நீங்கள் எத்தகையை
தீமையானவற்றைப் பார்த்தாலும் “ஐயோ.., இப்படி ஆகிவிட்டதே..,” என்று பார்க்க
வேண்டியதில்லை.
அந்த உணர்வின்
தன்மை உங்கள் எண்ணத்தால் சிறுகச் சிறுக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.
துருவ
நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும், எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
ஏனென்றால், தீமையான
உலகில் நாம் வாழ்கின்றோம். உங்கள் வாழ்க்கையில் நல்லதைச் செய்கின்றீர்கள்.
ஒருவருக்கு 100 ரூபாயையோ 1000 ரூபாயையோ நம்பிக்கையின் பேரில் கொடுக்கின்றீர்கள்.
திருப்பி நீங்கள் கொடுத்த
ரூபாயைக் கேட்கச் சென்றீர்கள் என்றால் அந்தப் பணம் வராது. இரண்டாவது தரம் அழுத்திக்
கேட்டால் என்ன ஆகின்றது?
“என்னய்யா.., நீ சும்மா கேட்டுக்
கொண்டிருக்கின்றாய்..,? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய்..,?” என்று கேட்பார்கள்.
அப்புறம் நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
“அடப் பாவி.., உனக்கு நான்
இப்படிக் கொடுத்தேனே.., என்னை இந்த மாதிரிச் சொல்கிறாயே…,” என்று கொடுத்தும் அந்த இடத்தில்
வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேருகின்றது.
இன்று பெரும்பகுதி இடங்களில்
இந்த நிலைதான்.
நம்பிக்கையின் பேரில் கொடுத்தால்
இப்படித்தான் அது “அம்போ…,” என்று போய்விடுகின்றது. இலட்சக் கணக்கில் கூடப் போகின்றது.
அப்புறம் நீங்கள் வேதனைப்படாமல் என்ன செய்வீர்கள்?
அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம
சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று துடைத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்தல் வேண்டும்.
கண்ணின் நினைவைக் கொண்டு வந்து
ஈஸ்வரா என்று சொல்லி (புருவ மத்தியில்) உயிருடன் இணைக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின்
எண்ணம் வரும்.
கண்ணின் நினைவை இப்படிக் கொண்டு
வரவில்லை என்றால் இங்கே இருப்பதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றிவிடும். நீங்கள் என்னதான்
எண்ணினாலும் கூட ஈஸ்வரா என்று நினைக்கச் சொல்லாது.
ஆக, நான் (ஞானகுரு) எப்படித் தவம் இருக்கின்றேன்?
ஒவ்வொரு நாளும் நம் குருநாதர்
காட்டிய அருள் வழியில் அண்டத்தையே சுழன்று நீங்கள் அந்தச் சக்தியின் நிலைகளைப் பெறுகின்றேன்.
அதை உங்களுக்கெல்லாம் கிடைக்க
வேண்டும் என்று சொல்லித் தவமிருக்கின்றேன். நீங்கள் பெறவேண்டும், நீங்கள் வளர வேண்டும்
என்று சொல்லி நான் தவமிருக்கின்றேன்.
அந்த மகரிஷிகளின் அலைகள் உங்களுக்குள்
வரும் பொழுது நீங்கள் எண்ணும் பொழுது எளிதில் உங்களுக்குக் கிடைக்கின்றது. நீங்கள்
பெறவேண்டும் என்று நான் தவமிருக்கும் பொழுது உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
ஆகவே, அவரவர்கள் இந்தக் காற்றில்
கலந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் அந்தப் பலனைப்
பெறலாம்.
சிலர் என்ன செய்கின்றார்கள்?
சாமி கொடுப்பார் என்றேன் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் எதைக் கொடுப்பது என்று
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த உணர்வான சத்தை உங்கள்
உயிரான ஜீவ அணுக்களுக்குள் உங்களைக் காத்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகளுக்குள்
தீமையை விளைவிக்கும் அணுக்களில் இந்த உணர்வை இப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் உபதேசித்துக்
கொண்டுள்ளேன்.
உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு
அணுக்களிலும் இதைச் சேர்ப்பிக்கின்றேன்.
மனிதனின்
வாழ்க்கையில் நாம் யாரும் தவறு செய்யவில்லை.
அவரவர்கள் எண்ணி
எடுக்கும் பொழுது பிறிதொரு தீமையான உணர்வுகள் அதிகமாக வலுப் பெறப்பட்டு அவர்களின்
செயல்களையே தடைப்படுத்தும். அவரை அந்த நிலைக்கே அழைத்துச் செல்லும்.
ஆகவே, அதிலிருந்து
மீள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது. உங்களுக்குக் கொடுப்பதோ மிக மிக
சக்தி வாய்ந்த நிலைகள்.
நான் இப்பொழுது
சொல்கிறேன் என்றால் நீங்கள் பேரண்டத்தை அப்படியே அலசிப் பார்க்கலாம். ஒவ்வொரு
நேரத்திலும் இந்த உணர்வுகள் வளர வளர வளர வளர நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு செடி வளர்ந்து
வரப்படும் பொழுது முதலில் இலைகள் வளர்கின்றது. பின் அதிலே பூவைப் பார்க்கின்றோம்.
பூவில் இதழ்களும் உதிர்ந்துவிடுகின்றது. அதிலே கருக்களின் நிலைகள் உருவாகின்றது.
காயாகின்றது தன் வித்தின் தன்மை உருவாக்குகின்றது.
அதைப் போல உங்களுக்குள்
ஒவ்வொரு அணுக்களிலும் இந்த மகரிஷிகளின் உணர்வுகளை ஒட்டச் செய்து இதைப் பெருக்கச்
செய்து கொண்டுள்ளோம்.
நீங்களும் மகரிஷிகளாக ஆக முடியும்.