ஓங்கார நர்த்தனம் – தில்லை நடராஜா
“தில்லை..,” என்பது ஒரு எல்லை.
எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள்
வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.
“தில்லை நடராஜா..,” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை
வைத்தார். நம் பூமி “நிற்காமல்.., சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா
என்று பெயரை வைத்தான்.
அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும்
பொழுது “திரு ஆவடையச் சுழலச் செய்து..,” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும் இயக்கத்தின்
நிலைகளில் “நடனமாடுகின்றான்..,” என்றும் காட்டினார் திருமூலர்.
நடராஜா, சிதம்பரத்திற்குப் பெயர் “தில்லை” தில்லையம்பலம்,
இந்த பூமி நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது. இதுதான் “ஓங்கார நர்த்தனம்” என்ற நிலைகள்
கொண்டு அங்கே எழுதினான்.
ஓங்கார நர்த்தனம். அசுரனைக்
காலிலே போட்டு அது இயக்கும் தன்மை. அதாவது, பூமி சுற்றும்போது ஏற்படக்கூடிய அதீத
வெப்பம் பூமிக்கு - ஓசோன் திரை என்பது.
விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் பூமிக்குள் மோத வரும்போது அந்த அசுர
சக்தியை மாய்க்கும் நிலைதான் “சிவ தாண்டவம்”, என்று
அங்கே காட்டினார்கள்.
“திருப்பாச்சி” என்பது கவர்ந்துகொண்ட நிலை என்று அவர்கள்
செய்து வைத்திருப்பார்கள்.
“சிவகாமி நடனம்” நம் உடலான
சிவம் – காமி. நாம் கோபமான உணர்வை எடுத்துச் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டவுடன் அந்த எரிச்சல்,
அப்போது அந்த எரிச்சலின் உணர்வுகள் உடலுக்குள் பட்டவுடன்
நல்ல குணங்களான சக்தியுடன் பட்டவுடன் அந்த நாதத்தின் நிலைகள் இயக்குகின்றது.
ஓங்கார நர்த்தனம் என்று இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது? “இந்த அங்கங்களை
எப்படி இயக்குகின்றது? என்ற பேருண்மையை அன்று உணர்த்தினார்கள்.
அதுதான் “சிவகாமி” உடலான
நிலைகள் அந்த காமி அந்தச் சக்தி.
சிவகாமியின் நடனத்தை வைத்துப் பல காவியங்களை எழுதியிருப்பார்கள் ஞானிகள்.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.