மாவிலும் ஆற்றல் பெருகும்.

நம் ஆன்மா தீமை புகாத வலிமை பெற்றதாக மாறும்.