மதங்கள்
அனைத்துமே, மதத்தைக் காப்பதற்கு பல நிர்பந்த
ஆற்றல்களை அவர்கள் பயன்படுத்தி, மெய்யுணர்வை அவர்கள் பெறாத வண்ணம்
தடுத்து நிறுத்தி, அதை எல்லாமே பெண்கள் வழியில்தான் தீட்சனியங்களை
அதீதமான நிலைகளில் பாய்ச்சி, எந்த மதமானலும் சரி, பெண்களைச் சாடியேதான் இருப்பார்கள்.
பெண்களுடைய
ஆற்றலை மடக்கி தடுத்து கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பாதகப்படுத்தியேதான் இருப்பார்கள். அந்தப் பாதக நிலைகளிலே அவர்கள் எடுத்துக் கொண்ட மூச்சுக்கள்
எந்தெந்த
தாய்மார்களினுடைய நிலையிலே இது படுகின்றதோ,
அவர்கள் இட்ட மூச்சலைகள் அனைத்துமே,
அது “அக்னி சக்தி” என்று தெரியாது.
ஆதி சக்திதான் அது.
ஆவி, அது அண்டத்திலே சேர்ந்தபின் ஒரு திடப்பொருளாகும்
பொழுது துவைதம். அது சிவமாகின்றது. நம்
உடலுக்குள் நின்று
சக்தியாக இயங்குவதும் அதுவே.
கருவின் தன்மை
உருவாக்குவதும் அதுவே.
ஆக, இந்தத் தாய்மையினுடைய நிலைகள் எண்ணத்தாலே இருவருடைய எண்ணங்கள் ஒன்று சேர்க்கவில்லை என்றால் அந்த உணர்வின்
எண்ணம் பிரதிபலிக்காது.
கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து
யாரொரொவர்
இயக்குகின்றனரோ,
அவர்களைப் “புனித மகான்”
என்றே
கூடச் சொல்லலாம்.
மாமகரிஷி
ஆதிசங்கரர் சொன்னது போன்று, நீங்கள் கணவன் மனைவி ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்த எண்ணத்துடன் ஒன்று
சேர்ந்து சிவ சக்தியின் ஸ்வரூபமாக உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள்.
அப்பொழுது பிறக்கும் குழந்தைகளும் மெய்யுணர்வின் தன்மை கொண்டு, மெய் ஒளியான நிலையை வளர்க்கப்பட்டு,
விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை
அந்தக் குழந்தைகள் பெறும்போது
ஆதிசக்தியின் அந்தத் தாய்மையான
நிலைகள்
அவர்களுக்குக் கிடைக்கின்றது.