ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2015

தீமைகளை அகற்றும் சிவக்குழந்தை சிங்காரவேலன்...!

ஆறாவது அறிவின் தன்மை கொண்டுதான் முருகன் என்றும் குழந்தை என்று இப்பொழுது நாம் பல கோணங்களில் காரணப் பெயரைச் சூட்டி முருகன் ஆலயங்களை வைக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை - முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி, தீமைகளை அகற்றி விட்டு மகிழ்ச்சி பெறும் சக்தியை உருவாக்குவது.

சிவக்குழந்தை சிங்காரவேலன் முருகன். அதாவது சிவன் என்ற நிலையில் இந்த உடலில் உருவான ஆறாவது அறிவின் தன்மையைத்தான் சிவக்குழந்தை என்று சொல்வது

இந்த உடலான சிவத்திற்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அது குழந்தையாக வருகின்றது. தீமைகளை அகற்றும் நிலையாக
அருள் மகரிஷியின் உணர்வுகளை
இந்த உடலான சிவத்துக்குள் நாம் உருவாக்கினால்
நுகரும் மகரிஷிகளின் உணர்வுகள்
சிவக்குழந்தையாக நமக்குள் விளைகின்றது.

ஆறாவது தன்மை கொண்டு இன்று துருவ நட்சத்திரமாக அகஸ்தியனும் அவன் மனைவியும் சிவக்குழந்தையாக வளர்த்து அந்த உணர்வின் தன்மை இன்று ஒளியின் சுடராக இருப்பது போன்று சிவக்குழந்தை என்ற இந்த ஆலயத்தில் நாமும் துருவ மகரிஷியின் ஆற்றலை நமக்குள் பெருக்கும் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

அதைப் பெறச் செய்வதற்கு இந்த உணர்வினை செவி வழி கொண்டு உணர்சிகளைத் தூண்டி உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணுக்குக் கொண்டு செல்கிறோம்.

துருவ மகரிஷியின் ஆற்றலையும் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதையும் அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும் நாம் நுகரப்படும்போது சிவமாகி அந்த உணர்வுகள் அணுக்களாக மாறும்போது நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குழந்தையாக உருவாகின்றது.

இதன்வழி கொண்டு நாம் நுகரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
தீமைகள் அகற்றும் அருள் குழந்தையாக
அருள் சக்தியை வளர்க்கும் குழந்தையாக
சிவக்குழந்தையாக நமக்குள் வளரச்செய்யும்.

சிவக்குழந்தை என்றால் நாம் காரணப் பெயரைத்தான் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர ஆனால் சிவக்குழந்தை என்பது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் ஓ என்று ஜீவ அணுவாகி இந்த உடலின் தன்மை தன்னுடன் அது உறையப்படும்போது சிவம் என்றும் அதிலிருந்து இயக்கும் அணுக்களை அதனுடைய குழந்தைகள் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள் அன்றைய ஞானிகள்.

அதைத்தான் நாம் நுகரும் உணர்வுகள் எக்குணமோ அது உணர்வின் தன் உடலாக்கப்படும்போது சிவன் என்றும் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையை அந்த அணுக்களை வினை என்றும் விநாயகா என்றும் காரணப் பெயரைச் சூட்டி பல கோணங்களிலும் நாம் இந்த உணர்வின் உண்மையின் தன்மையை நாம் அறிந்து அதன் அறிவாக இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்றிடும் நிலைகள் பெறத்தான் இதைச் செய்தது.

ஆகவே ஆறாவது அறிவு கொண்ட நாம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம்மைக் காத்திட தீமையை வென்று இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையைச் சிவமாக்கி அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் குழந்தையாக்கிட வேண்டும்.

குழந்தைக்கு மீண்டும் மீண்டும் நாம் உணவு ஊட்டி அதை வளர்ப்பது போல் இந்த சிவக்குழந்தையை வளர்த்திட
அருள் மகரிஷியின் உணர்வுகளை
நாம் மீண்டும் மீண்டும் நுகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

அப்படி அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி வளர்த்திடும்போது இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் என்றும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நம்மை இணைக்கச் செய்யும்.