அந்த அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தி நீங்கள் பெறும் தகுதியை அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றோம்.
உங்கள் உடலில் பதிவான அந்த
நினைவுகளை ஊட்டி அந்த மகரிஷிகளின் உணர்வை இப்பொழுது உங்களைப் பெறச் செய்வதற்கு இந்த
நினைவின் நிலையைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன்.
ஏனென்றால், சொல்லாக வெறுமனே
சொல்லிவிட்டுப் போவதில்லை.
அதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும்,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “நீங்கள் பெறவேண்டும்..,” என்று தான் முதலில் நான் தியானிப்பேன்.
பின் அது “உங்களுக்கெல்லாம்
கிடைக்க வேண்டும்..,” என்று தவமிருப்பேன். ஆகவே இதுதான் தவம் என்பது. இந்தத் தவத்தின்
பலன்களை நீங்கள் அனைவரும் பெறவேண்டும்.
நான் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால்
பத்தாது.
நீங்கள் எல்லோருமே தீமைகளை
அகற்றக்கூடிய சக்தி பெறவேண்டும். உங்கள் பேச்சால் மூச்சால் பிற தீமைகளை அகற்றப்படவேண்டும்.
உங்கள் பேச்சும் மூச்சும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.
கேட்டுணர்ந்தோர் உணர்வுக்குள்
ஊடுருவி அந்தத் தீமையின் உணர்வுகள் அது அடக்ககப்பட வேண்டும்.
இந்த வழியில் நாம் வந்தால்
தான் இந்த விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளிலிருந்து நம்மை நாம் மீட்டிக் கொள்ள முடியும்.
நமது குருநாதர் காட்டிய நிலைகள்
எல்லாம் - உங்கள் அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் செய்தார். அவன் அமைத்துக் கொண்ட
கோட்டை, கோவில் என்று உங்கள் உடலை மதிக்கச் செய்தார்.
அந்த உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய
காரணமும் நல் வழிப்படுத்தும் உயர்ந்த குணங்களை அது என்றும் நிலைத்திருக்க வேண்டும்
என்றும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்றும் “நீ இதைத் தவமாக
இரு..,” என்று கட்டளையிட்டார்.
அதன் வளர்ச்சி பெற்ற பின்
அங்கே அவர்கள் விடும் மூச்சலைகள் இங்கே காற்றிலே பரவும். அவர்கள் மகிழ்ச்சி பெறும்
பொழுது அதைக் கண்டு நீ மகிழ்வாய் என்றால் அந்த உணர்வு உனக்குச் சொந்தமாகும் என்றார்
குருநாதர்.
உனக்குள் இருண்ட நிலையைத்
தெளிவாக்கும். தெளிந்த மனதையும் உனக்குள் உருவாகும்.
பின் எதை நீ எண்ணுகின்றாயோ
வானின் இயல்பு நீ பெறவேண்டும் என்றும் அனைவருக்கும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது
அதன் வளர்ச்சி இங்கே வளர்ந்து இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்த உடலை விட்டு நீ அகன்றாலும்
அவர்களின் உணர்வின் தன்மை உந்து விசையால் விண் செல்லவும் இது உதவும்.
இந்தப் பேருண்மையைக் காட்டியதால்
அதன் வழியில் தான் நீங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தவமிருக்கின்றேன்.
இதைப் போல “உங்களுக்கு வேண்டும்..,”
என்று விரும்புவதற்குப் பதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள்
தியானியுங்கள். உங்கள் சார்புடையோருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் அவர்கள்
உடல் நலமாக இருக்க வேண்டும் என்று தவமிருங்கள்.
இந்தத் தவத்தின் பலனை நிச்சயம்
நீங்கள் பெற முடியும். ஆக, அந்த விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும்.
“தனக்கென்று பெறவேண்டும்”
என்று எண்ணிவிட்டால் தான் எண்ணிய நிலைகள் அந்தக் காலம் வரும் வரை எதிர்ப்பார்ப்போம்.
எதிர்பார்த்த நிலைகள் நடைபெறவில்லை என்றால் சோர்வடைவோம்.
சோர்வடைந்தால் நமக்குள் விஷத்தின்
தன்மை நமக்குள் கூடிவிடும்.
நாம் எதைப் பெறவேண்டும் என்று
எண்ணினோமோ அதைத் தடைப்படுத்திவிடும். ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல்
வேண்டும்.
எப்பொழுதும் அனைவரும் மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் அதைப் பெற முடியும்.
நம் நண்பர்களோ, நாம் பார்க்கும்
இடங்களிலோ, தொழில் செய்யும் இடங்களிலோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். அவர்கள்
உடல் நலம் பெறவேண்டும் என்று தவமிருந்தால் அந்தத் தவத்தின் பலனை நிச்சயம் பெற முடியும்.
கோவிலில் போயிருந்து இந்தத்
தெய்வத்தை நான் தவமிருந்து பெறுவேன் என்றால் இது நடவாத காரியம்.
ஆகவே, எல்லோரும் நலம் பெறவேண்டும்
என்று எண்ணினால் இந்தத் தவம் தான் உண்மையான தவம்.
ஆகையினால் நமது குருநாதர்
காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுவோம். அனைவரும் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியைப் பெறுவோம் மகிழ்ந்து வாழ நாம் தவமிருப்போம்.