வலு கொண்ட அசுர குணங்கள் கொண்டவனுக்கு
நம்மைப்போல் பத்து பேர் இருந்து
அவனைத் தாக்க வேண்டுமென்ற உணர்வு வந்தாலும்
அந்த உணர்வு அவன் பயந்து நடுங்குவதற்கு மாறாக
எதிர்த்து நம்மைத் தாக்கும் வலிமையே அங்கு பெறுகின்றது.
அவன் நம்மை எதிர்த்துத் தாக்கும் உணர்வுடன் வரும்போது
அவனிடம் நாம் நிற்கும் நிலையில்லாதபடி நம் வலுத்தன்மைகளும் இங்கு குறைகின்றது.
அவனைப் பார்த்தபின் நாம் செயலற்ற நிலைகளில்தான் மாறுகின்றோம். இப்படித்தான் இந்த இயற்கையின்
நியதிகள் ஒவ்வொரு நிலைகளிலும் செயல்படுகின்றது.
ஒரு வலு கொண்டவனிடத்தில் இன்னொரு வலு கொண்ட உணர்வைச்
சேர்க்கப்படும்போது அந்த வலு கொண்டு மீட்பதைப் பார்க்கின்றோம்.
ஒரு வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று சொன்னால் ஏஜெண்ட்டுகளை
விட்டு நான்கு பேரை வைத்து அதைச் சொல்லி காலி செய்யச் சொல்கிறார்கள்.
வீட்டில் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும் நான்கு பேரை
வைத்துக் கூப்பிட்டு, காலி செய்கிறாயா? இல்லையென்றால் உன்னை என்ன செய்கிறேன் பார்?
என்று எதிர்க்கிறார்கள்.
இவையெல்லாம் உணர்வின் அதிர்வின் செயலுக்கொப்பத்தான் ஒவ்வொன்றும் நம்மை
இயக்குகின்றது
நம்முடைய திறமையோ
மற்றவையோ அல்ல.
ஆகவே இதனுடைய எதிர்நிலை வரப்படும்போதுதான் ஒன்றுக்கொன்று
கொலை பாதகங்கள் செய்து கொள்வதும், மனிதனுக்கு
மனிதன் மடியும் தன்மையும்.
ஆகவே இப்படி இயற்கையின் நியதிகள் வரும் இந்த நிலையிலிருந்து
எவ்வாறு நாம் இயங்குகின்றோம் என்பதனை குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று
அனுபவபூர்வமாகக் காட்டினார்.
காட்டில் ஒவ்வொரு பகுதியில் உள்ள தாவர இனங்கள் இருக்கும்
இடங்களுக்கும், எதிர்மறையான
தாவர இனங்கள் வளரும் இடங்களுக்கும் எம்மை அழைத்துச் சென்றார் குருநாதர்.
எதிர்மறையான உணர்வுகளை நுகரப்படும்போது உன் உடலுக்குள்
அணுக்களின் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றது என்பதனை உணர்த்தினார்.
தாவர இனங்கள் ஒவ்வொன்றும் நட்சத்திரத்தின் சத்தைக் கொண்டு
வளரும் நிலைகள் பெற்றது.
மேலே மின்னல் தாக்கப்படும்போது
எந்த நட்சத்திரங்களின் மின்னல்கள் தூசியாகி
அங்கு எதிர்நிலை ஆகின்றதோ இங்கே எதிர்நிலையாகும்
அப்பொழுது மின்னல் பாயும்போது அதற்குத்தக்க மரங்களில் அந்த
நட்சத்திரத்தின் சத்தைத் தன் இனத்தால் கவரப்படும்போது தன் இனம் என்றால் அதை ஒன்று
சேர்த்துவிடுகின்றது.
ஆனால், தன்
இனமல்லாது மற்ற இனத்தால் சேர்ந்த அந்த
உணர்வின் உணர்ச்சிகளைக் கருகி விடுகின்றது. இவையெல்லாம்
இயற்கையின் நியதி. மரம் தவறு செய்யவில்லை.
மின்னலின் ஒளிக் கற்றைகள் அதிகமாகும்போது குவித்திழுக்கும்
தன்மை வரும்போது தன் இனத்தை அது பெருக்கத் தொடங்குகின்றது. ஆகவே, இதைப்போல இப்படிப்
பல பொருள்கள் கருகுகின்றது.
மின்னல் தாக்கும்போது ஒரு உணர்வின் தன்மை எப்படி
இயக்குகின்றது என்று நான் உயிரே கடவுள் புத்தகத்தில் ஏற்கனவே சொல்லியிருப்பேன்.
“நீ மின்னலைப் பார்..,” என்பார் குருநாதர்.
மின்னலைப் பார்த்து கண் பார்வை போய்விட்டால் என்ன செய்வது?
என்று குருநாதரிடம் எதிர்த்துக் கூட பேசியிருக்கின்றேன்.
காரணம், அந்த மின்னலுக்குள் இருக்கும் சில அற்புதங்களும் சில நிகழ்ச்சிகளும் எவ்வாறு நிகழ்கிறது? என்று குருநாதர் காட்டினார்.
குருவின் வலுகொண்டு மின்னலை நான் உற்றுப்பார்க்கப்படும்போது
என்னை ஒன்றும் அது பாதிக்கவில்லை.
ஆனால், மின்னலுக்குள் இருக்கும் அந்த உணர்வின்
செயலாக்கங்களை அங்கே இயக்க முடிகின்றது என்பதை என்னால் அறிய முடிந்தது.