ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2015

தியானத்தின் மூலம் சக்திகளை உடல் உறுப்புகளுக்குள் சேர்க்கவேண்டிய முறை

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவில் பெற்ற சக்தியால் வலிமை பெற்று தீமைகளனைத்தையும் நீக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனுடைய வளர்ச்சியிலே சிறுகச் சிறுகச் சேர்த்து உயிரோடு இணைந்து இன்று கணவன் மனைவி இணைந்து ஒளியாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

ஆகவே, துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடலில் உள்ள அணுக்களுக்கு ஒவ்வொன்றாகச் இப்பொழுது சேர்க்கின்றோம்.

இதிலே சிரமம் ஒன்றும் இல்லை. சிறிது நாள் எடுத்துப் பழகிவிட்டோம் என்றால் தானாகவே அதை எடுத்துக் கொள்ளும்.

இந்த உடலுக்குப்பின் நாம் கொண்டு செல்வதற்கு ஒன்றுமில்லை. ஆக நம்முடன் எந்தப் பொருளும் வருவதில்லை. இந்த உடலும் வருவதிலை.

மண்ணிலிருந்து விளைந்த சத்து மீண்டும் உயிர் போய்விட்டதென்றால் விளைந்த உணர்வு மட்டும் தான் உயிரோடு வருகின்றது.

இந்த உடல் சத்து மண்ணோடு மண்ணாகப் போய்விடுகின்றது. ஆகையினால் நாம் எடுக்கக்கூடிய இந்த உணர்வுகள் எதுவோ அதுவே நம்மை ஆளும் அது ஆண்டாள்.

உயர்ந்த நிலையாக இப்பொழுது நாம் சொன்ன முறைப்படி ஆத்மசுத்தி செய்துவிட்டு இப்படி இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நாம் தெளிந்த நிலைகள் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவம் வர வேண்டும். இதற்குண்டான சந்தர்ப்பத்தை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் வர வேண்டும்.
இப்படி இதை நீங்கள் ஏண்ணி ஏங்கி
ரிமோட் செய்துகொள்ள வேண்டும்.
அப்பொழுது அதற்குண்டான நிலையை உருவாக்கும்.
இதைச் செய்யாதபடி ஒன்றும் செய்யமுடியாது.

தொழிலிலே கொஞ்சம் சோர்வாகிவிட்டதென்றால் வேதனையைத் தான் பெருக்குகின்றோம், அதைத்தான் கூட்டுகின்றோம். அப்பொழுது உடனுக்குடன் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்;

மிகவும் கடினமாகிவிட்டது என்றால் என்ன செய்யவேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் இரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும்;
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களனைத்தும் பெறவேண்டும்;
சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும்;
கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும்
கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும்
நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்,
சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்.
இப்படி டக்.., டக்.., டக்.., என்று  கொண்டு வந்து விடுங்கள்;

ஏனென்றால் சிறுநீரகம் பலவீனமாகிவிட்டதென்றால் இந்த இரத்தத்தில் உள்ள விஷத்தின் தன்மையைப் பிரிக்கக்கூடிய தன்மையையே இழந்துவிடும்.

நல்ல இரத்தமாக மாற்ற முடியாமல் அதாவது இரத்தத்தில் இருக்கக்கூடிய நீரைக் கழிவாகக் கொண்டு வருவதற்கு இயலாமல் போய்விடுகின்றது.

இதே சமயத்தில் நாம் வேதனை என்ற இந்த உணர்வு வரும் பொழுது, பெருங்குடலில் இந்த அணுக்கள் இயக்கம் இல்லையென்றால் நாம் சாப்பிட்ட அந்த ஆகாரத்தை அப்படியே தண்ணீராகக் கரைத்து விடுகின்றது.

வெளியிலே பட படவென்று தள்ளி விடுகின்றது. சத்தைக் கூட எடுக்க முடிவதில்லை. அப்பொழுது அது பலவீனமடைகின்றது. பல வகையிலும் தொந்தரவு கொடுக்கின்றது. ஒவ்வொரு உறுப்புகளிலும் தொந்தரவு கொடுக்கின்றது.

கல்லீரலிலும் மண்ணீரலிலும் பலவீனமாகும் பொழுது நாம் சிந்திக்கும் தன்மை குறைந்துவிடுகின்றது.

ஆகவே, மள.., மள.., என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து
கண்ணின் நினைவு கொண்டு
மின்னல் வேகத்தில் உடல் உறுப்புகளுக்குள் சேர்க்கும்
ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள்.

இது நீங்கள் சிரமப்பட்டுச் செய்யவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. சிறிது நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் நினைவுகளை உடல் முழுவதற்கும் கொண்டு வந்து விடலாம்.
உங்களுக்கு உடனே மனதில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்,
உங்களுக்கே தெரியும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் நினைவுகளை இருதயத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். அப்பொழுது உங்கள் இருதயம் நல்ல வலிமை பெறுகின்றது.

இருதயத்தில் நினைவைக் கொண்டு வரும்பொழுது என்ன நடக்கிறது? இங்கு எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றது.

இதைத் தான் கீதையிலே "நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்". நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.
நம்முடைய அந்த உணர்வு
நாம் அதுவாகின்றோம்.

கண்ணின் கருமணியில் உங்களுக்குக் கொடுக்கும் ஆற்றல்
காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியை
பிரித்து எடுக்கக்கூடிய சக்தி தான்.

உங்கள் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டே வர வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதர் ஒளியாக ஆனது போல, அந்தத் துருவ நட்சத்திரம் ஒளி ஆனது போல ஒளி நிலை பெறவேண்டும்.