இருளில் இருக்கும் பொருள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், வெளிச்சத்தில் இந்தெந்த பொருள் இருக்கிறது என்று
அறிகின்றோம். இது போன்று,
அறிவின் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி,
ஒன்றை அறியச் செய்யும் ஆற்றல்
நமது ஆறாவது அறிவிற்கு உண்டு, “கார்த்திகேயா”
நமது உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை கார்த்திகேயா என்று ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். அது என்ன செய்கின்றது? இது நன்மை, இது தீமை என்ற நிலைகளை அறியச் செய்கின்றது.
தீமைகள்
புகாத நிலைகள் கொண்டு, நாம் தடுக்கும் நிலை வரப்படும் பொழுது “சேனாதிபதி” என்றும், இந்த உடலைப் பாதுகாக்கும் சக்தி பெற்றது என்றும், ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
உயிரின் நிலையைக் காட்டப்படும்போது “திருவண்ணாமலை”.
நாம் அறிவின் தன்மையாக,
ஒளியின் சுடரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்,
கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்துக் காண்பித்தார்கள்.
உயிரின் ஒளியலைகள் பிரகாசிக்கப்படும்போது அந்த உணர்வின் தன்மை ஒளியாக
இருக்கின்றது. திருவண்ணாமலை
என்னும் பொழுது,
இந்த உடலான “திரு” வுக்குள்
உயர்ந்த நிலைகள்
கொண்டு,
உயிர் ஒளியாக
நின்று இயக்கும் இடம்
திருஅண்ணாமலை என்று காண்பிக்கப்படுகின்றது.
ஆகவே, நமக்குள் உள்ள உயிரின் ஒளியின் உணர்வின் தன்மையைப் பரப்பி, இருளை நீக்கி, மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் எண்ணங்களை தனக்குள் கொண்டு வரவேண்டும், என்பதுதான் ஞானிகள்
காண்பித்தது.
நாம் நமது
நண்பர்களிடத்திலோ, மற்றவர்களிடத்திலோ பகைமை கொண்டிருந்தால், பகைமை மறைய
வேண்டும், அனைவரும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அனைவரும்
பொருள் காணும் நிலை பெறவேண்டும்,
எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்
நீங்கவேண்டும்,
எங்களுக்குள் மகரிஷிகளின்
அருள் ஒளி பெருக வேண்டும்,
எங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் இருள் நீங்க வேண்டும்,
மெய்பொருளின்
தன்மை நாங்கள் பெறவேண்டும்
என்று இதன்
வழி தொடர்கொண்டு
இந்த ஜோதிச்
சுடரை ஏற்றினால்,
அது
கார்த்திகை என்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு சேனாதிபதியாக, நமது அறிவு நம்மைப்
பாதுகாப்பான நிலைகளில் இயக்கும்.