ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2016

“அடுத்தவரை நம்பினேன்.., மோசம் போனேன்” என்ற நிலைகள் நமக்கு வேண்டாம்

தந்திரமாக ஏமாற்ற எண்ணுகிறவன் என்ன செய்கிறான்?

நாம் ஒன்றின் மேல் ஆசைப்படுகிறோம். ஆசைப்பட்டவுடன் அவனும் ஆசைப்படுகிறான். இந்த மனிதனிடம் எப்படிச் சொன்னால் நாம் காசு வாங்கலாம் என்று ஆசைப்படுகிறான்.

ஆகவே, காசை வாங்கும் ஆசையை ஊட்டும் போது நாமும் செல்வம் தேட வேண்டும் என்கிற ஆசையில் அவனிடம் சிக்குகிறோம்.

சிக்கியபடி, அவன் செய்து தருவான் என்ற நம்பிக்கையில் நாம் இச்சைப்படுகிறோம். அந்த உணர்வுகள் கிரியையாகின்றது. அதன் வழியில்  நாம் செல்லத் தொடங்கி விடுகின்றோம்.

ஆனால், வள்ளி என்ற வலிமை மிக்க சக்தியை நாம் பயன்படுத்தியிருந்தால் அது வேறு. 

நாம் ஆசை என்ற இச்சையைச் சேர்க்கப்படும்போது மனிதன் என்ற வலிமையை இழந்து விடுகின்றோம்.

வள்ளி என்ற நிலையை மறந்து, இச்சை என்ற உணர்வுகளுக்கு நாம் செல்கின்றோம்.

அதன் உணர்வின் தன்மை நாம் கவரப்படும்போது அவன் ஏமாற்றும் நிலை கொண்டு அவனை வாழ வைக்க நம்மை ஏமாற்றுகின்றான். அதன் வழிகளில் செல்லும்போது அவன் வளர்கின்றான்.

அவனை நம்பினேன்.., நான் மோசம் போனேன் என்ற வேதனையைத்தான் நாம் எடுக்க வேண்டியுள்ளது.

இச்சையினால் வரும் ஆசை நம்மைறியாமல் வேதனை என்ற விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க உதவுகின்றது, வாலி. 

இதுதான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி.

வள்ளி - வலிமைமிக்க சக்தி கொண்டு தெளிந்த மம் பெற வேண்டும் என்று அந்த வலிமை பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதன் வழி தெய்வானையாகி ஏமாற்றும் உணர்வைப் புரிந்துகொள்ளும் நிலையும் அவனுக்குள் நம் உணர்வு அடிமையாகாதபடி காத்துக் கொள்ள முடியும்.

ஆனால், ஏமாற்றுபவர்களிடம் காசைக் கொடுத்துவிட்டு பின்னாடி துரத்திக் கொண்டே போகிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள், இன்றும் இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு எங்கேயும் போக வேண்டியதில்லை. லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் வருகிறது என்ற விளம்பரத்தைப் போட்டால் இருக்கின்ற பணம் எல்லாவற்றையும் போட்டு ஒரு கோடியில் சம்பாரித்துவிடலாம் என்று செல்வோர் பலர் உண்டு.

அதிலே இச்சைப்பட்டுக் கொண்டு இருக்கிற காசையெல்லாம் விட்டுவிட்டு காடு மேடு, தொழிலை எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள்.

நிச்சயம் நாளைக்கு ஒரு கோடி வரும் என்ற கற்பனை கட்டிக் கொண்டு அந்த இச்சையின் கிரியையில் வரப்படும்போது கற்பனையில் மிதந்து இங்கே வீட்டில் சொல்வதும் இல்லை.

சாப்பாட்டுக்கு இல்லை என்று கூடக் கவலைப்படுவது இல்லை. வாங்குகிற காசை விட்டுவிட்டு, வீட்டில் குழந்தை குட்டியைக் கூட கவனிப்பதில்லை. இச்சையெல்லாம் அந்த கோடி ரூபாய் மேல் தான் இருக்கும்.

