ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2014

அன்றாட வாழ்க்கையில் வரும் குறைகளை (தூசிகளை) துடைப்பதற்குத்தான் இந்த தியானம்

1. பிறருடைய கஷ்டத்தை நாம் கேட்டுணரும் போது நம் ரத்தத்தில் என்ன நடக்கின்றது?
உதாரணமாக, நம்முடைய நண்பர் ஒருவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம்.

அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது, நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது. அவ்வாறு,
அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று,
அது உமிழ்நீராக மாறி,
நம் ஆகாரத்துடன் கலந்து,
நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ,
அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து,
நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கலந்துவிடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும்கூட,
அவருடைய துன்பமான உணர்வுகள்,
அந்த உணர்வுகள் உமிழ்நீராக வடிக்கப்பட்டு
நம் ஆகாரத்துடன் கலந்து
இரத்தத்துடன் கலந்துவிடுகின்றது.

ரத்தத்துடன் கலந்து செல்லும்போது நமது நுரையீரல், சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது, அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உறுப்புகளிலும் முதலில் ஏற்படும்.

அப்பொழுது, அதைப்போல அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும்போது, கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது, நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது, நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது, நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ, அந்த நல்ல குணத்துடன், இது இரண்டறக் கலந்துவிடுகின்றது.
2. முலாம் பூசுவது போன்றுதான் குணங்கள் மாறுகின்றது
Inline image 3
உதாரணமாக, ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு, அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம், ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

செம்பில் ELECTRONICஐ (அழுத்தத்தை) அதிகமாகக் கூட்டி, தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும்பொழுது, தங்கம் கரைகின்றது.
அதாவது, அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக்
தங்கத்தைக் கவர்ந்து
செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.
ஆக உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து, இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகி அது தெளிவாகின்றது.

ஆனால் தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து, செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்து, செம்பை ஒரு நீருக்குள் போட்டால் என்ன செய்யும்?

செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாம் பூசும்போது, அடிக்கடி செம்பு கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு, நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது, அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து, அது உடலுக்குள் செல்லும்போது, நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ, அந்த நல்ல குணத்தில் இது முலாம் பூசிவிடும்.

ஏனென்றால், நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும், அவர்படும் துன்பத்தின்மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி,
உனக்கு எப்படி வந்ததுஎன்று கேட்கப்படும்போது,
அந்த நல்ல உணர்வுகளுடன்,
அவரிடம் இருந்த நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலிலே நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள் நோயற்ற நிலையும், தெளிவான நிலைகளும், உடலில் தெம்பாக இருந்தது.

ஆக, தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ, அதைப் போல நமது தெளிவான எண்ணங்களுடன் அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது, நம்மை அறியாமலேயே, இப்படிச் சோர்வின் தன்மை அடைந்துவிடுகின்றோம்.

இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்துவிடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. ஆக, நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா?

செம்பும் வெள்ளியும் கலந்து ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும்போது தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால், செம்பையும் வெள்ளியையும் கலந்து, கொஞ்சம் பொடியாக வைத்தபின், அது சீக்கிரம் உருகிவிடுகின்றது. அதே சமயம், தங்கத்துடன் ஒட்டிக்கொள்கின்றது. இதைப் போலத்தான்,
ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லுபோது,
அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி,
அந்த செம்பான நிலைகள் உருகுவது போல,
அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து,
நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.
3. அன்றாட வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கி, மனதைத் தங்கமாக்குவதற்குத்தான் இந்த தியானம்
தங்க நகை செய்யும்போது ஒட்டவைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது. இதைப்போல, ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும்போது, அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

வாழ்க்கையின் நிலைகளில், நாம் நன்மை செய்தால்தான் மனிதனின் நிலையும் ஆகும்.

நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும், இந்த வாழ்க்கையில், இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான், நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார். இன்று உதவி இல்லை என்று சொன்னால், அவர் நாளைக்கு நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை, நாம் கேட்டறியவில்லை என்றால், நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறியமாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும்போது, செம்பும், வெள்ளியும் வைத்து நாம் பற்றவைக்கின்றோமோ அதைப்போல, வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால், இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும், அடுத்த நகை செய்யும்போது, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி, அதைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல, ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும்போது நாம் கேட்டறியும் போது, அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன், செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின், எல்லாமே ஒன்றாகிவிடுகிறது. அடிக்கடி இதே நகையை, அழித்து அழித்துச் செய்யும்போது, செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்? அந்த செம்பின் தன்மை கூடி, அந்த தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல, நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால்,
நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து,
நமக்குள் அது நோயாக விளைந்துவிடுகின்றது.
நமக்குள் நல்ல குணமெல்லாம் கெடுவதோடு மட்டுமல்லாதபடி,
நல்ல உடலும் கெட்டுவிடுகின்றது.
நமது நல்ல சொல்லும், கெட்டுவிடுகின்றது.
நமது சொல்லும்கூட நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும்போது, அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் ”நச்சு, நச்சென்றேசொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் சொல்ல வந்தாலே, நாம் ஓடுவோம்.
ஆனால், சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும், பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அதைப் பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது, அடிக்கடி நம்மையறியாமலேயே, வேதனையும், துயரமும், பயமும், உங்களுக்குள் வந்து, சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? ஏதாவது வழி இருக்கிறதா?

அதற்குத்தான், அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை, உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது.  யாம் உபதேசித்த நிலைகளில் நீங்கள் தியானிக்க வேண்டும்.

அப்பொழுது, அந்தக்  ”கூட்டுத் தியானத்தில் உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான், அந்த வலு கூடுகின்றது, என்று நமது குருநாதர் சொன்னார்.
4. உடலிலுள்ள எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை முலாமாகப் பூசவேண்டும்
ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை எடுத்து, ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி, அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்ற ஏக்கத்துடன் நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள். இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.

அடுத்து, ரத்தத்தில் இருக்கும் அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.

இப்பொழுது, நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் முலாமாகச் சேர்கின்றது. ஒளி பெறும் உணர்வின் கருவாக உருபெறுகின்றது. துன்பத்தை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக உருவாகின்றது.

ஆக, துருவ நட்சத்திரம் இன்று எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்ற திறன் நாமும் பெறுகின்றோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழ்கின்றோம்.

பின்பு கண்களைத் திறந்து கஷ்டப்படுபவர்களிடம், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால், உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதால், அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது.

நாம் அடுத்த நகை செய்யும்பொழுது, செம்பையும், வெள்ளியையும் சுத்தப்படுத்திக் கொள்வது போல, அடுத்த நிமிடமே இதைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் தியானம் என்பது.