ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2014

ஞானகுருவின் பொன்மொழிகள் 1 - (REAL QUOTES 1)

நாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர் தம்மை அறியாதவரே.

எதனையும் மாற்றியமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு என்று அறிந்து தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நல் ஞானியர் காண்பித்த தெய்வங்கள் அனைத்தும் பேரண்ட இயக்க சூட்சமத்தை உணர்த்துவதற்கு கொடுத்த உருவகங்களே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உயிரான ஈசன் இன்றி இந்த உடலில் ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தவே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காட்டிற்குள் சென்றுதான் ஞானத்தைப் பெறமுடியும் என்று கருதுவது தவறு. இல்லறத்திலிருந்தும் மெய்ஞானத்தைப் பெறமுடியும். நமது உடலே ஒரு காடு போன்றதுதான். சிங்கம் போன்ற குணங்களும் மானைப் போன்ற குணங்களும் மற்ற மிருக வகை குணங்கள் அனைத்தும் இந்த உடலுக்குள் உண்டு.

எனவே இந்த காடு போன்ற உடலுக்குள் மனதை ஒன்றுபடுத்தி, குருவின் துணையுடன் மெய்ஞானிகளின் அருளைப் பெறும் பொழுது மெய்ஞானம் அனைத்தும் நாம் பெறமுடியும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஞானிகள் செப்பு மொழிகள் காலத்தால் அழியா போக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்போது உங்கள் ஞானக்கதவைத் திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தில் நல் உணர்வுகள் எதுவும் பதியாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மனிதக்கூடு ஒரு ஓலை வேய்ந்த வீடு போன்றது. ஏனெனில் உயிரான்மா இந்த மனிதக் கூட்டில் இருக்கும் பொழுதுதான் தீமையை விளைவைக்கும் உணர்வுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.

எனவே, மனிதப் பிறப்பின் சிறப்பை அறிந்து பயணத்தின் பாதையை அழியா ஒளிச்சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சூரியனுக்கு அழிவு உண்டு. ஆனால், இந்த உயிருக்கு அழிவில்லை. இந்த உயிரில் எந்த உணர்வை இணைக்கின்றோமோ, அதனின் இயக்கமாக நமது உயிர் நம்மை இயக்குகின்றது.

ஆகவே, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாக இணைக்க வேண்டும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலிலிருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் அனைத்தும் பேரற்றலைப் பெற்ற மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே தமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.