இப்படி உலக நிலையில் நாட்டைக் காக்கும் அரசாவது மக்களை ஏமாற்றக்கூடாது என்ற நிலைக்கு வருகின்றார்களா என்றால் இல்லை.

ஏனென்றால், ஆசையை ஊட்டி அதன் வழியில் வரக்கூடிய வருமாத்தை. வைத்து நாட்டைக் காக்கலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். கோடி பணம் வந்து விடும் என்று விளம்பரம் செய்கிறார்கள்

நாட்டுக்குள் வாழும் மக்களுக்குள் அந்த இச்சையை ஊட்டும் போது அரசே செய்யப்படும்போது நாம் நுகர்வதற்கு என்ன? ஆகவே, நாம் எதிலே போகிறோம்?

ஆனால், மக்களை நல்வழிப்படுத்தத்தான் அரசு. செய்கின்றார்களா என்றால் இல்லை.

இன்று உலகம் முழுவதற்கும் நமது நாடு மட்டும் அல்ல. அவன் நாட்டைக் காக்க இத்தகைய தவறுகளைச் செய்து, மக்களை அவன் நிரந்தர நிலைகள் பெற வேண்டும் அதற்காக வேண்டி உபாயத்தைத் தேடுகிறான்.

செல்வத்தைத் தேடும் மக்களுக்காக சில நிலைகளைப் போட்டு விட்டால் அதன் வழிகளில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், தன் கையிலிருந்து காசு போவது தெரியாது.

இதில் எத்தனையோ பேர் ஏழ்மையாகின்றார்கள். பணம் எல்லாம் போய் விட்டால் என்ன ஆகும்? கடைசியில் விரக்தியாகிவிடுவார்கள்.

முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்வார்கள்? திருடப் போகிறார்கள். அதே சமயத்தில், கொடுத்த காசு என்ன ஆனது என்று திரும்பக் கேட்டால் கொலை கூடச் செய்கின்றார்கள்.

இதற்கு மூலம் யார்?

இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் போது முடியவில்லை என்றால் தன் உணர்வின் தன்மை இப்படிச் செய்யும்.

அதிலேயும் முடிவு இல்லை என்றால் விஷத்தைக் குடித்து மனிதன் எத்தனை கோடி காலம் வாழ்ந்தனோ, மனிதனானோ ஒரு நொடிக்குள் விஷத்தைக் குடித்து இவன் அந்த கௌரவப் பிரச்சினையால் இந்த உடலையே அழித்து விடுகின்றான்.

விஷத்தின் தன்மை குடித்த பிறகாவது தப்புகிறானா என்றால் இல்லை.

விஷத்தின் உணர்வுகளை அந்த அணுக்களில் சேர்த்து உயிரிலே சென்றால் எவன் அதற்குக் காரணம் என்று எண்ணினானோ அவன் உடலுக்குள்ளே சென்று அந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்துகின்றான்.

பின் அந்த விஷத்தின் தன்மை ஆனபின் என்ன செய்கின்றது? இந்த உடலை விட்டுச்  சென்றபின்  விஷத்தைப் பாய்ச்சி ரசித்துச் சாப்பிடும் பாம்பினமாகப் பிறக்கின்றது.

இது தான் கண்ட பலன்.

ஆனால், ஞானிகள் காட்டியது ஆறாவது அறிவு கொண்டு நாம் வள்ளி தெய்வானை. நாம் தீமைகளை எல்லாம் நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதினால் இது அபிஷேகம்.

து தான் பஞ்சாபிஷேகம். அதன் உணர்வுகள் மகிழ்ச்சி என்ற உணர்வு ஆறாவது அறிவு ஒளி. தெளிந்து வாழ முடியும், தெரிந்து வாழ முடியும். நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ முடியும்.