ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2014

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்ளவேண்டும் (RECHARGE)

1. துருவ நட்சத்திரத்தின் பேரருளை மக்குள் பெருக்கிக் கொள்ளவேண்டும் (RECHARGE)
எலக்ட்ரிக் பேட்டரியில் ஆசிடையும் தண்ணீரையும், ஊற்றி வைத்திருக்கிறோம். கரண்டை ஏற்றி சார்ஜ் செய்தவுடன், அதன் சக்தி கூடுகிறது.

இதைப் போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் விளைய வேண்டுமென்று, திரும்பத் திரும்ப யாம் உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசித்ததை நீங்கள் எண்ணி ஏங்கி சுவாசிக்கும் பொழுது,
அந்த சக்தி உங்களுக்குள் சார்ஜ் ஆவதற்கு
இந்த நிலையைச் செய்கின்றோம்.


உபதேசித்து உங்கள் மனதைப் பண்படுத்துகின்றோம். மகரிஷிகளின் ஞானவித்தை உங்கள் உள்ளங்களில் பதிவு செய்கின்றோம். அதற்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற நன்னீரை ஊற்றப்படும் பொழுது, அருள் காந்த சக்தியினுடைய நிலைகள் கிடைக்கின்றது. 
2. மனிதனை மாற்றியமைக்கும் சக்தி - துருவ நட்சத்திரம்
இப்பொழுது,  TV நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த அலைவரிசை என்று தெரிந்துகொண்டு அந்த அலைவரிசையை வைத்தால்உடனே அதை எடுத்து வேலை செய்கின்றது.

அதே போன்றுநம் உடலில் ஒவ்வொரு குணங்களையும் பதிவாக்கி இருக்கின்றோம்.
என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன்
அந்த அலைவரிசை வந்தவுடன் கோபம் வரும்.

கோபமான நிலைகளில் கணக்குப் போட்டால் தப்பாக வரும். அதே சமயத்தில் வீட்டில் சண்டைக்கு போவோம். எது இருந்தாலும்அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும். 

அதே சமயத்தில் கோபமாக இருந்து,  “இந்த மாதிரி, அவன் எனக்குத் தீங்கு செய்தான் என்று எண்ணினால்அவனும் அங்கு கெடுகின்றான். அங்கு அவனுக்கு புரை ஓடும்.

பாசத்தால்பையன் லெட்டர் போடவில்லை என்று தாய் எண்ணி வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு பையனைப் பாதிக்கும். 

அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால்அந்த வேதனைஅவன் சிந்தனையைக் குறைத்து, கணக்கு தப்பாகும். கெட்ட பெயர் வாங்கி விடுவான். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றான் என்றால்,  “என்னை எதிர்க்கின்றார்கள்”  என்று அங்கிருந்து லெட்டர் வரும்.

தாய் எண்ணியதுஎன்று அவனுக்கு தெரியாது. அதே சமயத்தில் ரோட்டில் நடந்து போகும் பொழுதுதாய் இம்மாதிரி எண்ணினால்விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். தாயின் நினைவு இப்படி வந்துவிடும்.  இதையெல்லாம்நாம் மாற்ற வேண்டும்.

இதெல்லாம் காற்றில் இருக்கின்றது.
அதே சமயத்தில் ஊழ்வினை என்ற வித்தாக
நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
நாம்  யாரை எண்ணுகின்றோமோ, உடனே அது வேலை செய்யும்.
மனிதனுக்கு   மனிதன் நாம் கலந்துதான் இருக்கின்றோம். 
யாரும் தனித்து இருக்க முடியாது.

சமுதாய அமைப்பில்மனிதன் ஒன்றோடொன்று இணைந்துதான் வாழுகின்றான். நமது உடலுக்குள் எது  எதுவெல்லாம் பதிவாகி இருக்கின்றதோஅவைகள் இந்த காற்று மண்டலத்திலும் உண்டு.

நமது உடலுக்குள் பதிவானவைகளில்,
எதை நாம் நினைக்கின்றோமோ, அவைகள்
காற்றிலிருந்து நம் ஈர்ப்பிற்கு வந்து,
அந்த அலைகள் நம்மை இயக்கத்தான்  செய்யும்.
இதுவெல்லாம்இயற்கையின் சில நியதிகள்

இந்த மாதிரி, நாம் எதை எண்ணினாலும் உடனே மாற்றுகின்ற  சக்தி வேண்டும்.
     
 இன்றைக்குநாம் விஞ்ஞான யுகத்தில் வாழுகிறோம். மனிதன்எலக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்ஏதேதோ செய்கின்றான். நமது ஞானிகள்இயற்கையின் உண்மையின் உணர்வுகளை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொண்டீர்களென்றால், நாம் எப்படி இயங்குகின்றோம்நமது உயிர் எப்படி இயங்குகின்றது? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
     
எந்த உணர்வும் நம்மை இயக்காமல்,
அதை நமக்கு உதவியாக மாற்றிக் கொள்வதற்கு
ஒரு சக்தி தேவை.
அதற்கு சக்தி ஊட்டுவதுதான்துருவ நட்சத்திரம்.