ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2015

அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் நியதிகள்

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை நோக்கி மின்னல்களையும் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளையும் உற்றுப் பார்க்கின்றான்.

தாய் கருவில் பெற்ற சக்தியினால், அகஸ்தியன் உடலில் விஷத்தின் தன்மை முறிக்கும் தன்மை வரும்போது வானைப் பார்க்கும்போது
அவன் உடலிலுள்ள அணுக்கள்
நட்சத்திரங்ளிலிருந்து வரும் வீரியமான
மின் கதிர் இயக்கங்களை அடக்கித் தணியச்செய்து
அதை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகிறது.

மின்னலின் தன்மை ஒன்றுடன் ஒன்று மற்ற நட்சத்திரங்கள் மோதும்போது மோதலின் துடிப்பின் தன்மை வந்து இயக்கச் சக்தியாக மாறி ஓர் உயிரணுவாக மாறுகின்றது.


இதைப்போன்று ஒவ்வொரு தாவர இனங்களிலேயும் இந்த நட்சத்திரங்களின் இயக்கங்கள் அது ஆகப்படும்போது நம் உணர்வாக உணவாக நுகரப்படும்போது இந்த மணம் அந்த உணர்வின் அணுவாக அது மாற்றிவிடுகின்றது.

ஆனால், அணுக்கருவாக மாற்றி நம் இரத்தங்களில் கலந்து அது அந்த அணுத்தன்மை வெடிக்கப்படும்போது எந்த உணர்வுகளுடன் கலந்ததோ அதைத்தான் கவருகின்றது.

எந்தச் செடியில் இந்த மின்னலின் ஒளிக்கற்றைகள் அதிகமாகக் கவர்ந்திருந்ததோ அந்த மின்னல் வரும்போது அது வீரிய சக்தி பெற்று அந்த மின் அதிர்வு கொண்டு அந்தச் செடி அது வளர்கிறது.

இதன் அடிப்படையில் தனக்குள் கொண்டுவரப்படும்போது இந்தச் செடிகள் எப்படி மாற்றமடைகின்றது? ஆனால் அதே செடி மற்ற நட்சத்திரத்தின் உணர்வலைகள் பட்டபின் என்ன செய்கின்றது?

இதை ஓர் உயிரணு நுகர்ந்தபின் அந்த உணர்வின் தன்மை அணுவானபின் அதையே தனக்குள் எடுத்து மற்றதை ஒதுக்கி இது வேண்டாம் என்று ஒதுக்கிச் செல்லுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உணர்வுகள் தான் எதைப் பெற்றதோ அதன் உணர்வின் அறிவாக அது இயக்கி அதைத்தான் அது உணவாக எடுத்துக்கொள்கின்றது.

அவ்வாறு உணவாக எடுத்துக்கொண்டாலும் தன் இரைக்காக மற்றொன்றைக் கொன்று குவித்து தன் உடலின் உணவுக்காக எடுத்துக்கொள்கிறது.

கொடூரமான உணர்வின் தன்மை கொண்டு வெளிப்படும் அந்த உணர்வினை சாந்த உணர்வு கொண்ட உயிரினங்கள் நுகரும்போது
உயிரிலே பட்டு அந்த உணர்வின் கருவாகி,
உடனடியாக அந்த விஷத்தின் தன்மை பாயப்படும்போது
மற்ற சாந்த குணம் கொண்ட அணுக்களில் படர்ந்தபின்
அதன் உணர்வின் வேகத்துடிப்பாகின்றது.

உதாரணமாக நரியை எடுத்துக்கொள்வோம். நரியின் வலுவான உணர்வுகள் சாந்தமான ஆடுக்குள் புகுந்தபின் ஆட்டின் சாந்த நிலையை மாற்றி இந்த அணுக்கள் அதை அதிகமாக மாற்றிக்கொள்கின்றது.

மின் அழுத்தம் மற்ற நட்சத்திரத்தின் தன்மை மோதும்போது மின் கற்றைகளினுடைய நிலைகள் அழுத்தமான நிலையில் பரவுகின்றது. இந்த உணர்வின் உணர்ச்சிகள் செடி கொடி மரங்களில் அதனுடைய அழுத்தம் மின்னல் தாக்கியபின் அதனைக் கருக்குகின்றது.

இதைப்போல அந்த நரியின் உணர்வுகள் ஆட்டின் சாந்தமான உணர்வுக்குள் மோதியபின் அதன் ஆக்கத்தை மாற்றி இதனின் தன்மையாக மாற்றிவிடுகின்றது. இது உடனடி மாற்றம்.

ஆக, நரி அந்த ஆட்டைக் கொன்று விழுங்கப்படும்போது ஆட்டின் தசைகள் நரியின் உடலுக்கு உணவாகின்றது.

ஆனால் ஆட்டின் தசைக்குள் அணுக்களாக இருந்த நிலையோ நரியின் உணர்வுகள் இரண்டும் மோதப்படும்பொழுது அந்த சாந்த உணர்வை அடக்கிவிட்டு அந்த உணர்வின் அணுத்தன்மையாக மாற்றிவிடுகின்றது. இப்பொழுது ஆட்டை இது விழுங்குகின்றது.

நரியின் உணர்வு ஆட்டின் சாந்த உணர்வை விழுங்குகின்றது. ஆக சாந்த உணர்வு கொண்ட ஆட்டை நரியின் கார உணர்வுகள் இதற்குள் இணைந்தபின் சாந்த உணர்வின் தன்மை மறைகின்றது.

அப்பொழுது அந்த ஆடு நரியின் உணர்வுக்குள் வரப்படும்போது அது இழுத்து தன் இனத்தின் அணுக்குட்டியாக
அந்த ஆடு எந்த நரியைக் கூர்மையாகப் பார்த்ததோ
அதன் ஈர்ப்புக்குள் வந்து
ஆட்டின் ரூபத்தை நரியாக மாற்றுகின்றது.

இப்படியெல்லாம் இந்த இயற்கையின் நிலைகள் எவ்வாறு விளைகின்றது என்பதனை ஒவ்வொரு நிலைகளிலும் குருநாதர் உணர்த்தினார்.