ஒருவரைப்
பார்க்கும்
பொழுது ஒரு தடவை அவர் கெட்டவர் என்று பதிவானால் மீண்டும் அவரைப் பார்க்கும்
பொழுது அதே நினைவே வருகின்றது.
நல்லதை நினைப்பதற்கு மீண்டும் நிறைய நேரம் ஆகிவிடுகின்றது.
நாம் தங்கத்தில் திரவகத்தை
ஊற்றினால் எவ்வாறு செம்பையும் பித்தளையையும் ஆவியாக மாற்றுகின்றதோ, இதைப் போன்று நாம்
நுகரும் பொழுது, நமக்குள் அடுத்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலக்கப்படும்
பொழுது அதன் வீரியத்தைத் தணிக்கின்றது.
முதலில் கெட்டவனை நினைக்கும்
பொழுது உமிழ்நீராக மாறுகின்றது. அடுத்த நிமிடம் அதை நீக்கவேண்டும் என்ற நினைவு வருகிறது.
"துருவ நட்சத்திரத்தின்
பேரருளைப் பெறவேண்டும்" என்று ஏங்கினால்
அது உடனடியாக அதனுடன் கலந்து
அதனைப் பலவீனப்படுத்துகின்றது.
கெட்டதைப் பார்க்கும்போது வேதனை என்ற உணர்வுடன் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வுகள்
உமிழ்நீரானால் நம் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் இந்த விஷத்தன்மைகள்
பாதிக்கின்றது.
அப்பொழுது நம் ஜீரணிக்கும்
சக்தி குறைந்துவிடுகின்றது. அது கெட்ட இரத்தமாக
மாறி வரிசையாக எல்லா உறுப்புகளிலும் சென்று மோதச் செய்கின்றது.
இந்த மாதிரி சந்தர்ப்பத்தில்
நமக்குள்
இது மிகவும் கடினமாக மாறிவிட்டது.
அடுத்த நிமிடம் அந்த
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரருளை எடுத்து உடலுக்குள் இணைத்துவிட்டால் அது உமிழ்நீராக
மாறுகின்றது. தீமையைப் பலவீனப்படுகின்றது.
அப்படிச் செய்தால் கூடுமானவரையிலும்
உடலுக்குள் கெடுதல் ஆகாமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால்,
உடனே அந்தத் தீமையை நீக்க இதை எடுக்கக்கூடிய
சக்தி வரவேண்டும்
என்பதற்குத்தான் இவ்வளவு தூரம் உங்களைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கச்
செய்கிறோம்.
அப்பொழுது உங்கள் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை ஈர்க்கக்கூடிய திறன் பெறவேண்டும் என்று இதை உபதேசிக்கின்றோம்.
உங்கள் உடலிலுள்ள உறுப்புகளைப்
பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு அணுக்களும் அந்த சக்தியைப் பெறவேண்டும் ஏக்கத்துடன் இருந்தால்
இப்பொழுது நுகரும்பொழுது உங்கள் உறுப்புகளில் பெரும் பகுதி இயக்கத்தை நீங்கள் காணலாம்,
உணரலாம்.
இப்படி நாம் பதிவாக்கிக்
கொண்டால், அடுத்து நீங்கள் இதையே எடுத்துக் கொண்டால் நல்ல அணுக்களை வளர்த்துக் கொள்ளலாம்.
தீமை என்ற உணர்வுகளை மாற்றிவிடலாம்.
ஒரு அழுக்குத் தண்ணீரில்
நல்ல தண்ணீரை ஊற்றினால் அழுக்குத் தண்ணீர் குறைகிறது.
இதைப்போல உங்கள் உடலில்
இதற்கு முன்னால் பல நிலைகள் இருந்தாலும் இப்பொழுது யாம் சொன்ன இந்த முறைப்படி உங்கள்
வாழ்க்கையையே தியானமாக்கி தீமைகள் உள் புகாது உடனே அதை மாற்றியமைக்கக்கூடிய
சக்தி உங்களுக்கு வேண்டும்.
கையில் அழுக்குப்பட்டால்
துடைக்கின்றோமில்லையா? அதைப்போன்று நமக்குள் பல எண்ணங்கள் வந்தால்
அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
நாம் அவற்றைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.
இது தான் நமக்கு அழியாச்
சொத்து.
அப்பொழுது தானாகவே செல்வம்,
எல்லாமே நம்மைத் தேடி வரும், நாம் செல்வத்தைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை.
நல்ல உணர்வு நல்ல
இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். அந்த நிலைக்குப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.