அகண்ட அண்டமும் இந்த பிண்டத்திற்குள் எப்படி
வந்தது என்று
மின்னல்கள், உயிர் இனங்களாக கடல்வாழ் நிலைகள் பெற்று
சனிக்கோளால் ஈர்க்கப்பட்டு புயலில் ஈர்க்கப்பட்டு
அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டு,
மேகங்களில் பரவியபின் மழையாகப் பெய்யும்போது
தரையிலும் உயிரினங்களின் தோற்றம் வருகிறது.
கடல்வாழ் உணர்வின் நிலைகள் வேறு, தரைவாழ் நிலைகளில் அது
வரப்படும்போது, இதைப்போல பார்க்கின்றோம், சிறு சிறு சங்குகள், நத்தைகள் பல
நிலைகள். நீர் நிலைகளிலும் பார்க்கின்றோம்
கடலில் வாழும் நத்தையை போன்று. நாம் நிலங்களில் உள்ள மற்ற
குளம் குட்டைகளிலும் பார்க்கின்றோம். இதேபோல நத்தைகளும், தவளைகளும்,
நீர்ப்பாம்பும் வருகின்றது. தரை வாழ் பாம்பும் நீரில் கலக்க அந்த பாம்பினங்களும்
உருவாகின்றது.
அதனதன் உணர்வுக்கொப்ப அதனதன் வாழ்க்கையின் தன்மை அமைகின்றது
என்பதனை இவன் தன்னை
அறிகின்றான் அகஸ்தியன்.
ஆகவே விஷத்தின் தன்மையை ஒடுக்கியபின் வான்வீதியில் தோன்றிய
உயிர் முதலிலே கடல்வாழ் நிலைகள் பெற்று பின் அதிலிருந்து சனிக் கோளால் கவரப்பட்டு
அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படர்ப்பட்டு அதன் வழி கொண்டு தரையில் வாழும் புழு
பூச்சிகளாக உருப்பெற்று பரிணாம வளர்ச்சியில் மனிதனாக விளைந்தோம் என்பதை உணர்ந்தான்
அகஸ்தியன்.
அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை
நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும்
நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்று குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர்) கூறினார்
அகஸ்தியன் முதலில் துன்பப்பட்டான், உணர்ந்தான்.
அவனுக்குள் அது விளைந்தது.
அகஸ்தியன் கண்ட
உண்மையின் உணர்வுகளை எனது சந்தர்ப்பம். அதை நுகரும் அறிவும் எனக்குள் வந்தது. அறிந்த உணர்வுகள் எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது என்றார் குருநாதர்.
அகஸ்தியன் வானை நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கி துருவனாகின்றான்.
தாவர இனங்கள் இங்கே பூமிக்குள் எப்படி விளைகின்றது. விளைந்த நிலைகள் எவ்வாறு
பரவுகின்றது என்பதனை அறிந்தான்.
துருவன் ஆனபின், திருமணம் செய்யும்போது தன் மனைவிக்கு அதையெல்லாம்
போதித்தான். இந்த உணர்வின் வலிமையைத் தன் மனைவிக்கு செருகேற்றி இருவரும் சமம் என்ற
உணர்வுகள் பெற்றனர்.
27 நட்சத்திரங்கள் அது நுகரும் உணர்வுகளை
இருவருமே நுகர்ந்து இரு உயிரிலும் உணர்வுகளை ஒன்றாக்கினார்கள்.
நட்சத்திரங்கள் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று, பல பல
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வினை அது உற்று நோக்கி தன் கணவன் பெற
வேண்டுமென்றும் கணவன் மனைவி பெற வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் இணைத்துக் கொண்டார்கள்.
நட்சத்திரங்களிலிருந்து
வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய அவர்கள் இருவர் உணர்வுகளும்
ஒன்றாக்கப்படும்போது
அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக உருவாகி
அவர்கள் உடல்களில் விளைகின்றது.
இருவர் உடல்களிலும் அணுக்களாக உருவாகியதால் அந்த
நட்சத்திரங்களில் வந்த சிதைவுகளை உற்றுநோக்கி அந்த உணர்வின் தன்மை கவர்ந்து அது (உருவான
அணுக்கள்) உணவாக எடுத்துக்கொள்ளும் நிலை வருகின்றது.
உயிர் துடிப்பின் நிலைகள் பெற்றது. 27 நட்சத்திரங்களை
சமப்படுத்தி ஒன்றென இணைத்து சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து வெளிப்படுத்தும்போது
உலகையே ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றது.
அதைப்போன்று உயிரின் தன்மை கொண்டு 27 நட்சத்திரங்களின் உணர்வின்
அணு செல்கள் இருவருக்குள்ளும் விளைந்து
உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
ஒளியின் தன்மையாகப் பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.
நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் உருவானது போன்று
உடலிலுள்ள அணுக்களின் தன்மையும்
ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளையும்
தனக்குள் இணைத்து உயிருடன் ஒன்றி
ஒரே ஒளித்தன்மையாக
கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
கருவின் நிலையாக ஒளியின் அணுவாக உருவாக்கி
அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
துருவப்பகுதியை
எல்லையாக வைத்து இன்றும் இரு உயிரும் ஒன்றி வாழ்கின்றது.
அதுதான் துருவ
நட்சத்திரம்.