ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2015

நமக்குச் சொந்தமானது உடலா...? உயிரா...!

நாம் காலையிலிருந்து சாயங்காலம் வரையிலும் வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் என்ற எத்தனையோ உணர்வுகளைச் சந்திக்க நேருகின்றது.

அந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ்நீராக மாறி மாறி மாறி நம் ஆகாரத்துடன் கலந்து கலந்து அது இரத்தமாக வருகின்றது.

ஆனால் எதன் உணர்வுகள் இந்த இயக்க அணுவாக மாறியதோ நம் உடலுக்குள் சென்றவுடன் அது கருத்தன்மை அடைந்து விடுகின்றது; பின், முட்டையாகி விடுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால் அந்த முட்டை வெடித்தவுடன் அணுவாக வந்து விடுகின்றது.

உதாரணமாக, இப்பொழுது ஒரு தட்டான்பூச்சி அது ஏதாவது ஒரு பூச்செடியில் அதன் முட்டையிட்டால்
அந்தப் பூவின் மணத்தை எடுத்து
அதே மாதிரி பூவின் நிறத்தில் பட்டாம்பூச்சியாக மாறுகின்றது.

இதே மாதிரி நாம் எடுக்கும் வேதனை, வெறுப்பு என்ற உணர்வுகள் அது கருத்தன்மை அடைந்து, அந்த முட்டையாக இருக்கும் பொழுதே இதை மாற்றியமைக்கக்கூடிய அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி நாம் பெறவேண்டும் என்று எண்ணிணோம் என்றால் அந்தக் கருமுட்டை நம் உடலில் வளர்ச்சி அடையும் பொழுது அதன்மேல் பாய்ச்சி விடுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை அப்படிப் பாய்ச்சப்படும் பொழுது அதற்குத் தக்கவாறு அந்தக் கருமுட்டையினுடைய அணுக்கள் மாற்றமடைகின்றது.

ஆனால் அதே சமயத்தில், அந்த முட்டை அணுவாகிவிட்டால் தன் இனத்தை அது மீண்டும் பெருக்க ஆரம்பித்து விடுகின்றது. அதனுடைய முட்டைகள் அதிகமாகி நம் உடலுக்குள் பெருக ஆரம்பித்துவிடுகின்றது.

அதை நாம் மாற்றத் தவறினால் நாளடைவில் அது பெருகப் பெருக உடல் நோய் மன நோய் போன்ற நிலைகள் வந்துவிடுகிறது

ஆகவே அப்படி ஆகாமல் தடுக்க, நம் வாழ்க்கையில் வேதனையான உணர்வுகளை அடிக்கடி எண்ணும்பொழுது, யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஆத்மசுத்தி எடுத்தால்
உடனுக்குடன் அந்தத் தீமையான அணுக்களை
மாற்றிக் கொள்ள முடியும்.
அதை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், நாம் அந்த அகஸ்தியன் எப்படி அகண்ட அண்டத்தையும் அறிந்து உணர்வை ஒளியாக மாற்றினானோ, அவன் பெற்ற அருளை நாமும் பெற முடியும்.

அந்த அருளை நமக்குள் பெற்று இந்த உடலுக்குப்பின் அகஸ்தியன் பிறவில்லா நிலை அடைந்தது போல நாமும் அடைய முடியும்.
நமக்குச் சொந்தம் அதுதான்.
இந்த உடல் சொந்தம் நமக்கு வேண்டாம்.

நம் உயிர் - அவன்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றான். உடலால் நாம் அறிய முடிகின்றது. அறியும் ஆற்றல் பெற்ற ஆறாவது அறிவை உயிரோடு இணைக்கும் பொழுது. ஒளி என்ற உணர்வாகின்றது.

இதை நாம் எல்லோரும் பெறமுடியும்; எல்லோருக்கும் பெறக்கூடிய தகுதி பெறத்தான் இதை உபதேசித்தது.