ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2015

மகரிஷிகளின் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று எப்படிச் செயல்படுகிறது...?

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான். இதன் விளக்கம் என்ன?

சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி தாவர இனச் சத்தைக் கவர்ந்துவிட்டால் அதே இனத்திற்கு இந்த உணர்வின் அறிவாக இயங்குகின்றது. 
அது அறியச் செய்கின்றது.
மணத்தைக் கொண்டு காத்துக் கொள்ளவும் செய்கின்றது.

சூரியனால் வெளிப்பட்ட உணர்வு எவ்வாறோ இதைப்போன்றுதான் நமது உயிர் உணர்வை நுகர்ந்து அறியச் செய்கின்றது. அதனின் குணங்களுக்குண்டான அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது.

எதனின் மணத்தின் வித்தாக விளைகின்றதோ புவியின் நிலத்தில் பதிவு செய்யும்போது அதனின் அறிவின் தன்மையாக அதை வளர்க்க சூரியன் உதவுகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிர் எதனின் உணர்வின் தன்மை அணுவாக மாறுகின்றதோ அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.

ஒருவன் வேதனைப்படும் சொல்லைச் சொல்லும்போது அவனை நேரடியாகப் பார்த்தால் அந்த வலிமை மிக்க சக்தி
உங்கள் நல்ல குணங்களை மாற்றிவிட்டு,
“பாவி இப்படிச் சொல்கிறான்.., நான் ஒன்றுமே சொல்லவில்லை”
என்று சொல்ல வைக்கும்.

“என்னதான் சொல்லுங்கள்.., அது எப்படி நீ ஒன்றுமே செய்யாமல் அவன் சொல்வான்” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள். நீ ஒன்றுமே சொல்லாமல் அவர்களாகச் சொல்வார்களா? என்பார்கள்.

இதே சொல் இராமன் அம்பை எய்தால் திரும்பி கணையை வாங்கிக் கொள்வான். நாம் எதனைக் கவர்ந்து சொல்லாகச் சொல்கிறோமோ திரும்பி அது வினாவாக எழும்பும்.

நீங்கள் எவ்வளவுதான் தப்பு செய்யவில்லை என்று சொன்னாலும், தப்பு செய்யாமல் இப்படிச் சொல்வார்களா? என்பார்கள். எதை உருவாக்கி எதனின் சொல்லாக அம்பாகப் பாய்கின்றதோ அதன் சொல்லுக்குள் அதன் நிலை வரும்.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் எதை ஆணையிட்டு அந்த உணர்வின் தன்மையை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றோமோ அதை எலெக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலு கொண்டு மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டுகின்றது.

அதைப் போலத்தான் நமது உயிர் சொல்லின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றிவிட்டதென்றால் அதே இடம் வரப்படும் பொழுது அது மாற்றும்.

இதைப் போல ஒரு மனிதனின் எண்ண வலு அதிகமாகிவிட்டால் அது வாலி ஆகிவிடுகின்றது. ஆனால், நம்முடைய நல்ல குணங்கள் வலு இழக்கப்படுகின்றது. 

வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அவருடைய வலுக்கள் அனைத்தும் அங்கே போய்விடும். எவ்வளவு காரண காரியத்தோடு சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றது?

ஒருவர் வேதனைப்படும் சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள அனைத்தும் வலு இழந்துவிடுகின்றது.

சீதாராமா, அந்த மகரிஷியின் உணர்வின் தன்மை சீதா. அதை நாம் எண்ணப்படும் பொழுது சீதாராமா. இராமன் என்றால் எண்ணம். சீதா என்றால் சுவை.

ஆகவே, எந்த மகரிஷியின் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ
அந்த உணர்வின் சத்தைக் கூட்டப்படும் பொழுது
அந்த உணர்வின் அலைகள் நமக்குள் மாறுகின்றது.

பின் யார் ஒருவர் வேதனைப்படும்படி சொல்கின்றனரோ இதை நம் ஆன்மாவாக இருக்கும்போது மறைந்திருந்து தாக்குகின்றது. வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்து தாகுகின்றான்.

அதை அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தால் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஏற்றித் தன்னைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு கொடிய செயல்கள் வந்தாலும்
அவர்கள் உணர்வுகள் வாலியாக இருக்கக்கூடாது.

கொடிய உணர்வுகள் அது வலிமையாகிவிட்டால் அந்தச் சுவையே உங்களுக்குள் எண்ணமாகி எமனாக வந்துவிடும். ஞானத்தை அழித்துவிடும். இருண்ட சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றி அதைப் பெற முயலவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.