ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 3, 2015

உயிர்–உணர்வு-எலெக்ட்ரானிக் – பிறர் உணர்வு நமக்குள் வந்து எப்படி இயக்குகிறது? எப்படி மாறுகிறது?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். பலர் எழுதியிருப்பார்கள். பார்த்தால் அவரவர்கள் உணர்வுக்குத்தக்கதான் விரிவுரைகள் எழுதியிருப்பார்கள்.

அந்தக் காவியப்பாடல்களில் மூலக்கருத்து ஒன்றை அவன் வெளியிட்டான். ஆனால், அடுத்து வருபவர்கள் அவரவர் உணர்வுக்குத்தக்கவாறு கருத்துக்களைச் சேர்த்துவிடுவார்கள்.

ஒரு கம்ப்யூட்டரில் கரண்டை மையமாக வைத்து அந்த உணர்வின் செல்களுக்கு எலெக்ட்ரானிக்கின் மற்ற உணர்வுகளைச் செயல்படுத்துகிறார்கள்.

அப்படிச் செயல்படுத்துகின்ற மாதிரி இந்த உயிர் கரண்டை உற்பத்தி செய்து நாம் நுகர்ந்த உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றி உடலைச் செயல்படுத்துகின்றது.

ஒரு எலெக்ட்ரானிக் கடிகாரத்தில் பார்க்கலாம். அந்த நேரம் வரும் பொழுது (அலாரம்) டக் டக் என்று அடித்துக் காட்டும். அந்த பேட்டரி செல்கள் என்ன ஆணையிடுகிறதோ அந்த உணர்வின் அளவுகோல் பிரகாரம் அதை இயக்குகிறது.

அதில் சிறிது தண்ணீர் பட்டுவிட்டால் அளவுகோல் போய் அதனுடைய இயக்க நிலைகள் மாற்றமாகின்றது. நீரில் உள்ள காந்தப்புலனோ இதை அழுத்தும் திறன் கொண்டது.

இதைப் போலத்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ நமது உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்களுக்கு அதனின் இயக்கமாக நம் உடலை இயக்குகிறது.

விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரான் இயந்திரத்தை இயக்குகிறது. மெய்ஞான அறிவுப்படி நம்முடைய உயிர் நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை எலெக்ட்ரானிக்காக மாற்றி நம் உடலை இயக்குகிறது.

இயற்கையின் நிலைகள் கொண்டு அதோடு சரி அது. இயற்கையின் நிலைகள் கொண்டு உணர்வின் அணுக்கள் வளர்ச்சி பெறும் நிலைகள் கொண்டது இது.

அதிலே வளர்ச்சி பெறமுடியாது. தெளிவுதான் உண்டு. ஆனால், இதிலே அந்த உணர்வின் தன்மையின் அளவுகோல் கூடக்கூட அந்த அணுக்களின் உணவுக்கொப்ப அணுக்களின் வளர்ச்சி கூடிக் கொண்டே வரும்.
அதனுடைய முடிவு எதை எடுத்து செல்களை உருவாக்கியதோ
அதன் உருவை மாற்றிவிடும்.

நமது வாழ்க்கையில் பிறருடைய உணர்வைப் பார்க்கப்படும்பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் வந்தவுடன் எப்படி இருக்கும்?

நாம் ஒரு வழியில் போய்க்கொண்டிருப்போம். இன்னொருவர் இன்னொன்றைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போகும் மார்க்கங்களைச் சொல்வார்கள்.

அப்பொழுது அந்த உணர்வு ஊழ்வினையாகப் பதிவாகின்றது. நாம் பதிவு செய்த நிலைகளையும் எடுத்துச் சொல்கிறோம்.

நாம் எதைச் சொன்னாலும் ஒரு வேப்ப மரம் ரோஜாவின் மணத்தை ஏற்றுக் கொள்ளாது போன்று அவருடை கசப்பின் உணர்வே அவருக்குள் விளையும்போது அவருக்கு உள்ளுக்குள் இந்த உணர்வை எடுத்துச் சொல்லும் பொழுது ஏற்றுக் கொல்வதில்லை.

நீங்கள் ஆயிரம் முறை சொல்லுங்கள், இறுதியில் அர்த்தமே ஆகவில்லை என்று சொல்லிவிடுவார்கள். அவருக்குள் உருவான உணர்வு அது.

வெங்காயத்தைச் சொல்லி அதைச் சாப்பாட்டில் போட்டுத்தான் பழகியிருக்கிறார்கள். வெங்காயத்தை உருவாக்கிப் பழகவில்லை.
ரெடிமேடாக (READY MADE) வைத்து
சமைத்துப் போட்டதைத்தான் சொல்ல முடிகிறது.

இதைப் போலத்தான் அவருடைய உணர்வுகள் எதைச் சொன்னாலும் அந்த நேரத்திற்குத்தான் கேட்க நன்றாக இருக்கின்றது.

நாம் அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றும் பொழுது, ஊற்றும் இடத்தில் பார்த்தால் நன்றாக இருக்கும். அதனுடன் இரண்டறக் கலந்தபின் அந்த நல்ல தண்ணீரை மாற்றிவிட்டு அழுக்குத் தண்ணீரையே காட்டும்.

கடல் மிகவும் பெரிதுதான். அதில் பெருங்காயத்தைக் கரைத்தவுடன் அதிலே அலைகள் மோதியவுடன், அந்த வெப்பத் தாக்குதலினால் நறுமணங்கள் வரும். சிறிது நேரத்தில் கடலில் பெருங்காயத்தின் மணம் மறைந்துவிடும்.

அதே போன்று, கடல் எப்படிப் பல சத்துகளைக் கவர்ந்தாலும், அதிலே சுருங்கிய உணர்வுகளில் உப்புச் சத்து நிறைய உண்டு.

உப்புச் சத்து நிறைய இருந்தாலும், அதிலே நல்ல சத்தை உருவாக்கும் சக்தி உருவாகி விட்டால், கடலிலேயும் அது தனக்குள் உப்புத் தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீராக மாற்றும் இடமும் இருக்கின்றது.

இராமேஸ்வரத்தில் அந்தப் பாறைப் படிவத்திற்குத் தக்க மாதிரி, அந்தத் தண்ணீர் ஓடுகின்ற பாதையில் ஒரே கிணற்றில் இந்தப் பக்கம் வேறுவிதமாக இருக்கும். அந்தப் பக்க ஊற்றிலே உப்பாக இருக்கும்.

நான்கு கிணறு இருக்கிறதென்றால், இந்தப் பாறையின் உணர்வு ஓட்டத்திற்குத் தக்க, தண்ணீரின் சுவை வித்தியாசமாக இருக்கும்.

இதைப் போலத்தான், நமக்குள் நூற்றுக் கணக்கான பிரிவுகள் உண்டு. அது வெளிப்படும் பொழுது, எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ,
அந்த உணர்ச்சிகள் அதிகமாகி, ஆன்மாவாகி,
உயிரிலே படும் பொழுதுதான் எலெக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு
பல நிலைகளைத் தெரிந்து கொள்கின்றோம்.