ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2015

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன...?

பிரம்ம முகூர்த்தம் என்று ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒன்றை ஒன்று உருவாக்கி மாற்றி அமைக்கும் சக்தி, அதாவது இன்று நாம் மனிதனாக இருக்கும் நிலையை
ஒளியின் தன்மையாக நாம் இணைத்திடும்
அத்தருணம் தான் பிரம்ம முகூர்த்தம்.

ஆக இன்று திருமணமாகி இருமனமும் ஒரு மனமாக ஆகும்போது இந்த மனிதர்களுக்குள் இருந்து அதை இருவரும் ஒன்றாகச் சேர்ககப்படும்போது இரு எண்ணங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கருவாக்கப்படும்போது அது தன் இனக்குழந்தைகளாக உருவாக்க முடிகின்றது.

அருள் ஞானிகள்  வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்று விட்டு
கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
உணர்வின் தன்மை தனக்குள் ஒன்றாக்கி
உணர்வின் தன்மை ஒளியின் அணுக்களாக மாற்றி
இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவைகளிலிருந்து வரும் சக்திகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றப்படும்போது அதனின் உணர்வை கணவனும் மனைவி இருவரும் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துருவ மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெறவேண்டும் என்று இந்த உணர்வினை மனைவி தன் உடலாக சிவமாக்கி அதன் உணர்வின் தன்மை தனக்குள் அணுக்கருவாக்கிடல் வேண்டும்.

அந்தக் கருவின் உணர்வை தனக்குள் சேர்த்து, கணவன்பால் பற்று கொண்டு அந்த மகரிஷியின் உணர்வுகள் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்க வேண்டும்.

அதே போல கணவன் அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி தனக்குள் பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை தனக்குள் அணுக்கருவாக்கி, அது தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வினை இருவரும் ஒன்றாகச் சேர்த்து,
இந்த உணர்வின் தன்மையை உடலில் உள்ள அந்த அணுக்களுக்கு
அருள் மகரிஷியின் உணர்வுகளை இணைத்திட வேண்டும்.

இரு இணைப்பும் ஒன்றாகி இந்த உணர்வின் தன்மை வலுப்பெறப்படும்போது தீமை என்ற நிலைகளை தனக்குள் அணுகாது அந்த தீமையை அகற்றும் உணர்வின் கருவாக அது உருப்பெறுகின்றது. ஆகவே தான் இதை பிரம்ம முகூர்த்தம் என்பது,

கணவனும் மனைவியும் முகூர்த்த நாளாக அதன் வழிகளில் இவர்கள் எண்ணங்கள் ஒன்றாகி இணைப்பின் தன்மைகள் வரப்படும்போதுதான், அதிலே கருவுறும் உணர்வுகள் அந்த மனிதனாக உருவாக்குகிறது.

அதைப் போன்று கணவனும் மனைவியும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மையை தமக்குள் கருவாக்கி இருவருமே ஒன்றாக இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இணைத்து இந்த உணர்வின் தன்மை இணைந்த அணுக்களாக தனக்குள் உருவாக்குவதும் அவ்வாறு உருவாக்க இந்த உணர்வுகள் இந்த உடலில் உள்ள அணுக்களில் தீமை செய்யும் அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்றி அமைக்கும் சக்தியாக உருப்பெறும்.

ஆகவே இத்தகைய உணர்வை தனக்குள் இணைத்து உருவாக்கும் ஆற்றல் பெற்றது நமக்குள் இருக்கும் இந்த ஆறாவது அறிவு.

இன்று ஒருவன் தீமை செய்கின்றான், அவனை அழித்து விடுகிறேன் என்று உணர்வினை நுகர்ந்து விட்டால் அதன் உணர்வை தனக்குள் வளர்த்து தீமை செய்யும் உடலாக மாற்றுகின்றான்.

தீமையின் நிலைகளை தனக்குள் செயலாக்கும் உணர்வாக வளர்த்து தீமை செய்யும் எண்ணங்கள் கொண்டு தீமை செய்யும் உடலாக மாற்றி விடுகின்றது.

தீமையை அகற்றிடும் அருள் ஞானியின் உணர்வுகளைப் பெற்று  கணவனும் மனைவியும் இந்த இணைந்த உணர்வுகள் சேர்க்கப்படும்போது இந்த உடலுக்குள் தீமையை உருவாக்கும் அத்தகைய அணுக்களைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் அந்த நிலையைப் பெறும்
இணைந்திடும், இணை சேர்க்கும் உணர்வுகள்தான்
பிரம்ம முகூர்த்தம் என்பது.