1. யாம் உபதேசிக்கும்
உணர்வுகள் உங்களுக்குள் கருவாக உருவாகின்றது
உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு
அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை
வெப்பத்தின் துடிப்பு கொண்டு
கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.
குஞ்சாக வெளிவந்த பின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
இதைப் போன்று, யாம்
இப்பொழுது உங்களுக்குள் உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக
உருவாகின்றது.
அதனின்
உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில்
அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள்
வளர்ச்சி பெறுகின்றது.
நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்ற எண்ணத்தை, திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது
2. கோழி முட்டையை அடைகாப்பது போல் மகரிஷிகளின் அருள் உணர்வைச்
சேர்த்துக் கொள்ளுங்கள்
கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும்,
தன் குஞ்சின்
நினைவு கொண்டு,
தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து,
அடைகாக்கின்றது.
அதைப் போன்று நீங்கள் எந்த வேலையாகச் செல்வதாக இருந்தாலும், மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து
பழகிக் கொள்ளுங்கள்.
அப்படி நீங்கள் வளர்த்துக் கொள்ளும் இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவு
படுத்தி அந்த சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று மகரிஷிகளின்
அருள் சக்தியும், விளைகின்றது.
கோழி தான்
இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள்
அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால்,
இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த
நாளங்களில் கிளம்பும்.
3. உடலில் உருவான அணுக்கருவை உயிர் எப்படி வளர்க்கின்றது?
அப்பொழுது, நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி, காற்றில் கலந்துள்ள
அருள்மகரிஷிகளின்
அருள் உணர்வுகளை
கண்கள் வழியும்,
காதுகள் வழியும்,
உடல் வழியும்,
நம் சுவாசம் வழியும் சுவாசிக்கச் செய்து
நமது உடலுக்குள்
பரவச் செய்து,
அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.
நாம் அருள் மகரிஷிகள்
காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி
பெற்று பின், நம்முடைய நினைவாற்றல் அகஸ்திய மாமகரிஷி சென்ற பாதையில் செல்லும்.