திட்டியவர்களைப்
பதிவு செய்தால் எனக்கு இந்த மாதிரி எல்லாம் துரோகம் செய்தான் அவன்
உருப்படுவானா..,? என்று நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணுகின்றீர்கள் அல்லவா.
அதே
சமயத்தில்.., குழந்தை மேல் பாசமாக இருக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு லெட்டரோ மற்ற
தொடர்பு இல்லை என்றால்.., “என்ன ஆனதோ..? ஏது ஆனதோ..,? என்று
வேதனைப்படுகின்றீர்கள்.
நீங்கள்
இங்கே வேதனைப்படும் பொழுது அங்கே குழந்தை சிந்திக்கும் தன்மை இழந்துவிடும். ஒரு
சைக்கிளிலோ, மோட்டர் சைக்கிளிலோ, காரிலோ சென்றால் அந்த நேரம் ஆக்சிடென்ட் ஆகும்.
நடந்து
செல்லும் பொழுது இந்த மாதிரி எண்ணினால் மேடு பள்ளம் தெரியாமல் கீழே
விழுந்துவிடுவார்கள். பாச உணர்வால் இயக்கப்படுகின்றது.
அதே
சமயம் சிந்தனை குறையும் போது நாம் என்ன செய்கிறோம்? குழந்தையைப் பற்றிய ஒன்றும்
தகவலே இல்லை என்று வேதனையாக பொழுது வீட்டில் சமையல் செய்து கொண்டிருப்பார்கள்.
குழந்தைமேல்
உள்ள நினைவால் ஒரு துணியையோ மற்றதையோ வைத்துத் தூக்குவதற்குப் பதில் வெறும் கையில்
எடுக்கும் பொழுது கை சுட்டுவிடும்.
கை
தவறிக் கீழே போட்டு உடல் மீது சூடானவைகளை ஊற்றிக் கொள்பவர்களும் உண்டு.
குழந்தை
மீது பாசமாக இருந்து குழந்தையைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையே என்ற ஏக்கத்தில்
நினைவெல்லாம் அங்கே இருக்கும்.
ஆனால்,
அங்கேயும் கெடுதலாகின்றது. இங்கேயும் நினைவிழந்து சிந்தனையற்ற செயல்களைச்
செய்வோம். சமையல் செய்தாலும் சரி.., மற்ற எந்த வேலைகளைச் செய்தாலும் சரி..,
கவனமில்லாத செயல்களாகி கெடுதலான நிலையாகிவிடும்.
பாசத்தால்
நம் உணர்வுகள் இப்படிச் சென்றால் இந்த நிலை ஆகிவிடும்.
சில
குடும்பங்களில் பார்த்தால் நாங்கள் நன்றாகத் தான் இருந்தோம் ஆனால், “தொடர்ந்து
இப்படியே தான் நடக்கின்றது” என்பார்கள்.
அதே
போல ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கின்றார் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் போதும். “இப்படித்
திட்டுகின்றாரே..,” என்று மீண்டும் மீண்டும் நினைவினைச் செலுத்தினால் அங்கே
புரையோடும். அவர்கள் செயலும் கெடும்.
அதே
சமயத்தில் சிந்தனை இழந்து இங்கேயும் ஒரு கணக்கைப் பார்த்தாலும் சரி, அடுப்பிலேயே
ஒரு பொருளை வைத்தாலும் சரி.., தவறான செய்கைகளைச் செய்ய வைத்துவிடும்.
இப்படி
எல்லாம் ஆனால்.., அப்புறம் சிந்தனை எப்படிப் போகும்?
நாசமாகப்
போகின்றவர்கள்.., என் மீது கண் பட்டு கண் பட்டு எதைத் தொட்டாலும் எனக்கு
இடைஞ்சலாகின்றது என்பார்கள்.
பாசத்தால்
எண்ணி வேதனைப்பட்ட பின் அந்தக் குழந்தைக்கு ஆன பிற்பாடு.., “என்னமோ தெரியவில்லை..!
என் கெட்ட நேரம் போலிருக்கின்றது. என்று இப்படி எண்ணுவார்கள்.
இதுவெல்லாம்
எதைக் காட்டுகின்றது?
“நாம்
சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட.., அந்த உணர்வைக் காக்க..,” இந்த எண்ணங்களை
மாற்றுவதும் அதன் வழி “நாம் நுகர்ந்த உணர்வை.., நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது?”
என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்
உயிர் “அரங்கநாதன்..,” நாம் நுகரும் உணர்வு அரங்கத்திலிருந்து உணர்வுகளை அது
உள்ளிருந்து நாதங்களை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் வரும்
பொழுது “ஆண்டாள்..,” பெண்பாலாகக் காட்டுகின்றார்கள்.
அதுதான்
(அந்த உணர்ச்சிகள்) நம்மை ஆளுகின்றது.., ஆண்டாள்.
அதாவது
சாதாரண மக்களுக்கும் புரிய வைப்பதற்காக வேண்டி திருப்பாவை.., திருவெம்பாவை..,
1. நல்லவைகளைச்
சொல்லு
2. நல்லவைகளையே
பேசு,
3. நல்லவைகளை
எண்ணி இரு
அப்படி
என்ற நிலைகளைத்தான் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாள் என்று சாஸ்திரங்களில்
தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே, நாம் மதியோடு வாழ வேண்டும்.
மதியின்
தன்மை பெற்ற மார்கழியில் தான் ஒளியின் சரீரம் ஆனது துருவ நட்சத்திரம். அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து மதி நிறைந்த நாளாக அமைத்தல் வேண்டும்.
இந்த
உயிர் பத்தாவது நிலை (கல்கி) அடைய வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் வரும்
நஞ்சினை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
அகஸ்தியன்
துருவனாகி துருவ நட்சத்திரமாகி பத்தாவது நிலை அடைந்தது கல்கி. அதைப் பின்பற்றிச்
சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.
அதிலே
நாம் சென்றடைய வேண்டும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேச வாயிலாகப் பதிவு
செய்கின்றோம்.