ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2015

சுவாசம் உணர்வாகி உணர்ச்சியாகி எண்ணங்கள் தோன்றி எப்படி இயக்கமாகின்றது..? பிடிக்காததைக் கேட்டால் உடனே அதிர்ச்சி ஆவது ஏன்...?

இப்பொழுது நாம் உயிரான நிலைகள் கொண்டு "பிற மண்டலம்" என்பது ஒவ்வொரு மனித உடலும் ஒவ்வொரு சரீரம் என்ற நிலைகள்.

மற்றவர்கள் உடலில் உருவாகிய உணர்வலைகள் வெளிவருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. இங்கே  நம் பூமியின் காற்று மண்டலத்தில் அலைகளாக மாறுகின்றது.

எப்படி சூரியன் தனக்குள் அதைக் கவர்ந்து தனது நிலைகளை எடுக்கின்றதோ இதைப் போல நமது உயிர்
இந்தக் கண்ணுக்குள் இருக்கும் காந்தப்புலனான அறிவோ
உற்று நோக்கி அது இழுத்துத் தனக்குள் பதிவாக்குகின்றது.

கருவிழியோ உடலிலே பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த இன்னொரு காந்தப்புலனோ அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக (நமது காற்று மண்டலமாக) மாற்றுகின்றது.
முன் அழுத்தம் வேறு.
அது பின் அழுத்தம் வேறு.

27 நட்சத்திரங்கள் சூரியனுக்கு ஆன்மாவாக இருக்கின்றது.  அதைப் போன்று நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள்
மற்ற மனித உடலில் உருவாகி உணர்வின் அலைகளாகப் பரவுவதை
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அதை நம் கருவிழி பதிவாக்கியபின்,
அதை நமக்குள் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றும்.

இப்படி ஆன்மாவாக மாற்றும் பொழுது இதன் தொடர்வரிசை, நமக்குள் அந்தக் காந்தப்புலனறிவு கவர்ந்த பின் உயிரிலே பட்டபின் அந்த உணர்வு எதுவோ அதன் வழி நம்மை இயக்குகின்றது.

ஆக நமக்குள் நுகரப்படும் பொழுது நமது உடலில் உள்ள குணங்களுக்கும் அணுக்களுக்கும் உயிர் - மின்சாரம், ஆக அதே சமயத்தில் உணர்வின் அணுக்கள் மற்றொன்று.

தன் இனம் அல்லாது மற்றதின் தன்மை உட்புகும் பொழுது இந்த உணர்வலை “எர்த்”.

அப்பொழுது நமக்குள் இயக்கத்தின் நிலைகள் தடுமாற்றம் ஆகிறது. இந்த உணர்வின் தன்மை எதிர்மறையாகவும் பதட்டத்தையும் ஏற்படுத்தி நமக்குள் பயத்தை உருவாக்கும் நிலைகள் வருகின்றது.

இவையெல்லாம் இயற்கையின் நியதிகள்.

சூரியனுக்கு எவ்வாறு நடக்கின்றதோ இதைப் போலத்தான் நம் உயிரின் தன்மையிலும் இத்தனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றது.

ஆகவே, இதை உணர்வால் அறிகின்றோம்,
உணர்ச்சியால் இயங்குகின்றது,
மீண்டும் உணர்வுகளை எண்ணும்போது எண்ணமாகின்றது.
எண்ணத்தின் தன்மை நுகரப்படும்போது உணர்வாக மாறுகின்றது.
அந்த உணர்ச்சியின் தன்மை இயக்குகின்றது.

ஆகவே உணர்வுகளும் எண்ணங்களும் எவ்வாறு இயக்குகின்றது? என்ற நிலைகளைத்தான் காரணப்பெயர்களை வைத்து தெளிவாக்குகின்றனர்.

இது அகஸ்தியன் தன் வாழநாளில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள். இதையல்லாம் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.