ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2016

நாம் இயங்குகின்றோமா...? அல்லது வேறு எதும் நம்மை இயக்குகின்றதா...?

கடவுள் என்று தனித்து ஒருவன் இல்லை.

சேர்த்துக் கொண்ட உணர்வு எதனுடன் இந்த
உயிரின் நட்சத்திரப் பொறிகள் அது இயக்குகின்றதோ
எதிர் நிலையான உணர்வுகள் வரும்போதுதான்
அது இயக்குகின்றது.

மின்சாரத்தில் எதிர் நிலை இல்லையென்றால் அதன் உணர்வின் தன்மை இந்த ஒளி தெரியாது. மின்சாரத்தின் தன்மையை நாம் பூமி அதை இழுக்கப்படும்போது அதீதமாக வரும் நிலையை பூமி மீண்டும் இழுத்துச் சமப்படுத்துகிறது.

ஆக, இன்று மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்தாலும் அதிலிருந்து பூமி (எர்த்) கொடுக்கவில்லையென்றால் அது மற்ற இடங்களுக்குப் பரவி “எர்த்”(ஆகிவிடும்) - மற்ற பொருள்களில் இது ஊடுருவிவிடும்.

எர்த் வயர் கொடுத்து இணைக்கவில்லையென்றால் நம் வீடுகளில் அதீதமான நிலைகளில் மின்சாரம் மற்ற ஈரம் பட்ட திசைகளில் அது ஈர்க்கப்பட்டு பல ஆபத்தை உண்டாக்கும்.

மின்சாரத்தை நாம் தொட்டாலோ நம்மைக் கருக்கிவிடுகின்றது.

இதை விஞ்ஞான அறிவில் கண்டு கொண்டு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வகையில் காந்தப் புலனறிவு மற்ற காந்தப்புலனுடன் இருக்கும்போது ஊடுருவி அது எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்து அதைத் தடைப்படுத்துவதற்கு
எதிர்மறையான கம்பியைப் போட்டுவிட்டால்
அதைத் தாண்டி மின்சாரம் செல்வதில்லை என்று செயல்படுத்துகிறார்கள்.

ஆக, எதிர் மறையான நிலைகளில் வயரிலே சென்றாலும் மனிதன் தன் சிந்தனையில் வயரில் மூன்றையும் இணைத்துவிடுகிறான். சமப்படுத்திய நிலைகளில் இந்தப் பக்கம் கசிவு வருவதில்லை.

எலெக்ட்ரிக் என்று கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு அது எவ்வாறெல்லாம் செயல்படுகின்றது என்று கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை மீண்டும் செயலுக்குக் கொண்டு வருகிறார்கள்.

கற்றுணர்ந்த உணர்வு பதிவாக்கும்போது நினைவின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அந்த உணர்வுக்குத் தக்க செயலாக்கும் தன்மை வருகிறது.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு நிலைகளிலும்
மனிதன் எவ்வாறு இயங்குகின்றான்?
அன்று வாழ்ந்த மனிதன் காட்டு விலங்குகளோடு எப்படி வாழ்ந்தான்?
அகஸ்தியன் எப்படி விண்ணின் ஆற்றல்களைப் பெற்றான்?
துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்?

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள் கொண்டு அதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நமக்குள் அணுவாக மாற்றுகின்றது.

கருத்தன்மை அடைந்து அது அணுவானால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது.

எந்த உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்தத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் எல்லை அடைந்து அங்கே செல்கிறது.
அந்த உயிருடன் எண்ணியபின்
எந்தக் கண்ணால் அது கவர்ந்து
தன் உடலுக்குள் அது கவரும் சக்தி பெற்றதோ
அந்தக் கண்ணுக்கு ஆணையிடுகின்றது.

அப்பொழுது இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை பரவியிருப்பதை
இந்தக் கண்ணின் காந்தபுலனறிவு நம் உடலுக்கு முன் குவித்து,
உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து,
உடலுக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்து,
அதனை வளர்க்கும் தன்மை கொண்டு,
அதை இயக்கவும் செய்கின்றது.

இயற்கையில் எவ்வாறு அது இயக்குகின்றது என்பதை நமது குருநாதர் நேரடி அனுபவமாகக் காட்டினார்.
ஆக, உன்னை நீ அறிந்து பார்,
நீ இயக்குகின்றாயா? அல்லது
நீ நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா?

நீ எதை நுகர்கின்றாயோ அதன் உணர்வுதான் உன்னை இயக்குகின்றது. அப்பொழுது நீ எதை நுகர வேண்டும்? என்று வினா எழுப்புகின்றார்.

தன்னை அறிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற மகரிஷிகள் இன்று உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்று ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அதை உன் உடலுக்குள் சேர்த்து தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் நிலை பெறவேண்டும் என்பதைத்தான் உணர்த்தினார் குருநாதர்.

உங்களுக்கும் யாம் அதைத்தான் சொல்லி வருகிறோம்.