1. சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள்
சாவித்திரி, நளாயினி கதைகள்
எல்லாம் சொல்லியுள்ளார்கள். சாவித்திரி என்பது கணவனையே பின்பற்றி
நடந்தாள், கணவன் எதைச் செய்தாலும் பின்பற்றி
நடந்தாள். எமனிடமிருந்து, கணவனை மீட்டினாள்
என்றும் சொல்வார்கள்.
அப்படியல்ல.
ஆக, கணவன் மனைவி இருவருமே ஒன்று சேர்ந்து இந்த உணர்வின்
தன்மையை எவரொருவர் கூட்டிக்கொள்கின்றனரோ, இறந்தபின்
அவருடைய உயிராத்மா இன்னொரு சரீரத்திற்குள் போகாது.
நளாயினி
கதையில் கணவனைக் கூடையில் தூக்கிச் சுமந்தாள் என்று சொல்வார்கள். எப்பொழுதும், கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருக்கவேண்டுமென்று நினைத்து, அன்று ஞானிகள் சொன்ன நிலைகளை விட்டுவிட்டார்கள்.
கூடையில்
தூக்கிச் சுமந்தாள் என்று
கதையைக் கட்டிவிட்டார்கள்.
அதற்காக
வேண்டி, கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டேதான் இருக்கவேண்டும் என்று,
அடிமைப் புத்தியைத்தான் காட்டிவிட்டார்களே
தவிர,
கணவனும் மனைவியும் சேர்ந்து,
"ஒரு நிலை பெறவேண்டும்" என்று காட்டவே
இல்லை.
ஆக, அந்த வழியிலே நமக்குள் அடக்கி ஆளும்
உணர்வே வந்துவிடுகின்றது. அந்த உண்மையின்
உணர்வினுடைய நிலைகளை நாம் எடுத்துக்கொள்ளும் நிலைகளில் இல்லை.
இதைப்போன்ற
நிலைகளில் இருந்து நாம்
மீள்வதற்கு சரியான முறையில் இந்த தியானத்தைச் செய்து, ஆத்மசுத்தி
செய்து உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்கவேண்டும்.
2. கணவன் மனைவி இரண்டு உயிராத்மாக்களும் ஐக்கியமாக
வேண்டும்
ஆக, ஒளிசரீரம் ஆவதற்கு தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை, கணவரின் உயிராத்மா
சூட்சுமமாக இருந்தாலும், இந்த உணர்வின் தன்மை தனக்குள் கவரப்பட்டு,
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து,
அந்த மெய் ஒளியின் தன்மையைச் சுடராக்கி,
இந்த
உடலை விட்டுச் சென்றபின்
அந்த
ஒளியின் சரீரமாக மாற்றமுடியும்.
ஆகையினாலேதான், கணவன் முன் சென்றாலும் அந்த மனைவியும் இருவர் நிலைகளும் ஒரே நிலையாக எடுத்துக்
கொண்டால், பாசமான உணர்வுகள் அந்த சிவமான சக்தி இங்கே தாய்மையினுடைய
உடலுக்குள் வந்துவிடுகின்றது.
இப்பொழுது
நாம் பேய் பிடித்துவிட்டது என்று எப்படிச்
சொல்கின்றோமோ இதைப்போன்று, பெண்ணின் ஈர்ப்பு வட்டத்திற்குள்தான்
இந்த பேய் பிடிப்பது ஜாஸ்தியாக இருக்கும்.
ஆண்களில்
பெண்பாலினுடைய சக்திகள் அதிகமாகி, அமில சக்திகள் அதிகமாக இருந்தால்தான் ஆண்களுக்கு பேய் பிடிக்கும் நிலைகள் வரும்.
ஆக, இந்த உணர்வின் ஆற்றல் பெரும்பாலும் பெண்களுக்கேதான்
வரும்.
கணவன்
பால் தன் மெய்யுணர்வின் தன்மையை மெய்யொளியுடன் கவர்ந்து, அவருடன் சொர்க்கத்
தன்மையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி
இணைத்துக் கொண்டால், இந்த
உணர்வின் தன்மையில் இந்த உயிராத்மா இறந்தபின், அந்த உயிராத்மா
இந்த உடலுக்குள் வந்தபின் எந்த மெய்யொளியின் தன்மையைத் தனக்குள்
கூட்டி வளர்த்தார்களோ, இந்த உடலுக்குள் நின்றே அதை பூஜிக்கும்
நிலைகள் கொண்டு, இந்த உயிராத்மா தனக்குள் ஐக்கியமாகி விடுகின்றது.
இரண்டு உயிராத்மாக்களும் ஐக்கியமாகி,
இரு நிலைகளிலும் உயிருக்குள் ஒளியின் தன்மை
பெற்று,
அதன் வழிகொண்டு, விண்வெளி
செல்லும் மார்க்கத்தை அன்று ஆதிசங்கரர் சொன்னார்.