ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2015

எறும்புப் புற்றில் அமர வைத்து எறும்பு கடிக்கும் பொழுது உன் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று காட்டினார் குருநாதர்...!

ஏறும்புப் புற்றிலே போய் உட்கார்ந்தால் எறும்பு கடித்தால் நாம் சும்மாவா இருப்போம் வேதனை தாங்காது நசுக்கத்தான் செய்வோம்.

நான்கு எறும்புகளை நசுக்கியவுடனே அந்தப் புற்றிலிருந்து வருகின்ற அதிகமான எறும்புகள் என்னைக் கடித்துக் கொண்டேயுள்ளது. நான் நசுக்கிக் கொண்டே இருக்கிறேன். வலி தாங்கமுடியவில்லை. பிறகு நான் எங்கே தியானம் எடுப்பது?

இதையெல்லாம் உணர்த்துவதற்குத்தான் குருநாதர் எம்மை எறும்புப் புற்றிலே உட்கார வைத்து அந்த உணர்வுகள் எப்படி இயங்குகிறது? என்று காட்டினார்.

நாம் நினைக்கிறோம் எறும்பு கடித்துவிட்டது என்று.

அந்த உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகிறது? நாம் நசுக்கியவுடனே அது உடலிலிருந்து வெளிப்படும்பொழுது எறும்பின் உயிரான்மாக்கள் நமக்குள் எப்படி வருகிறதென்று.
         
மனிதனாக நாம் வளர்ச்சியானபின் இந்த எறும்பின் உயிராத்மா நமக்குள் எவ்வாறு வளர்கின்றது. எப்படி நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது? அது மனிதனாக எப்படிப் பிறக்கின்றது?

மனிதனாக உருபெரும் அந்த உணர்வின் ஆன்மாவாகப் பெருகுகின்றது.  ஆனால், நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளில் நஞ்சின் தன்மை கொண்ட உணர்வுகள் ஒன்றாகச் சேர்கின்றது.

சாதாரணமாக வீடுகளில் நாம் எறும்புகளை கிரசினை வைத்துக் கொளுத்துகிறோம். அதே சமயத்தில் எறும்புகளை நாம் நசுகுகிறோம். அது அடர்த்தியான நிலைகள் வரப்படும் பொழுது ஊடுருவி நமக்குள் இருக்கும் அணு திசுக்களில் அதிகரித்துவிடுகிறது. தன் இனமான நஞ்சைப் பெருக்குகின்றது.

ஆக, பல எறுமபுகளை நசுக்கிவிட்டோம், நம்மைக் காத்துவிட்டோம் என்று எண்ணினாலும் அந்த எறும்பின் உணர்வுகள் நமக்குள் சென்று அது சிறுகச் சிறுகச் சேர்ந்து அது ஒருக்கிணைந்து இது ஒரு கேன்சருக்குண்டான வித்தாகவும் உருவாகின்றது என்று குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

அது விளைந்தபின் நமக்குள் அணு செல்லின் தன்மை விஷத்தன்மை அடைந்தபின் ஒவ்வொரு அணுவும் இந்த விஷத்தின் இயக்கத்தால் எப்படி இயங்குகின்றது?

அதற்குச் செல்லும் இந்த விஷத்தின் தன்மை இது உறிஞ்சிக் கொள்ளும் பொழுது மற்ற நல்ல குணங்களுக்குண்டான விஷம் கிடைக்கவில்லை என்றால் அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் எவ்வாறு தணிகின்றது?

இந்த அணுவின் நிலைகள் தன் உடலுக்குள் சென்றபின் அது சிறுகச் சிறுக விளைந்து அந்த உணர்வின் வித்தாக எவ்வாறு படர்கின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார் குருநாதர்.

கேன்சர் திடீரென்று வருகின்றது என்று. நாம் நினைக்கின்றோம்

இந்த மாதிரி எறும்புகளை நசுக்கும் பொழுது, அதே சமயத்தில் பலரை இம்சிக்கும் போது
அந்த வேதனைகளைப் பாரத்த அந்த உணர்வுகளும்
இம்சிக்கும் பொழுது ரசித்த அதுவும்
இத்தகைய விஷமான நிலைகளில்
அணுக்களாக செல்களில் படர்ந்துவிடுகிறது.
நாம் இம்சிக்கும்பொழுது இப்படி வந்துவிடுகிறது.

இம்சிக்காமலேயே பிறர் இம்சைப்படுவதை, வேதனைப்படுவதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தாலும் அவர் உடலிலிருந்த உணர்வின் தன்மை இந்த வேதனையின் சக்தி எவ்வாறு உருவாகின்றது என்று படிப்படியாகக் காட்டுகின்றார்.

இந்த விஷத்தின் ஆற்றல் எவ்வாறு நம் உடலுக்குள் சேர்ந்து நஞ்சின் தன்மை அடைந்து அது உடலுக்குள் சேர்ந்து நமக்குள் நல்ல உணர்வுகள் விளைந்திடாத நிலைகள் அது எவ்வாறு பெறுகிறது என்று எம்மை எறும்புப் புற்றில் அமர வைத்து இத்தனையும் குருநாதர் காட்டினார்.

இதையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் நாம் எவ்வாறு மீள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
நம்மையறியாமலே இந்த நிலைகள் வரும்.
இதை நீக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வராகன் சாக்கடைக்குள் உள்ள தீமைகளை அகற்றி அதிலே நல்ல பருப்பை நுகர்கின்றது.

அதைப்போல இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தியை நீ எவ்வாறு நுகரவேண்டும்? என்று எறும்புப் புற்றிலிருந்துதான் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டினார்.