தியானம் என்பது எது?
கெட்டது நமக்குள் சேரவிடாது,
"வைராக்கியமான நிலைகள்" பெறவேண்டும்,
இதுதான் தியானம்.
நமக்குள் தீயது சேராது தடுக்கும் “அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு” நாம் தியானமிருக்க வேண்டும்.
பக்தியில் என்ன செய்கிறோம்? பக்தி
என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள்.
ஆனால், தியானம் என்பது, “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது. அதாவது,
உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு
நமக்குள் நல்லதைக் காக்கச்
செய்வது.
பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கோடி இன்னல்களிலிருந்து விடுபடவேண்டும், விடுபடவேண்டும் என்ற நிலையில் நல்ல சக்திகளைச் சேர்த்து, சேர்த்துத்தான் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த உடலாக இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.
இப்பொழுது நாம் சந்திக்கும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட,
விண் சென்ற அந்த ஞானிகளின் அருள் சக்திகளை
நமக்குள் சேர்க்கச் சேர்க்க,
நாம் அந்த ஒளி உடல் பெறலாம்
இதுதான் மனிதன் அடைய வேண்டிய கடைசி நிலை.
விண் சென்ற அந்த ஞானிகளின் அருள் சக்திகளை
நமக்குள் சேர்க்கச் சேர்க்க,
நாம் அந்த ஒளி உடல் பெறலாம்
இதுதான் மனிதன் அடைய வேண்டிய கடைசி நிலை.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அதற்குத்தான் உங்களைத் தியானிக்கச் சொல்கின்றோம். ஞானிகள் உணர்த்திய அந்தப் பேருண்மைகளைத்தான் யாம் சொல்லி வருகின்றோம். எமது அருளாசிகள்.