“சிவன்” நெற்றிக்கண்ணைத்
திறந்தால்.., “சுட்டுப் பொசுக்கிவிடுவான்”
இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து அது ஓங்கி வளர்ந்து நம் உடலை நலியச் செய்கின்றது.
மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் செயலை அது செயல்படாது தடுத்து உடல் நலிந்து உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து நம் வாழ்க்கையில் எதனையுமே “வலுவான நிலையில்” செய்யமுடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
"சிவன்
நெற்றிக் கண்ணை திறந்தால்..,
சுட்டுப் பொசுக்கி விடுவான்..," என்று
காவியங்களில் கூறப்பட்டிருக்கும்.
அதாவது, நம்
கண்ணின் நினைவைப் "புருவ
மத்தியில் செலுத்தி"
உயிரான ஈசனை எண்ணி ஏங்கி அருள் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது நம்முள்
அறியாது சேர்ந்த "தீமைகள்
ஒடுங்குகின்றன" என்பதே
ஞானிகள் உரைக்கும் உண்மையாகும்.
நமது
உயிர்..,
நமக்குள் “அகக்
கண்ணாக”
இருந்து நாம்
எண்ணியதை நமக்குள் அறியச் செய்கின்றது.
“புறக்கண்” பிற நிலைகளில் நடக்கும் இந்த உணர்வை நுகர்ந்து அந்த ஈசனான உயிருடன் காட்டப்படும் பொழுதுதான் அந்த அகம் உயிர் உள் நின்று கண்ணனாக இருந்து நம் உடலுக்குள் தெரிய வைக்கின்றது.
உள்
உணர்வை அறிய வைக்கும் உயிராகவும்.., புறக்கண்
மற்றதை
இழுத்துக் கவர்ந்து இயக்கச் சக்தியாக நாம் அறிந்திடும் நிலையாகவும்.., அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான் என்று சிவ
தத்துவத்தில் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது, “உயிரான கண் அகக்கண்”, “நம்முடய கண் புறக்கண்”,
ஆக புறக்கண்ணால், அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு,. அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நாம் ஏங்கும்பொழுதுதான் “சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.
“நம் உடலான சிவத்திற்குள்.., உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்..,” புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஏங்கிடல் வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவஅணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும்” என்று உள் நினைவில் கண்களை மூடி “நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”.
நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது “அதனின் சத்து கொதித்து..,” அதனின் மணம் வெளிவருவதைப் போன்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.
எனவே, வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளாக இருந்தாலும் அதைச்
சுட்டுப் பொசுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள்
உணர்வுகளை “நெற்றிக் கண்ணான உயிர்
வழி கவர்ந்து” நம்
உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாகக்
கொடுக்க வேண்டும்.
இவ்வாறு நாம் செய்து வர நாம் அனைத்துத்
தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ
முடியும்.