ஒரு துளி விஷம் பாலில்
பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம்
அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.
இதைப் போன்று தான்
சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.
வேதனை உணர்வுகள்
இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை
“மயங்கச் செய்துவிடுகின்றது”.
அப்பொழுது சிந்தனை என்ற
நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும்
நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.
இதிலிருந்து நாம் மீள
வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது?
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் எனக்குள் பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும்
அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில்
எண்ணி ஏங்குதல் வேண்டும்.
பின் கண்ணின் நினைவினை
உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
படரவேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.
இப்படி எண்ணினால்
அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள்
“இழுக்காது.., தடைப்படுத்தப்படுகின்றது”.
இது வலுப் பெறும்
பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள்
நீக்கப்படுகின்றது.
எத்தகையை நிலைகள்
வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.
இன்று இருக்கும் இந்த
விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப்
பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
மெய்ஞானிகள் பெற்ற
அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும்
நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே
வருகின்றோம்.
பதிவாக்கியதை நினைவு
கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால் தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்..,
உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.
குருநாதர் எனக்கு
எப்படித் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.., என்ற உணர்வினைப் பாய்ச்சி.., அதைச் செய்தாரோ…” அதே போல
உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.
பல இன்னல்களைச்
செயற்கையாக ஊட்டினார். அதன் செயலாக்கங்களையும் அதிலிருந்து விடுபடும்
மார்க்கங்களையும் தெளிவாகக் காட்டினார்.
என்னைக்
காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று அத்தகையை நிலைகளைக்
காட்டினார். நீங்கள் நாட்டிற்குள் இருந்தே இதைப் பெறமுடியும்.
தீமையை வென்ற உணர்வின் தன்மை
“உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை
ஏற்படுத்துகின்றோம்.
இது உலகைச் சுற்றி
ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின்
நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.
நீங்கள் உங்கள்
வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.
அதைப் பெற.., “உங்கள்
நினைவு ஒன்றுதான்” தேவை.
தீமை என்று நீங்கள்
காணும்பொழுதெல்லாம்
1. அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2. தீமையிலிருந்து
நாங்கள் விடுபட வேண்டும்.
3. தீமை செய்வோர் தீமைகளிலிருந்து
விடுபட வேண்டும்
என்ற உணர்வினைப்
பாய்ச்சினால் “தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.
இதை ஒவ்வொருவரும்
ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.
இப்படி ஒவ்வொரு
நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும்
நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ
அங்கே அழைத்துச் செல்கின்றது.
நாம் “பிறவியில்லா
நிலை” அடைகின்றோம்.