ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2016

அணுக் கதிரியக்கங்களை ஒளிக்கதிராக மாற்றி "ஒளியாக மாறிய அகஸ்தியனின் ஆற்றலை எல்லோருக்கும் கிடைக்கச் செய்" என்றார் குருநாதர்

பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படி நட்சத்திரங்கள் தன் கதிரியக்கப் பொறிகளால் மற்றதை அடக்கித் தன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி அது தனக்குள் எப்படிக் கவர்ந்து கொள்கின்றது…?

நட்சத்திரங்கள் அவ்வாறு வெளிப்படுத்தும் உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வரப்படும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் எதிர்மறையாகத் தாக்கப்படும் பொழுது பூமிக்குள் எவ்வாறு மின்னல்கள் எவ்வாறு மின்னுகின்றது…?

அதே சமயம் இந்த மின்னல் இதனுடைய உணர்வுகள் மற்ற தாவர இனங்களில் இது கலந்திருந்தால் அந்தச் செடியை எப்படித் தாக்குகின்றது…?

அதே மின்னலின் உணர்வுகள் பூமிக்குள் ஊடுருவி நடுமையம் எவ்வாறு அடைகின்றது…? இதையெல்லாம் கண்டுணர்ந்தவன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்.

இப்பொழுது மனிதன் தன் கண்டுபிடிப்பால் இத்தகைய மின்னலின் ஒளிக் கதிர்கள் இந்த மண்ணில் மறைந்திருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு அதிலுள்ள கதிரியக்கப் பொறிகளை அணுவைப் பிளந்து அணுவைக் கூட்டி அணுகுண்டாக அதை உருவாக்கி அதை வெடிக்கச் செய்கின்றான்.

வெடிக்கச் செய்யப்படும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் மற்றொன்றோடு மோதப்படும் பொழுது இந்தக் கல்லுக்குள் இருக்கும் அதே கதிரியக்கப்பொறியுடன் அதனுடன் இணையும் போது இந்தக் கல்லே ஆவியாக மாற்றிவிடுகின்றது.

உலோகங்கள் எதுவானாலும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறியுடன் மோதப்படும் பொழுது தங்கமோ இரும்போ, மற்ற உலோகங்களும் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.

மாற்றிப் புயலைப் போலச் சுழன்று கொண்டு அதனின் உணர்வுகள் எதிலே சேர்கின்றதோ தன் இனத்தின் தன்மையைப் பெருக்கி அது தன் வளர்ச்சியிலே கொண்டு போகின்றது.

அதைப் போன்று அன்று அகஸ்தியன் விஷத்தின் தன்மையை, அணுவின் தன்மையைத் தனக்குள் அடக்கி, இருளைப் பிளந்து அதிலே நஞ்சின் தன்மையை நீக்கிவிட்டு நச்சுத் தன்மை அற்றதைத் தனக்குள் சேர்க்கின்றான்.

விஞ்ஞானியோ கதிரியக்கப்பொறிகள் தனக்குள் வந்தாலும் அதை வேகமாகச் செலுத்தச் செய்து இயந்திரங்களைத் துரித வேகத்தில் இயக்கும்படிச் செய்கின்றான்.

அதிலே வரும் கதிரியக்கப்பொறிகளை அடக்கச் செய்யும் ஹைட்ரஜனைக் கலந்து அதனுடைய வீரியத் தன்மையைக் குறைக்கும்படிச் செய்து இயந்திரங்களை இயக்குகின்றான் விஞ்ஞானி.

மெய்ஞானியான அகஸ்தியனோ தன் (தாய் கருவில்) சந்தர்ப்பத்தால் கிடைத்த இந்த உணர்வினை 27 நட்சத்திரங்கள் ஒளிக் கதிர்கள் வீசிய அந்த இயக்கச் சக்திகளைத் தன் பார்வையால் அதனின் செயலாக்கத்தை மாற்றி தன் உடலுக்குள் கதிரியக்கங்களாக மாற்றினான்.

அதனின் துணை கொண்டுதான் இந்தப் பூமியின் ஈர்ப்பின் நிலையும் அதனின் வளர்ச்சியின் தன்மையையும் தெளிவாக்கினான்.

மனிதன் இந்த உடலைவிட்டு அகன்றபின் இதிலே உள்ள நஞ்சின் தன்மையை ஒளிக் கதிராக மாற்றும் நிலை எது? என்று தன்னில் தான் முதன்முதலில் கண்டுணர்ந்தவன்தான் அகஸ்தியன்.

துருவத்திலிருந்து நம் பூமி கவர்வதை நேரடியாகவே அதனின் விஷத்தை ஒடுக்கினான். ஒளியின் கதிராக மாற்றும் உணர்வின் உடலாக மாற்றினான். அகஸ்தியன் இந்த உடலை விட்டுச் சென்றபின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் தன் வலிமையான எண்ணத்தால் கூர்மையான நிலைகள் கொண்டு விண்ணிலே பார்க்கப்படும் பொழுது தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிக் கதிராக மாற்றினான்.

அகஸ்தியன் பெற்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நான் எனது வலிமை கொண்டு உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து இதைப் பெறச் செய்தேன். பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டு எனக்குள் பெற்ற சக்தியை உனக்குள் கொடுத்து அதை எடுக்கச் செய்கின்றேன்.

நீ இதன் வழியில் இதைப் பெற்றால் உனக்குள் இதனின் நிலைகள் வரும். ஆனாலும், நீ ஒருவனே இந்தப் பலனைப் பெற முடிகின்றது.

ஆகவே, பலரும் இந்தப் பலனைப் பெறவேண்டும் என்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்? என்று உபதேசித்தருளினார்.

ஒவ்வொரு உடல்களிலேயும் நீ கண்ட உணர்வின் அந்த ஞான வித்தை விதைக்கப்படும் பொழுது மெய் உணர்வுகள் அங்கே பெருகி “விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி நீ செய்ய வேண்டும்” என்றார்.

இதை மற்ற மக்கள் மத்தியிலே பதியச் செய்யப்படும் பொழுது அவர்கள் எண்ணங்களிலும் இதைப் பெற ஏதுவாகும்.

அவர்களுக்குள் பதிந்த நிலைகள் வளர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையில் நீ எடுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தும் அவர்கள் பெறவேண்டும் என்று “நீ தவம் இருக்க வேண்டும்” என்றார் குருநாதர்.

நீ துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்கின்றாய்.., உன்னிலே விளைய வைத்தாய்.

ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அந்த வழியில் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நிலையைத் தவமிருக்கும்படிச் சொன்னார்.

அகஸ்தியனைப் போன்ற மெய்ஞானிகளாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகவேண்டும் என்ற ஆசையில் குருநாதர் காட்டிய வழியில் தவமிருப்பதே எனது வேலை.