ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2014

மூலாதாரம் எங்கே இருக்கின்றது? குண்டலினி என்றால் என்ன?

1. தீமை வரும்போது கண்ணின் நினைவை எங்கே கொண்டு போகவேண்டும்?
சில சமயங்களில், நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், நம்முடைய பையன் நான்கு தடவை அடம்பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்துவிடுகின்றது.

அது, நம் எண்ணத்தை
ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது.
உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.

இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது, இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள், அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு, அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.

அதற்குத்தான், நாம் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும். நம் கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.

கூட்டுத் தியானத்தில் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை
கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து,
உயிருடன் இணைக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று, அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.
2. மூலாதாரம் எங்கே இருக்கின்றது? 
மூலம் 'உயிர்', எடுக்கும் உணர்வுகள் ஆதாரம்
இவ்வாறு காட்டியதைத்தான், இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் “ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள். நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ, அது நமக்குள் அணுக்களில் “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மை.
மூலாதாரம் இங்கே “உயிர்”

இதைத்தான், “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து” என்கிற பொழுது,
நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு.
அதற்கு வளர்ச்சி இல்லாதபடி,
“மூண்டெழும் கனலைக் காலமறிந்து, கருத்துடன் செயல்பட வேண்டும்” என்றுதான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.

இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், அங்கே கட்டளை இடப்படும் பொழுதுதான், ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.

அப்பொழுது ஆக்ஞை இட்டு, பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய், இதன் வழிகொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ, என்று சொல்கின்றார்கள்.

ஆக மூலாதாரம், இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு, இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு, இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். “மூலாதாரம் கீழே இருக்கின்றது” என்று கொண்டு போகின்றார்கள்.
ஆனால், நமக்கு மூலம் உயிர்.
நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.

கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் சேர்க்கவேண்டும். இதுதான் குண்டலினி.

அந்த உணர்வின்  தன்மை வலுப்பெறும் பொழுது,
தீமைகளைப் பிளக்கின்றது.